நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2024ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் பல்வேறு துறைகளுக்கான திட்டங்கள் மற்றும் அறிவிப்புகளை வெளியிட்டார். இந்த பட்ஜெட்ட கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும், நீண்ட காலத்திற்கு மத்திய அரசு நாட்டில் வேலைவாய்ப்பு உருவாக்குவது குறித்தும், திறன் மேம்பாட்டிலும் கவனம் செலுத்தியுள்ளதை பலரும் பாராட்டி வருகின்றனர். இதேவேளையில் வருமான வரி, மூலதன ஆதாய வரி ஆகியவற்றில் செய்யப்பட்ட மாற்றங்கள் கடும் விமர்சனங்களைப் பெற்று வருகிறது.
மேலும் இந்த பட்ஜெட் அறிவிப்புகள் பங்குச் சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தாலும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த பல நிறுவனங்கள் நன்மை அடைய உள்ளது. இந்த நிலையில் பட்ஜெட்டால் பயனடையக்கூடிய சில முக்கிய துறைகளையும் அவற்றைச் சேர்ந்த நிறுவனங்களையும் பார்ப்போம்.

சோலார மின்சார: சோலார மின்சார துறை இந்த பட்ஜெட்டில் பெரிதும் பயனடைந்துள்ளது. 'சூரிய கர் முப்டி பிஜிலி யோஜனா' திட்டத்தின் கீழ், 1 கோடி வீடுகளுக்கு மாதம் 300 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, சோலார் பவர் துறையில் இருக்கும் டாடா பவர் (Tata Power), அதானி கிரீன் எனர்ஜி (Adani Green Energy), மற்றும் வாரீ எனர்ஜீஸ் (Waaree Energies) போன்ற நிறுவனங்கள் பெரும் பயன் பெறும்.
வங்கி: சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கு (MSME) வழங்கப்படும் முத்ரா கடன் வரம்பை ரூ.10 லட்சத்திலிருந்து ரூ.20 லட்சமாக உயர்த்துவதாக நிதி அமைச்சர் பட்ஜெட்டில் அறிவித்தார்.
இந்த கடன் வரம்பு உயர்வு மூலம் முத்ரா கடனில் அதிகப்படியான வர்த்தகத்தைப் பெறு இருக்கும் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (SBI), பேங்க் ஆப் பரோடா (Bank of Baroda), பேங்க் ஆப் இந்தியா (Bank of India), யூனியன் பேங்க் ஆப் இந்தியா (Union Bank of India), மற்றும் ஏயூ ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க் (AU Small Finance Bank) போன்ற வங்கிகளுக்கு சாதகமாக அமையும்.
வேளாண்மை: வேளாண்மைத் துறைக்கு இந்த பட்ஜெட்டில் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அடுத்த 3 ஆண்டுகளில், மாநில அரசுகளுடன் இணைந்து, 6 கோடி விவசாயிகளின் நிலங்களுக்கான பொது உள்கட்டமைப்பை டிஜிட்டல்மயமாக்குவதற்கான திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
மேலும், வேளாண்மை மற்றும் அதைச் சார்ந்த துறைகளுக்கு ரூ.1.52 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் வாயிலாக இத்துறையில் இருக்கும் காவேரி சீட்ஸ் (Kaveri Seeds), தனுகா ஆக்ரிடெக் (Dhanuka Agritech) போன்ற நிறுவனங்கள் பெரு முதலீட்டாளர்களின் கவனத்தைப் பெறும்.
