வெறும் 5 லட்சத்திற்கு காம்பேக்ட் எஸ்யூவி கார்.. மக்களை கவர்ந்த நிசான் மேக்னைட்..! #NissanMagnite

இந்திய ஆட்டோமொபைல் சந்தை கடந்த 3 வருடங்களாகப் பல மாற்றங்களை எதிர்கொண்டு வரும் நிலையில், வர்த்தக ரீதியிலும் பல மாற்றங்களைக் கண்டு வருகிறது.

குறிப்பாக இந்தியச் சந்தையில் புதிதாகக் களமிறங்கிய கியா மோட்டார்ஸ் மற்றும் எம்ஜி மோட்டார்ஸ் ஆகிய நிறுவனங்கள் எதிர்பார்க்காத அளவிற்குச் சிறப்பான வர்த்தகத்தை அடைந்த அதேவேளையில் இந்திய ஆட்டோமொபைல் அறிமுகம் செய்த பல கார்களின் விற்பனை குறைவாக இருந்தது.

இந்த நிலையில் இந்திய ஆட்டோமொபைலின் பெரும் பகுதி வாடிக்கையாளர்களை மகிழ்ச்சி அடையச் செய்யும் வகையில் விலையிலும், வடிவத்திலும், வசதிகளிலும் சிறப்பான காரை அறிமுகம் செய்துள்ளது நிசான்

நிசான் மேக்னைட்

நிசான் மேக்னைட்

இந்தியாவில் கார் வாங்குவோரின் எண்ணிக்கை பெரிய அளவில் அதிகரித்து வரும் நிலையில் கார் வாங்குவோரின் பட்ஜெட் அளவும் குறைவாக உள்ளது. இந்த இரண்டையும் உணர்ந்து நிசான் மோட்டார்ஸ் இந்தியா 5 லட்சம் ரூபாய் துவக்க விலையில் மேக்னைட் என்னும் காம்பேக்ட் எஸ்யூவி காரை அறிமுகம் செய்துள்ளது.

விலை குறைவாக இருக்கும் காரணத்தினால் இந்திய மக்கள் மத்தியில் நிசான் மேக்னைட் கார் மீதான ஈர்ப்பு அதிகரித்தது மட்டுமல்லாமல் விற்பனை எப்போது வரும் என்ற ஆவலும் இருந்தது.

 

காம்பேக்ட் எஸ்யூவி

காம்பேக்ட் எஸ்யூவி

அக்டோபர் மாதம் அறிமுகம் செய்யப்பட்ட இந்த நிசான் மேக்னைட் கார் தற்போது விற்பனை சந்தைக்கு வந்துள்ளது. ஹேட்ச்பேக் காராக அல்லாமல் காம்பேக்ட் எஸ்யூவி வடிவில் இந்தக் கார் வடிவமைக்கப்பட்டு இருப்பதால் இந்தக் காருக்கான வாடிக்கையாளர் பிரிவு மிகவும் அதிகம்.

புதிய நிறுவனங்கள்

புதிய நிறுவனங்கள்

கியா மோட்டார்ஸ் மற்றும் எம்ஜி மோட்டார்ஸ் நிறுவனங்களின் கார்கள் அறிமுகத்திற்குப் பின் இந்திய மக்களின் எதிர்பார்ப்பு பெரிய அளவில் அதிகரித்துள்ளது. கியா மோட்டார்ஸ் மற்றும் எம்ஜி மோட்டார்ஸ் கார்களின் விலை சற்று அதிகமாக இருந்தாலும் கார்களில் தொழில்நுட்ப மேம்பாடுகள் மிகவும் அதிகம். இதனால் மக்கள் அதிகத் தொகை கொடுப்பதை ஏற்றுக்கொள்கிறார்கள்.

கியா மோட்டார்ஸ்

கியா மோட்டார்ஸ்

இதன் வாயிலாகவே கியா மோட்டார் இந்த நவம்பர் மாதம் மட்டும் சுமார் 21,022 கார்களை மொத்த விற்பனை செய்துள்ளது. இதில் புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட கியா சோனட் கார் மட்டும் சுமார் 11,417 கார்கள் விற்பனை சந்தைக்குச் சென்றுள்ளது. இதேபோல் கியா செல்டோஸ் சுமார் 9,205 கார்கள் விற்பனை சந்தைக்குச் சென்றுள்ளது.

கடந்த வரும் இதே காலகட்டத்தில் கியா மோட்டார் செல்டோஸ் கார்களை மட்டுமே வைத்திருந்த நிலையில் சுமார் 11,417 கார்களை விற்பனை செய்திருந்தது.

 

Game Changer கார்

Game Changer கார்

இந்நிலையில் நிசான் மேக்னைட் காரில் இன்றைய நவீன கார்களில் இருக்கும் பெரும்பாலான வசதிகள், தொழில்நுட்பங்கள் இருக்கும் காரணத்தால் இந்தக் கார் இந்திய ஆட்டோமொபைல் துறையில் Game Changer ஆக இருக்கும் எனக் கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+