புதன்கிழமை (இன்று) துவங்கவுள்ள நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் முதல் கட்டமாக இரு அவை உறுப்பினர்கள் அடங்கிய கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஆற்றிய உரையுடன் அமர்வு தொடங்கும்.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வியாழக்கிழமை இடைக்காலப் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு புதிய அரசு முழு பட்ஜெட்டை தாக்கல் செய்யும்.

இரு அவை உறுப்பினர்கள் அடங்கிய கூட்டத்திற்கு முன்னதாக, செவ்வாயன்று அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நடத்தியது, அதில் நாடாளுமன்ற விவகார அமைச்சர் பிரகலாத் ஜோஷி, ஜனாதிபதி ஆட்சியின் கீழ் உள்ள ஜம்மு காஷ்மீருக்கான பட்ஜெட்டையும் சீதாராமன் தாக்கல் செய்வார் என்று கூறினார்.
பிப்ரவரி 9 ஆம் தேதி முடிவடையும் பட்ஜெட் கூட்டத்தொடரில் முக்கிய நிகழ்ச்சி நிரல், ஜனாதிபதியின் உரை, இடைக்கால பட்ஜெட் தாக்கல் மற்றும் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் பிரதமர் நரேந்திர மோடியின் உரையுடன் பட்ஜெட் தீர்மானத்தின் மீதான விவாதம் துவங்கும்
மேலும் இந்தப் பட்ஜெட் கூட்டம் சுமுகமாக நடத்துவதை உறுதி செய்யும் வகையில், நாடாளுமன்ற உறுப்பினர்களின் இடைநீக்கத்தைத் திரும்பப் பெறுமாறு இரு அவைகளின் தலைமை அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.
பிப்ரவரி 1 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ள இடைக்காலப் பட்ஜெட் அறிக்கையில் பொருளாதார வளர்ச்சியைத் தொடர்ந்து வளர்ச்சிப் பாதையில் வைக்க உள்கட்டமைப்புத் துறை உட்பட முக்கியமான துறைகளில் அதிகப்படியான மூலதனத்தைச் செலுத்த முன்னுரிமை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மத்திய அரசு நடப்பு நிதியாண்டுக்கான மூலதனச் செலவினத்திற்குச் சுமார் 10 லட்சம் கோடி ரூபாய் என்ற பெரும் தொகையை எப்போதும் இல்லாமல் இம்முறை ஒதுக்கீடு செய்தது. இதன் தொடர்ச்சியாக இந்தப் பட்ஜெட் திட்டத்திலும் பொருளாதாரத்தில் பல மடங்கு வளர்ச்சி வாய்ப்புகளைக் கொண்டிருப்பதால் இதைப் பயன்படுத்திக்கொள்ளவும், தனியார் முதலீட்டை ஈர்க்கும் வகையில், மூலதனச் செலவினங்களுக்காக அதிகப்படியான நிதி ஒதுக்கீடு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications