இடைக்காலப் பட்ஜெட் அறிக்கைக்கான டிஜிட்டல் பிரதிகள் நாடாளுமன்றத்துக்கு வந்துள்ளன, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆறாவது முறையாகப் பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்கிறார்.
மேலும் 2021-2022 யூனியன் பட்ஜெட் முதல் முறையாக டிஜிட்டல் முறையில் சமர்ப்பிக்கப்பட்டதில் இருந்து, 4வது முறையாக இன்றும் டிஜிட்டல் முறையில் பட்ஜெட் அறிக்கையைத் தாக்கல் செய்ய உள்ளார்.

இந்த நிலையில் பேப்பர் வடிவிலான பட்ஜெட் அறிக்கையும் தேவைப்படுவோருக்காக விநியோகிக்கப் பட்ஜெட் அறிக்கை நகல் மற்றும் பிற பட்ஜெட் ஆவணங்கள் நாடாளுமன்றத்திற்குக் கொண்டு வரப்பட்ட வீடியோ தான் இது.
இன்றைய பட்ஜெட்டில் முக்கிய டார்கெட்டாக இருக்கப்போவது Nari-shakti எனப்படும் பெண்களுக்கான முன்னுரிமை அளிக்கும் திட்டம். இந்தத் திட்டத்திற்குக் கீழ் பிஎம்-கிசான் திட்டத்தின் மூலம் வழங்கப்படும் பண உதவியைக் குறிப்பாகப் பெண் விவசாயிகளுக்கு ரூ.12,000 ஆக அதிகரிக்க அரசாங்கத்திடம் ஒரு திட்டம் உள்ளது.
ஒட்டுமொத்த விவசாய மக்களில் பெண்கள் 60 சதவீதமாக இருந்தாலும், அவர்களின் நில உடைமை 13 சதவீதத்திற்கும் குறைவாகவே உள்ளது என அரசின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. தற்போது பிஎம்-கிசான் திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு வருடம் 6000 ரூபாய் வழங்கப்படுகிறது.
இதைத்தொடர்ந்து இந்த இடைக்காலப் பட்ஜெட் கூட்டத்தில் பாதுகாப்புத் துறைக்கான பட்ஜெட் ஒதுக்கீடு முக்கியத்துவம் பெற்று வருகிறது. உலகில் பல நாடுகள் மத்தியில் போர் வெடித்திருக்கும் வேளையில் இந்தியாவின் டிபென்ஸ் பட்ஜெட் முக்கியமானதாகும்.
டிபென்ஸ் பட்ஜெட் முழுப் பட்ஜெட்டில் விரிவாகக் கொடுக்கப்படும் எனக் கூறப்பட்டாலும், ஏற்கனவே இத்துறை திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு முக்கியத்துவம் பெறலாம். கடந்த ஆண்டு டிபென்ஸ் பட்ஜெட் முந்தைய ஆண்டை காட்டிலும் 13.8 சதவீதம் அதிகரித்தது குறிப்பிடத்தக்கது.
மத்திய அரசு நடப்பு நிதியாண்டுக்கு மூலதனச் செலவினத்திற்காக எப்போதும் இல்லாமல் அதிகப்படியான சுமார் 10 லட்சம் கோடி ரூபாய் என்ற பெரும் தொகையை ஒதுக்கீடு செய்தது. மூலதனச் செலவின தொகை கடந்த 4 வருடமாக ஒவ்வொரு ஆண்டும் 30 சதவீதம் அதிகரித்து வருகிறது.
இந்த அளவீடு தொடர்ந்தால் மத்திய அரசு 2024-25 ஆம் நிதியாண்டில் 13 முதல் 14 லட்சம் கோடி ரூபாய் அளவிலான நிதியை ஒதுக்கீடு செய்ய வாய்ப்புகள் உள்ளது. ஆனால் சந்தை கணிப்பின் படி இந்த ஆண்டு 10.2 லட்சம் கோடி ரூபாய் அளவிலான நிதியை ஒதுக்கீடு செய்யும் எனக் கணிக்கப்பட்டு உள்ளது.


Click it and Unblock the Notifications