பட்ஜெட் 2024: NRI-களின் எதிர்பார்ப்பு என்ன..? ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்ய பெஸ்ட் டைம்..!!

அண்மைக்காலமாக வெளிநாடு வாழ் இந்தியர்கள் இந்தியாவில் ரியல் எஸ்டேட் முதலீடுகளை மேற்கொள்வது அதிகரித்து வருகிறது. இதனை ஊக்குவிக்க அரசு பல்வேறு கொள்கை மாற்றங்களை அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கையும் ஒருபுறம் எழுந்துள்ளது.

நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூடிய விரைவில் 2024- 25 ஆம் ஆண்டுக்கான முழு நீள பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். இந்த நிலையில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் இந்த பட்ஜெட்டில் என்னென்ன எதிர்பார்க்கிறார்கள் என்பது குறித்து அஜ்மீரா ரியாலிட்டி நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியான நிதின் பாஷி எக்னாமிக் டைம்ஸ் இதழுக்கு பேட்டி அளித்துள்ளார்.

பட்ஜெட் 2024: NRI-களின் எதிர்பார்ப்பு என்ன..? ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்ய பெஸ்ட் டைம்..!!

இந்திய ரியல் எஸ்டேட்டில் வெளிநாடு வாழ் இந்தியர்களின் ஆர்வம் அதிகரித்திருக்கிறது. இது இந்திய பொருளாதாரத்திற்கும் ஒரு மிகப்பெரிய ஊக்குவிப்பாக இருக்கும் எனவே அரசு என்ஆர்ஐ முதலீடுகளை அதிகரிக்கும் விதமாக கொள்கைகள் மற்றும் சீர்திருத்தங்களை கொண்டு வர வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார். இந்திய ரியல் எஸ்டேட் துறை மீது வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான நம்பிக்கை அதிகரித்ததற்கு மிக முக்கிய காரணம் ரியல் எஸ்டேட் ரெகுலேட்டரி அத்தாரிட்டி என கூறுகிறார்.

ஏற்கனவே அரசுகொண்டு வந்துள்ள சீர்த்திருத்தங்களால் முதலீடுகளில் வெளிப்படைத்தன்மை அதிகரித்துள்ளது, இதுவும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் இந்தியாவில் நம்பி முதலீடு செய்வதை ஊக்குவிக்கிறது என தெரிவித்துள்ளார். எனவே ரியல் எஸ்டேட்டில் என் ஆர் ஐ முதலீடுகளுக்கு விருப்பமான இடமாக தனது நிலையை மேலும் உறுதிப்படுத்த இந்தியா சில குறிப்பிட்ட ஒழுங்குமுறை சிக்கல்களை சரி செய்ய வேண்டும் என இவர் கூறுகிறார்.

நிதி உள்கட்டமைப்புகளை இன்னும் மேம்படுத்த வேண்டும், வரி விதிப்பு செயல்முறைகளை எளிதாக்க வேண்டும், டிஜிட்டல் பரிமாற்றங்கள் மற்றும் புதுமையான தொழில்நுட்பம் சார்ந்த சொத்துக்களுக்கான தீர்வுகளை நோக்கி செல்ல வேண்டும் என கோருகிறார்.

இந்த மாற்றங்களை கொண்டு வந்தால், இன்னும் அதிகமாக வெளிநாடு வாழ் இந்தியர்களின் முதலீடுகளை ஈர்க்க முடியும் என தெரிவித்துள்ளார். இது இந்திய பொருளாதாரத்திற்கும் மிகப்பெரிய நன்மையை வழங்கும் என அவர் தெரிவிக்கிறார். ஆய்வுகளின் அடிப்படையில் பார்க்கும்போது இந்திய ரியல் எஸ்டேட் துறையில் வெளிநாடு வாழ் இந்தியர்களின் முதலீடுகள் மொத்த சந்தை பங்கில் 20 சதவீதமாக உயரும் என எதிர்பார்ப்பதாகவும், குறிப்பாக வீட்டு சொத்துகளை வாங்குவது அதிகரிக்கும் என்றும் கூறுகிறார்.

இந்தியாவில் ரியல் எஸ்டேட் முதலீடு வளர்ந்து வரக் கூடியது மற்றும் தற்போது அதில் கொண்டு வரப்பட்டுள்ள வெளிப்படை தன்மை ஆகியவை வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு ஒரு சாதகமான முதலீட்டு வாய்ப்பினை வழங்குகின்றன என்கிறார். மேலும் இந்தியாவில் சொத்து வாங்குவதை ஒரு லாபகரமான முதலீடாக அவர்கள் பார்க்கிறார்கள் என அவர் கூறுகிறார் . வரும் காலங்களில் வெளிநாடு வாழும் இந்தியர்களின் முதலீடுகள் அதிகரிக்கும் என்ற ஒரு கணிப்பையும் வெளியிட்டு இருக்கிறார்.

Story written by: Devika

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+