2026-2027ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளிநாட்டவர்கள் மற்றும் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இந்தியாவுக்கு வெளியே உள்ள நாட்டில் வேலை செய்பவர்கள், தொழில் நடத்துபவர்கள், நீண்ட காலம் இந்தியாவுக்கு வெளியே வசிக்கும் இந்தியர்கள், இந்தியாவை விட்டு ஓர் நிதியாண்டில் 183 நாட்களுக்கு மேல் வசிப்பவர்கள் PROI (Individual Persons Resident outside India) என அழைக்கபப்டுகின்றனர். இவர்கள் இந்திய பங்குச்சந்தையில் முதலீடு செய்வது எளிமையாக்கப்பட உள்ளது.

இப்படி இந்தியாவுக்கு வெளியே வசிக்கும் தனிநபர்கள் இந்தியாவில் ஈக்விட்டி பங்குகள் அதாவது தேசிய பங்குச்சந்தை மற்றும் மும்பை பங்குச்சந்தைகளில் பட்டியலிடப்பட்ட இந்திய நிறுவனங்களில் முதலீடு செய்வது , பங்குகளை வாங்குவது எளிமையாக்கப்பட்டுள்ளது.
Portfolio Investment Scheme எனப்படும் திட்டத்தின் மூலம் இவர்கள் இந்திய பங்குச்சந்தைகளில் முதலீடு செய்ய அனுமதிக்கப்படும் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் மூலம் இவர்கள் சட்டப்பூர்வமாக இந்திய பங்குச்சந்தைகளில் பங்குகளை வாங்க முடியும். இது ஆர்பிஐ மூலம் நிர்வகிக்கப்படும் ஒரு திட்டம்.
இந்திய பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனத்தில் இவர்கள் அதிகபட்சமாக 5% பங்குகளை மட்டுமே வைத்திருக்க முடியும். தற்போது அந்த வரம்பினை அமைச்சர் நிர்மலா சீதாராமன் 10% ஆக உயர்த்தியுள்ளார்.
இதன் மூலம் அதிக வெளிநாட்டு முதலீடுகள் இந்திய பங்குச்சந்தைகளை நோக்கு வரும். பங்குகள் வாங்குவது விற்பனை செய்வது அதிகரிக்கும். அதாவது இந்தியாவுக்கு வெளியே வாழும் நபர்கள், இந்திய பங்குச் சந்தையில் உள்ள நிறுவனங்களில் முன்பைவிட இரட்டிப்பு அளவு முதலீடு செய்ய அரசு அனுமதி வழங்குகிறது.
ஏற்கனவே வெளிநாட்டு முதலீடுகள் வெளியேறுவது தான் இந்திய பங்குச்சந்தைக்கு பெரிய தலைவலியாக உள்ளது. இந்த அறிவிப்பு அந்த பிரச்சினையை சரி செய்து வெளிநாட்டு முதலீடுகளை அதிகரிக்க செய்யும் என நம்பப்படுகிறது. வெளிநாட்டு நிறுவனங்களாக இல்லாமல் தனிநபர்களே இனி இரட்டிப்பு முதலீடுகளை மேற்கொள்ள முடியும் என்பதால் வெளிநாட்டு நிறுவன முதலீடுகளை அதிகம் நம்பி இருக்க வேண்டியது குறையும்.


Click it and Unblock the Notifications