டெல்லி: 2024-25ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் அறிவிப்பில், நாட்டின் உட்கட்டமைப்பு துறைக்கான மூலதனச் செலவு இலக்கை இடைக்கால பட்ஜெட் அறிக்கையில் அறிவித்த ரூ.11.11 லட்சம் கோடியை மோடி அரசு தொடர்ந்து தக்கவைக்க முடிவு செய்திருப்பதாக மத்திய நிதியமைச்சர் அறிவித்தார். இது இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 3.4 சதவீதமாகும். இதன் மூலம் உட்கட்டமைப்பு துறைக்கான நிதி ஆதரவை வலுப்படுத்த அரசு உறுதி கொண்டுள்ளது.
இதன் மூலம் நாட்டின் உள்கட்டமைப்புக்கான இன்ஜின் தொடர்ந்து வளர்ச்சி அடைய உள்ளது, இதன் மூலம் பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு முதலீட்டு கொள்கை தொடர்ந்து பலன் அளிக்க உள்ளது. இதேவேளையில் நடுத்தர மக்களின் நலனை மேம்படுத்துவதில் 3 முக்கிய திட்டத்தை அறிவித்துள்ளார்.

உட்கட்டமைப்பு மூலதனம்
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது பட்ஜெட் உரையில், "உட்கட்டமைப்பு துறையை வலுப்படுத்துவதற்கான நிதி ஆதரவை தொடர்ந்து வழங்குவதில் அரசு உறுதி பூண்டுள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு, இந்த ஆண்டு மூலதனச் செலவுக்காக (Capital Expenditure) ரூ.11.11 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது" என்று குறிப்பிட்டார்.
கடந்த ஆண்டுகளை ஒப்பிடும் போது, உட்கட்டமைப்பு துறைக்கான அரசின் நிதி ஒதுக்கீடு தொடர்ந்து அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது. இது பொருளாதார வளர்ச்சியில் உட்கட்டமைப்பு துறையின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது.
பிரதான் ஆவாஸ் யோஜனா
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பிரதான் ஆவாஸ் யோஜனா (PM Awas Yojana) திட்டத்தின் கீழ், நகர்ப்புற ஏழைகள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் வீட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் சுமார் ரூ.10 லட்சம் கோடி அளவிலான நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று நிதி அமைச்சர் அறிவித்தார்.
இந்தத் திட்டத்தின் 'நகர்ப்புற 2.0’ (Urban 2.0) என்ற புதிய கட்டம் மூலம், வீடு இல்லாத ஏழை, நடுத்தர குடும்பங்களுக்கு வீடுகள் வழங்குவதில் மத்திய அரசு கவனம் செலுத்தப்படும்.
பழங்குடி மக்கள் நலன்
இதை தொடர்ந்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பழங்குடி மக்களின் சமூக, பொருளாதார நிலையை உயர்த்துவதற்காக "பிரதம மந்திரி ஜனஜாதியா உன்னத கிராம் அபிஹியான்" (Pradhan Mantri Janjatiya Unnat Gram Abhiyan) என்ற புதிய திட்டத்தைத் தொடங்க உள்ளதாக அறிவித்தார்.
"இந்த திட்டத்தின் மூலம், பழங்குடி மக்கள் அதிகம் வசிக்கும் கிராமங்கள் மற்றும் மாவட்டங்களில் பழங்குடி குடும்பங்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளும் கிடைக்கச் செய்யப்படும். இதன் மூலம், 63,000 கிராமங்களைச் சேர்ந்த 5 கோடி பழங்குடி மக்கள் பயனடைவார்கள் என்று அவர் மேலும் கூறினார்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications