மத்திய பட்ஜெட்டில் நிதிப் பற்றாக்குறையை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5.8% ஆக குறைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய மற்றும் மாநிலங்கள் அதிக சந்தை கடன்களுக்காக 2.3 லட்சம் கோடி ரூபாய் வரவு செலவுத் திட்டத்தினை திட்டமிடலாம்.
இக்ரா மதிப்பீடுகள், மத்திய அரசின் மொத்த சந்தை கடன்கள் 14.8 லட்சம் கோடி ரூபாயாக அதிகரிக்கலாம். இதே மாநில அரசுகளின் கடன்கள் 1.6 லட்சம் கோடி ரூபாய் அதிகரித்து, 9.6 லட்சம் கோடி ரூபாயாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மொத்த கடன்
2024ம் நிதியாண்டில் மத்திய மற்றும் மாநில அரசுகளின் மொத்த கடன்கள் 24.4 லட்சம் கோடி ரூபாயாக அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது கடந்த 2023ம் நிதியாண்டில் இருந்து 2.3 லட்சம் கோடி ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
2023ம் நிதியாண்டில் மத்திய அரசின் மொத்த கடன்கள் 14.1 லட்சம் கோடி ரூபாயாக அதிகரிக்கலாம். மாநில அரசுகளின் மொத்த கடன் 22.1 லட்சம் கோடி ரூபாயாக இருக்கும் என ஏஜென்சி தெரிவித்துள்ளது.
வளர்ச்சியினை தக்க வைக்க வேண்டும்
இதற்கிடையில் 2024ம் நிதியாண்டில் நிதிப் பற்றாக்குறை மொத்த உள்நாட்டு உற்பத்தியில், 5.8% ஆக குறைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது 2023ல் திட்டமிடப்பட்ட விகிதம் 6.4% ஆக இருந்தது.
தலைமை பொருளாதார நிபுணரும், ஆராய்ச்சி மற்றும் அவுட்ரீச் தலைவருமான அதிதி நாயர், உலகளாவிய வளர்ச்சி மந்த நிலை என்பது மிகப்பெரிய அளவில் இருப்பதால், பட்ஜெட்டில் உள்நாட்டு வளர்ச்சியினை தக்க வைத்துக் கொள்ள கவனம் செலுத்த வேண்டியிருக்கும். அதே நேரம் கடனையும் கட்டுப்படுத்த வேண்டும்.
மத்திய, மாநில அரசுகளின் கடன்
வரவிருக்கும் பட்ஜெட்டில் மத்திய அரசின் CAPEXஐ 8.5 - 9 லட்சம் கோடி ரூபாயாக அதிகரிக்கும். 2023ம் நிதியாண்டில் மத்திய அரசின் மொத்த சந்தைக் கடன் 14.1 லட்சம் கோடி ரூபாயில் இருந்து, 2024ம் நிதியாண்டில் இருந்து, 14.8 லட்சம் கோடி ரூபாயாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதே மாநில அரசின் மொத்த சந்தை கடன் 2023ம் நிதியாண்டில் 8 லட்சம் கோடி ரூபாயாக இருந்த கடன், 1.6 லட்சம் கோடி ரூபாய் அதிகரித்து, 2024ல் 9.6 லட்சம் கோடி ரூபாயாக அதிகரிக்கலாம். கடந்த ஆண்டினை விட இந்த நிதியாண்டில் 15% குறைந்துள்ளது.
வருவாய் பற்றாக்குறை
கடன் அதிகரிப்பு, நிதி பற்றாக்குறைக்கு மத்தியில் மேற்கொண்டு பல்வேறு சவால்களுக்கு மத்தியில், மத்திய அரசின் நிதிப்பற்றாக்குறையானது, 17.5 லட்சம் கோடி ரூபாயில் இருந்து, 17.3 லட்சம் கோடி ரூபாயாக குறையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதே சமயத்தில் மத்திய அரசின் நிதிபற்றாக்குறையானது 10.5 லட்சம் கோடி ரூபாயில் இருந்து, 24ம் நிதியாண்டில் 9.5 லட்சம் கோடி ரூபாயாக குறையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மூலதன செலவினம்
இதே மூலதன செலவினம் 2023ல் 7.5 லட்சம் கோடி ரூபாயில் இருந்து, 2024ம் நிதியாண்டில் 8.5 - 9 லட்சம் கோடி ரூபாயாக அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
எப்படியிருப்பினும் வலுவான நேரடி வரி மற்றும் ஜிஎஸ்டி வசூலும் அதிகமாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
வட்டி செலுத்துதல்
சொத்த செலவினத்தில் வட்டி செலுத்துவதன் பங்கு 24 - 25% ஆக உயர்த்தப்படும். கடன் நிலுவையில் இருப்பது அதிகம் என்ற நிலையில், மேற்கோண்டு கடன் வாங்குவதை அரசு குறைக்கலாம்.


Click it and Unblock the Notifications