2024-25 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தங்கம் மற்றும் வெள்ளி மீதான இறக்குமதி வரி 6 சதவீதமாகவும், பிளாட்டினம் இறக்குமதி வரி 6.4 சதவீதமாகவும் குறைக்கப்படும் என்று அறிவித்தார். இதன் வாயிலாகவும், சர்வதேச சந்தையின் எதிரொலி காரணமாகவும் 10 கிராம் 22 கேரட் தங்கம் விலை 150 ரூபாய் குறைந்து 68,100 ரூபாயாக உள்ளது, இதுவே 24 கேரட் தங்கம் விலை 160 ரூபாய் குறைந்து 74,290 ரூபாயாக உள்ளது.
மறுமுனையில் மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் சென்செக்ஸ் குறியீடு 996.53 புள்ளிகள் அல்லது 1.24 சதவீதம் சரிந்து 79,505.55 புள்ளிகளில் மோசமாக வர்த்தகமாகிக் கொண்டு இருக்கும் வேளையில், பங்குச்சந்தையில் இருக்கும் நகைக் கடை நிறுவனங்களின் பங்குகள் தடாலடியாக உயர்ந்துள்ளது.

இதற்கு முக்கியமான காரணம் தங்கம் மற்றும் வெள்ளி மீதான அடிப்படை சுங்க வரியை அரசு 6 சதவீதமாகக் குறைக்கும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதைத் தொடர்ந்து தங்கம் நகைகளின் விலை ரீடைல் சந்தையில் குறையும் வாய்ப்பை பெற்றுள்ளது. இதனால் நகைக் கடைகளின் விற்பனை அதிகரிக்கும் என கணித்து முதலீட்டாளர்கள் நகைக் கடைகளைப் பங்குகளில் முதலீடு செய்து வருகின்றனர்.
இதன் எதிரொலியாக சென்கோ கோல்டு பங்குகள் 6.16 சதவீதம் உயர்ந்து ஒரு பங்கு விலை ரூ.1,000.80 ஆகவும், ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ் 5.49 சதவீதம் உயர்ந்து ரூ.313.90 ஆகவும், பிசி ஜூவல்லர் 5 சதவீதம் உயர்ந்து ரூ.74.16 ஆகவும் வர்த்தகமாகி அதன் அப்பட் சர்கியூட் அளவீட்டைத் தொட்டது.
மேலும், டைட்டன் நிறுவனத்தின் பங்குகள் 3.66 சதவீதம் உயர்ந்து ஒரு பங்கு விலை ரூ.3,371.65 ஆகவும், திரிபோவன்தாஸ் பீம்ஜி ஜவேரி 2.79 சதவீதம் உயர்ந்து ரூ.140.20 ஆகவும், கல்யாண் ஜூவல்லர்ஸ் இந்தியா 1.54 சதவீதம் அதிகரித்து ரூ.537.05 ஆகவும் உள்ளது.
மேலும் தங்கமயில் ஜூவல்லரி பங்குகள் 8.34 சதவீதம் உயர்ந்து ஒரு பங்கு விலை 1910.65 ரூபாயாக உள்ளது. இன்றைய பங்கு உயர்வின் மூலம் ஒவ்வொரு நிறுவனத்தின் சந்தை மதிப்பும் பெரிய அளவில் உயர்ந்துள்ளது பல நூறு கோடிகளை இதன் வாயிலாகச் சம்பாதித்துள்ளது.
இதோடு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஃபெரோ நிக்கல் மற்றும் கொப்புளம் தாமிரம் மீதான அடிப்படை சுங்க வரியை நீக்கவும் அறிவித்துள்ளார். தங்கம், வெள்ளி மற்றும் பிளாட்டினம் மீதான அடிப்படை சுங்க வரி குறைப்பு என்பது இத்துறையில் நீண்டகால கோரிக்கையாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
தற்போது தங்கம் மீதான இறக்குமதி வரி 15 சதவீதமாக உள்ளது. இதைக் குறைப்பதன் மூலம் தங்கத்தின் ரீடைல் விலை குறையும். இதனால் நகை வாங்கும் போது, தற்போதைய அளவை விடவும் குறைவான தொகையைச் செலுத்தினாலே போதுமானது.


Click it and Unblock the Notifications