இந்தியாவில் தற்போது எஸ்யூவி ரக கார்களுக்கான மோகம் அதிகரித்துள்ளது. அதிலும் குறிப்பாக அட்வான்ஸ்டு டிரைவிங் அசிஸ்டன்ட் சிஸ்டம் எனப்படும் (Advanced Driving Assistance System) ADAS அமைப்பினை கொண்ட வாகனங்களும் சந்தையில் வரிசை கட்டி நிற்கின்றன.
ADAS அமைப்பை கொண்ட வாகனங்களுக்கான வரவேற்பு அதிகரித்துள்ளதே இதற்கு காரணம். ஏனெனில் இவை பாதுகாப்பானவை என்ற நம்பிக்கை வாடிக்கையாளர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் இந்தியாவில் விற்பனையாக கூடிய ADAS பொருத்தப்பட்ட டாப் 5 எஸ்யூவி ரக கார்கள் குறித்து நாம் தெரிந்து கொள்ளலாம்..

ஹூண்டாய் வென்யூ (Hyundai Venue): இதில் Level 1 ADAS அமைப்பு இருக்கிறது. SX(O) மாடல் கார்களில் 1 லிட்டர் டர்போ பெட்ரோல் வகையிலும், 1.5 லிட்டர் டீசல் வகையிலும் இது கிடைக்கிறது. இதில் டர்போ பெட்ரோல் வகை காரில் 7-speed dual-clutch automatic மற்றும் 6-speed manual வகை டிரான்ஸ்மிஷன்கள் கிடைக்கின்றன. டீசல் என்ஜின் கார்களில் 6-speed manual gearbox மட்டுமே கிடைக்கிறது.
கியா சோனட் (Kia Sonet) : ஹூண்டாயை போலவே இந்த காரிலும் Level 1 ADAS அமைப்பு பொருத்தப்பட்டுள்ளது. GTX Plus and X Line வகை கார்களில் இந்த பாதுகாப்பு அமைப்பு கிடைக்கிறது. 1லிட்டர் பெட்ரோல் என்ஜின் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் என இரண்டு வகையிலும் கிடைக்கிறது.
ஹோண்டா எலிவேட் (Honda Elevate): தற்போது சந்தையில் விற்பனையாக கூட ADAS பொருத்தப்பட்ட மிகச்சிறந்த எஸ்யூவி மாடல் கார் இது. கடந்த ஆண்டு செப்டம்பரில் இந்த கார் அறிமுகம் செய்யப்பட்டது. இதில் உள்ள ZX வகை காரில் மட்டுமே ADAS தொழில்நுட்பம் அமைந்துள்ளது. 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் கொண்ட இந்த கார், 6-speed manual மற்றும் CVT automatic என இரண்டு டிரான்ஸ்மிஷன்களை கொண்டுள்ளது.
எம்ஜி ஆஸ்டர் (MG Astor) : தற்போது சந்தையில் கிடைக்க கூடிய காம்பேக்டான எஸ்யூவி ரக கார் இது என கூறலாம். Savvy Pro வகை காரில் ADAS தொழில்நுட்பம் இடம்பெற்றுள்ளது. இந்த காரில் 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் , 1.3 லிட்டர் டர்போ பெட்ரோல் என இரண்டு வகைகள் கிடைக்கின்றன. இதில் 5-speed MT மற்றும் CVT டிரான்ஸ்மிஷன்கள் உள்ளன.
மகேந்திரா XUV 3XO (Mahindra XUV 3XO) : மகேந்திராவின் இந்த கார் லெவல் 2 ADAS அமைப்பை கொண்டுள்ளது. 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என்ஜினுடன் இந்த மாடல் கார் கிடைக்கிறது.
Story written by: Devika


Click it and Unblock the Notifications