கடந்த ஜூலை 23-ஆம் தேதியன்று நடந்த முடிந்த பட்ஜெட்டில் தங்க நகைகளுக்கான சுங்கவரி வெகுவாக குறைக்கப்பட்டது. இதன் காரணமாக ஜூலை 23-ஆம் தேதிக்கு பிறகு தங்கம் விலையில் மிகப்பெரிய மாற்றம் இருந்தது. அதன்படி தங்க நகைகள் 300 ரூபாயிலிருந்து 400 ரூபாய் வரை கிராமுக்கு குறைந்தன. இதன் காரணமாக மக்கள் பலரும் நகை கடைகளில் குவிந்ததை நம்மால் பார்க்க முடிந்தது. அதேபோல சில்லறை தங்க நகை வியாபாரிகளும் விலை குறைப்பை பயன்படுத்திக்கொண்டு பயனடைந்தனர்.
எனவே தங்க நகை சில்லறை வியாபாரிகளின் வருவாய் இந்த நிதியாண்டில் 22 சதவீதம் முதல் 25 சதவீதம் வரை அதிகரிக்கும் என்று கிரிசில் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

CRISIL ரேட்டிங்ஸ், 58 தங்க நகை சில்லரை வியாபாரிகளை ஆய்வு செய்தது. இந்த ஆய்வின் முடிவில், பட்ஜெட்டின் ஏற்பட்ட சுங்கவரி குறைப்பு தங்க நகை சில்லரை வியாபாரிகளுக்கு பெரிதும் உதவியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த நிதியாண்டில் இவர்களுடைய லாபமும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பல சில்லறை விற்பனையாளர்கள் தற்போதுள்ள தங்கள் கடைகளை 12-14% வரை விரிவாக்கத் திட்டமிட்டுள்ளனர். குறைந்த தங்க விலை காரணமாக செலவுகள் குறைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இறக்குமதி வரியைக் குறைத்தது, சில்லறை விற்பனையாளர்கள் பண்டிகை மற்றும் திருமண சீசன்களுக்கு தயாராகும் முக்கியமான நேரத்தில் நிகழ்ந்துள்ளது.
தங்கத்தின் விலை குறைந்ததைத் தொடர்ந்து, இந்த நிதியாண்டில் விற்பனை அளவு 3 முதல் 5% வரை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பண்டிகைக் காலம் நெருங்கி வருவதால், தங்கத்தின் விலை கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில் 17 சதவீதம் அதிகரித்துள்ளது. மேலும் இந்த நிதியாண்டின் இரண்டாம் பாதியில் தங்கத்தின் தேவை அதிகரித்து சில்லறை விற்பனையாளர்களின் வருவாய் அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இருப்பினும், தங்கம் விலையில் ஏற்படக்கூடிய ஏற்ற இறக்கம், அரசாங்க விதிமுறைகளில் மாற்றங்கள் மற்றும் நுகர்வோர் அடிப்படையில் மாறுபடும். சுங்க வரி குறைக்கப்பட்டதால், தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.4,500-5,000 வரை குறைந்துள்ளது, இதனால் தங்க நகைகளுக்கான தேவை அதிகரித்துள்ளது.
500-600 அடிப்படை புள்ளிகள் அதிகரித்த வளர்ச்சியை கிரிசில் அறிக்கை தெரிவிக்கிறது . இது முந்தைய ஆண்டின் மதிப்பீடுகளை விட 17 முதல் 19 சதவீதம் வரை அதிகம். இதற்கு ஒரு முக்கிய காரணம் என்று பார்த்தால் விலை குறைவு சில்லறை விற்பனையாளர்களை மட்டுமின்றி மக்களையும் ஈர்த்துள்ளது. இதன் காரணமாக இனி வரும் நாட்களில் டிமாண்ட் அதிகரிக்கலாம்.


Click it and Unblock the Notifications