வீட்டுக்கு ஏசி வாங்க போறிங்களா? ரூ.30,000க்கு கீழ் கிடைக்கும் பிராண்டட் AC-களின் பட்டியல் இதோ!..

சென்னை: கோடை காலமே இன்னும் தொடங்கவில்லை ஆனால் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் வெயில் வாட்டி வதைக்க தொடங்கியுள்ளது. வெயிலில் இருந்து பாதுகாக்க மக்கள் நாடுவது ஏசி எனப்படும் ஏர் கண்டிஷ்னர்களை தான்.

அதுவும் பட்ஜெட் விலையில் கிடைத்தால் நன்றாக இருக்கும் என நினைப்பவரா நீங்கள்? உங்களுக்கு தான் இந்த கட்டுரை. ரூ.30,000க்கு கீழ் விற்பனை செய்யப்படும் ஏர் கண்டிஷ்னர்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்..

வீட்டுக்கு ஏசி வாங்க போறிங்களா? ரூ.30,000க்கு கீழ் கிடைக்கும் பிராண்டட் AC-களின் பட்டியல் இதோ!..

1.ப்ளூ ஸ்டார் 0.9 டன் 3 ஸ்டார் 5 இன் 1 ஏசி: ரூ.30,000க்கு கீழ் விற்பனையாகும் ஏசிக்களில் தி ப்ளூ ஸ்டார் 0.9 டன் 3 ஸ்டார் இன்வர்டர் ஸ்பிலிட் ஏசி சிறந்த தேர்வாக இருக்கும். சிறிய அளவிலான அறைகளுக்கு இது உகந்தது. இந்த ஏசியை செயலி அல்லது வாய்ஸ் கமாண்ட் மூலமாக இயக்க முடியும் என்பது தனிச்சிறப்பு. இதற்கு ஸ்டெபலைசர் தேவைப்படாது. 3 ஸ்டார் ரேட்டிங் கொண்ட இந்த ஏசியின் கம்ப்பிரசருக்கு 10 ஆண்டுகள் வாரண்டி கிடைக்கிறது. டர்போ கூல் மற்றும் மின்சாரத்தை சேமிக்கும் திறன் கொண்டது. இதன் விலை ரூ.28,000 ஆகும். 0.9 டன் கெபாசிட்டி கொண்டதால் பெரிய அறைகளுக்கு பொருந்தாது.

2.டைகின் 0.8 டன் 3 ஸ்டார்: 0.8டன் கூலிங் கெபாசிட்டி கொண்டதால் இது சிறிய அறைக்கு மட்டுமே பொருந்தும். அதிக வெப்பம் நிலவும் போது விரைவாக அறையின் வெப்பத்தை குறைக்கும் திறன் கொண்டது. காப்பர் கண்டெண்டர் காயில் இருப்பதால் , மெயிண்டனென்ஸ் அதிகம் தேவைப்படாது என சொல்லப்படுகிறது. மின்சாரத்தை மிச்சப்படுத்தும் திறன் கொண்டது. மொத்தமாக ஒரு வருட வாரண்டி மற்றும் 5 ஆண்டுகள் கம்பிரசர் வாரண்டியுடன் கிடைக்கும் இந்த ஏசி 3 ஸ்டார் ரேட்டிங்கொண்டது. இன்வெர்டர் மாடல்களுடன் ஒப்பிடுகையில் குறைவான வசதிகள் கொண்டது. இதன் விலை ரூ.27,990 ஆகும்.

3.லாய்டு 1.0 டன் 3 ஸ்டார் இன்வெர்ட்டர் ஸ்பிலிட் ஏசி: ரூ.29,990க்கு கிடைக்கும் இந்த ஏசி 3 ஸ்டார் ரேட்டிங் கொண்டது. கூலிங் திறனை 30% முதல் 110% வரை தானாகவே சரிப்படுத்தி கொள்ளும் திறன் கொண்டது. மீடியம் சைஸ் அறைகளுக்கு பொருந்தக் கூடியது. சுத்தமான காற்றை உறுதி செய்யும் பிஎம் 2.5 ஃபில்டர் கொண்டது. இதற்கு ஸ்டெபலைசர் தேவையில்லை மற்றும் டர்போ கூலிங், லோ கேஸ் டிடெக்சன் வசதி கொண்டது. மொத்தமாக ஓராண்டு வாரண்டியும், கம்பிரசருக்கு 10 ஆண்டுகள் வாரண்டியும் கிடைக்கும்.

4.கோத்ரேஜ் 1 டன் 3 ஸ்டார் ஏசி: ரூ.28,990க்கு கிடைக்கும் இந்த ஏசி 1 டன் கெபாசிட்டி கொண்டது என்பதால் மீடியம் சைஸ் அறைகளுக்கும் பயன்படுத்தலாம். மின்சாரத்தை மிச்சப்படுத்துவதோடு 52 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையிலும் திறம்பட செயல்படும் என சொல்லப்படுகிறது.காப்பர் கண்டென்சர் கொண்டிருப்பதால் பெரிய மெயிண்டனென்ஸ் தேவைப்படாது மற்றும் நீண்ட நாள் உழைக்க கூடியது. ஐ-சென்ஸ் எனப்படும் நவீன தொழில்நுட்பம் கொண்டுள்ளது. இதற்கு மொத்தமாக 1 ஆண்டு வாரண்டியும், கம்பிரசருக்கு 10 ஆண்டுகள் வாரண்டியும் கிடைக்கும்.


Story Written by: devika

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+