எலக்ட்ரிக் வாகனங்களுக்கு மானிய தொகை குறைப்பு.. மத்திய அரசு சொல்வது என்ன..?

மத்திய அரசு மின்சார வாகன (EV) உற்பத்தியை ஊக்குவிப்பதற்கான திட்டமான "Faster Adoption of Manufacturing of Electric Vehicles in India - FAME" திட்டத்திற்கு இந்த ஆண்டு மத்திய அரசு நிதியை குறைத்து ஒதுக்கீடு செய்துள்ளது. 2024 முதல் 2025-ஆம் நிதியாண்டிற்கு FAME திட்டத்திற்கான ஒதுக்கீடு ரூ.2,671 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது. இது முந்தைய நிதியாண்டின் ஒதுக்கீடான ரூ.4,807 கோடியை விட 44% குறைவு.

இந்த FAME திட்டத்தின் கீழ் EV வாகனங்களுக்கு மானியம் வழங்கப்படுகிறது. இதன் மூலம் விற்பனை அதிகரிக்கும். இதனால் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மேம்படும். பெட்ரோல் டீசல் வாகனங்களில் இருந்து வெளியேறும் நச்சுக்காற்று குறையும் என்பதால் இது போன்ற திட்டங்களுக்கு அரசு ஆதரவளித்து வந்தது.

 எலக்ட்ரிக் வாகனங்களுக்கு மானிய தொகை குறைப்பு.. மத்திய அரசு சொல்வது என்ன..?


ஆனால் இந்த முறை இதற்கு மாறாக, தனியார் வாகன உற்பத்தியாளர்களுக்கான உற்பத்தி இணைப்பு ஊக்கத்தொகை (PLI) திட்டத்திற்கான ஒதுக்கீடு ரூ.3,500 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த நிதியாண்டில் இத்திட்டத்திற்கு ரூ. 600 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டது.

மின்சார வாகன உற்பத்தியில் உள்ளூர்மயமாக்கலை கார் உற்பத்தியாளர்கள் அதிகரித்து வந்தாலும், பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கும் மின்சார வாகனங்களுக்கும் இடையிலான விலை வித்தியாசம் இன்னும் 15 முதல் 20% வரை உள்ளது.

கடந்த நிதியாண்டில் EV வாகனங்களின் விற்பனையை ஊக்குவிக்கும் வகையில் FAME திட்டத்திற்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டாலும், இவி வாகன பயன்பாடு 15 சதவீதமாகத் தான் இருக்கிறது. அதுவும் இவி பாசஞ்சர் கார்களுக்கு இன்னும் குறைவாக 2 சதவீதமாக உள்ளது. இதன் காரணமாக உற்பத்தி தடைபட்டுள்ளது.

எனவே, உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கும் வகையில் இந்த பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் மின்சார இருசக்கர வாகனங்களின் பேட்டரிக்கு வழங்கப்படும் மானியம் குறைக்கப்பட்டது. ஒரு வருடத்திற்கு முன்பு ரூ.15,000 ஆக இருந்த மானியம் தற்போது ரூ.5,000 ஆக குறைக்கப்பட்டுள்ளது.

இதன் விளைவாக, 2024 ஜூன் காலாண்டில் இருசக்கர மின்சார வாகனங்களின் பதிவு 27% குறைந்து 2,22,267 யூனிட்டுகளாக குறைந்துள்ளது. இது 2024 மார்ச் காலாண்டில் 3,04,918 யூனிட்டுகளாக இருந்தது. மார்ச் 2024 இல் பதிவு எண்ணிக்கை 1,40,167 ஆக உயர்ந்தாலும், அதன்பின்னர் 3 மாதங்களில் மீண்டும் மானியம் குறைக்கப்பட்டதால் 65,000 முதல் 75,000 யூனிட்டுகளுக்கு இடையில் ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது.

தனியார் வாகன உற்பத்தியாளர்கள்: மின்சார வாகனங்களை உற்பத்தி செய்யும் தனியார் நிறுவனங்கள் PLI திட்டத்தின் மூலம் அதிக பலன் பெறும். இதன் மூலம் அவர்களின் உற்பத்தி செலவு குறைந்து, போட்டித்திறன் அதிகரிக்கும்.

FAME திட்டம் மூலம் பயனடைபவர்கள்: FAME திட்டத்தின் கீழ் வழங்கப்படும் மானியத்தால் மின்சார வாகனங்களின் விலை குறைந்து, வாங்குபவர்களுக்கு பயன் கிடைக்கும். ஆனால் தற்போது மானியம் குறைக்கப்பட்டுள்ளதால் இந்த பயன் குறைந்துள்ளது.

சுற்றுச்சூழல்: மின்சார வாகனங்கள் பயன்பாட்டிற்கு வரும்போது, மாசு குறையும். இதனால் சமுதாயத்திற்கும், சுற்றுச்சூழலுக்கும் நன்மை ஏற்படும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+