நுகர்வோர் பொருட்கள்: வருமான வரியின் புதிய வரி முறையில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வரி பலகையை மாற்றி, தனிநபர்களுக்கான நிலையான விலக்கு அளவீட்டை ரூ.50,000 லிருந்து ரூ.75,000 ஆக உயர்த்தியுள்ளார். இதன் காரணமாக, தனிநபர்களின் கைக்கு சுமார் ரூ.17,500 வரை சேமிப்பு கிடைக்கும். இதை வைத்து மக்கள் கூடுதலாகச் செலவு செய்வதற்கான வாய்ப்பு உருவாகும்.
இதனால் நுகர்வோர் பொருட்கள் துறையில் இருக்கும் ஹிந்துஸ்தான் யூனிலீவர், ஐடிசி, டாபர், நெஸ்லே, Polyplex, Uflex ஆகிய நிறுவனப் பங்குகளில் முதலீடு பெற அதிகப்படியான வாய்ப்புகள் உள்ளது.
ஹவுசிங்: இந்திய நகரங்களில் இருக்கும் ஏழைகளுக்குச் சொந்த வீட்டுக் கனவை நினைவாக்கும் பொருட்டு மத்திய அரசு தனது பட்ஜெட்டில் PMAY-U திட்டத்திற்கு 10 லட்சம் கோடி ரூபாய் அளவிலான மானிய தொகையை ஒதுக்கீடு செய்துள்ளது. இதன் மூலம் LIC Housing, PNB Housing, HUDCO, Aadhar Housing Finance போன்ற நிறுவனங்கள் அதிகப்படியான வர்த்தகத்தைப் பெற்று லாபம் பெற முடியும்.
ஆட்டோமொபைல்: மத்திய அரசு இந்த பட்ஜெட்டில் கிராமப்புற மேம்பாட்டிற்காக சுமார் 2.66 லட்சம் கோடி ரூபாய் அளவிலான நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது. இது கிராமப்புற மக்களுக்குக் கூடுதல் வருமானம் கொடுப்பது முதல் வேலைவாய்ப்பு உருவாக்குவது வரையில் பல நன்மைகளை அளிக்கக் கூடும்.
இதன் வாயிலாக கிராமப்புறத்தில் இரு சக்கர வாகன விற்பனை அதிகரிக்கக் கூடும் என்பதால் ஹீரோ மோட்டோகார்ப், மாருதி சுசூகி ஆகியவை முதலீட்டாளர்களின் கவனத்தைப் பெறும்.
கேப்பிட்டல் கூட்ஸ்: மத்திய அரசு இந்த பட்ஜெட்டில் மொபைல் போன், மொபைல் போன்களுக்காந PCB அசம்பிளி, மொபைல் சார்ஜர் ஆகியவற்றின் இறக்குமதி மீதான சுங்க வரி 15 சதவீதமாக குறைக்கப்பட்டு உள்ளது. இந்த அறிவிப்பு மொபைல் உற்பத்தி சந்தைக்கு பெரும் நன்மை அளிக்கக் கூடும் என்பதால் இத்துறையில் இருக்கும் Dixon Technologies பங்குகள் உயர்வதற்கான வாய்ப்புகள் அதிகம்.
ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனங்கள்: பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா நகர்ப்புற 2.0 இன் கீழ், 1 கோடி நகர்ப்புற ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களின் வீட்டுத் தேவைகள் ரூ.10 லட்சம் கோடி முதலீட்டில் தீர்க்கப்படும் என பட்ஜெட்டில் வெளியானது.
இந்த அறிவிப்பு மூலம் குறைந்த விலை கொண்ட வீடுகளுக்கு கடன் கொடுக்கும் ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனங்கள் பெரும் பயனாளிகளாக இருக்கலாம். அந்த வகையில் CanFin Homes, Indiabulls Housing Finance, Aadhar housing Finance, Hudco ஆகியவை அதிகப்படியாகப் பலன் பெறும்.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

கத்தார், பஹ்ரைன், UAE, குவைத்தில் குண்டு மழை.. ஈரான் வைத்த டார்கெட்.. அமெரிக்காவுக்கு நெருக்கடி..!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!

தூங்கிட்டிருந்த மிருகத்த தட்டி எழுப்பிட்டாங்க!! நாளை தங்கம், வெள்ளி சந்தை பத்தி எரிய போகுது!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!



Click it and Unblock the Notifications