சென்னை: 2024ஆம் ஆண்டிற்கான மத்திய அரசின் பட்ஜெட் விரைவில் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், பங்குச் சந்தை முதலீட்டாளர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். பட்ஜெட் அறிவிப்புகள் முதலீடுகளைப் பாதிக்கும் என்பதால் இந்த எதிர்பார்ப்பு இயல்பானது. இன்றைய வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 738.81 புள்ளிகள் சரிந்து 80,604.65 புள்ளிகளை எட்டியுள்ளது. இதன் காரணமாக, ஒரே நாளில் இந்தியப் பங்குச்சந்தையில் முதலீட்டாளர்கள் சுமார் 8 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக இழப்பைச் சந்தித்தனர்.
இந்த சரிவு, பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் நேரத்தில் ஏற்படும் இயல்பான சரிவாகப் பார்க்கப்படுகிறது. பொதுவாக பட்ஜெட் அறிவிக்கும் முன்பு பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் தங்களது பங்கு முதலீட்டிலிருந்து லாபம் பார்க்கும் விதமாக, உயர்மட்டத்தை எட்டிய பங்குகள், குறைவான லாபத்தைத் தரும் பங்குகளை விற்பனை செய்து லாபத்தைப் பார்ப்பது வழக்கம்.

பங்கு தரகு நிறுவனமான எலாரா செக்யூரிட்டீஸ், பட்ஜெட் அறிவிப்பில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிக்கக்கூடிய சமூக பாதுகாப்பு திட்டங்களைப் பங்குச்சந்தை ஏற்கனவே கணித்து விட்டதாகத் தெரிவித்துள்ளது.
அதாவது, "பட்ஜெட் பெரிதும் ஏமாற்றமளிக்காவிட்டால், அதாவது மூலதன ஆதாய வரி விகிதத்தை உயர்த்துவது அல்லது அதிரடியான சீர்திருத்தங்களை அறிவிப்பது போன்றவை நடக்காவிட்டால், இனி வரும் காலங்களில் பங்குச் சந்தையின் போக்கு நிறுவனங்களின் லாப ஈட்டும் வளர்ச்சியையே சார்ந்திருக்கும்" என்று எலாரா செக்யூரிட்டீஸ் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் பங்குச் சந்தையையும், பங்குச்சந்தை முதலீட்டாளர்களையும் உற்சாகப்படுத்தும் மூன்று விஷயங்களை எலாரா செக்யூரிட்டீஸ் பட்டியலிட்டு உள்ளது. இதுகுறித்து எலாரா செக்யூரிட்டீஸ் கூறுகையில், பங்குச் சந்தையின் நம்பிக்கையை அதிகரிப்பதற்கு, 2024ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் மூன்று முக்கிய விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும் அவை:
நிதி நிலைமை வலுப்படுத்துதல் (Fiscal Consolidation): 2026ஆம் ஆண்டிற்கான நிதி நிலைமை வலுப்படுத்தும் திட்டத்தை அரசு பின்பற்றுவது கடன் மதிப்பீட்டிற்கு (credit rating) சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும். இதன் காரணமாக, வட்டி விகிதங்களால் பாதிக்கப்படும் துறைகளான ஆட்டோமொபைல், வங்கிகள், தகவல் தொழில்நுட்பம் மற்றும் மருந்து நிறுவனங்கள் ஆகியவை பயன்பெறும்.
நுகர்வோர் செலவை அதிகரிப்பு (Consumption Boost): கிராமப்புற வருமானம், ஊதியங்கள் மற்றும் நுகர்வோர் செலவுகளை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டால், முதலில் சில்லறை விற்பனை நிறுவனங்கள் மற்றும் குறைந்த விலை உபயோகப் பொருட்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் பயன்பெறும். இதன் தொடர்ச்சியாக, பின்னர் வரும் காலங்களில் FMCG நிறுவனங்கள் பயன்பெறும்.
மூலதனச் செலவு அதிகரிப்பு (Capex Spending): இந்தியப் பொருளாதார வளர்ச்சிக்குத் தேவையான துறைகளில் டார்கெட் வைத்துச் செய்யப்படும் மூலதனச் செலவுகளைப் பங்குச் சந்தை வரவேற்கும். விண்வெளி மற்றும் பாதுகாப்புத் துறை, மூலதன பொருட்கள் தயாரிக்கும் துறைகள் போன்றவை தொடர்ந்து முதலீட்டாளர்களைக் கவரும் என்றாலும், இந்த துறைகளில் தற்போது அதிக மதிப்பு கொண்டு இருப்பதால் கூடுதல் மதிப்பீட்டைப் பெறுவது கடனம் என தெரிவித்துள்ளது.
More From GoodReturns

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?



Click it and Unblock the Notifications