மாதச் சம்பளம் ரூ.25,000? பட்ஜெட் போடுவது எப்படி? ChatGPT அளித்த சூப்பர் டிப்ஸ்..!!

அன்றாட வாழ்க்கையில், நிதித் திட்டமிடல் என்பது ஒரு சவாலான பணி. ஆனால், தொழில்நுட்பம் சார்ந்த தளங்களின் வருகையால் இப்போதெல்லாம் நிதி திட்டமிடல் மிகவும் வசதியாகிவிட்டது. பலர் தங்கள் பணத்தை புத்திசாலித்தனமாக நிர்வகிக்க OpenAI-ன் ChatGPT போன்ற செயற்கை நுண்ணறிவு (AI) கருவிகளைப் பயன்படுத்துகின்றனர். ஒருவர் அவரவர் தகுதிகளுக்கு ஏற்றார் போல் பணத்தை சேமிப்பதும், செலவு செய்வதுமாய் இருக்கின்றனர். சிலரே பணத்தை அதிகம் சேமிக்கின்றனர். அவர்கள் பல்வேறு வகைகளில் பணத்தை சம்பாதித்தும் வருகின்றனர். மேலும் சிலர் பணத்தை சம்பாதித்தாலும் கையில் வைத்திருக்க முடிவதில்லை. காரணம் சரியான திட்டமிடல் இருக்காது.

முதலீட்டு குறிப்புகள், பண மேலாண்மை மற்றும் நீண்ட கால இலக்குகளைப் புரிந்துகொள்வது போன்ற விஷயங்களில் இந்த AI தளங்கள் அவர்களுக்கு உதவுகின்றன. அந்த வகையில், மாதச் சம்பளம் ரூ.25,000 உள்ள ஒருவருக்கு பட்ஜெட் போட ChatGPT ஒரு சிறப்பான வழியை கொடுத்துள்ளது.

மாதச் சம்பளம் ரூ.25,000? பட்ஜெட் போடுவது எப்படி? ChatGPT அளித்த சூப்பர் டிப்ஸ்..!!

ChatGPT-யின் பட்ஜெட் திட்டம்: ChatGPT-ன் படி, ஒருவர் தங்கள் சேமிப்பை அதிகப்படுத்த 50-30-20 விதியைப் பின்பற்ற வேண்டும். அதாவது, தங்கள் மாதச் சம்பளத்தை மூன்று பகுதிகளாகப் பிரிக்கலாம்.

முதல் ஸ்டெப்: தேவைகளுக்கு 50% (ரூ.12,500): வாடகை, மின்சாரக் கட்டணம், உணவு மற்றும் இ.எம்.ஐ போன்ற அத்தியாவசியச் செலவுகளுக்கு சம்பளத்தின் 50 சதவீதத்தை ஒதுக்க வேண்டும் என்று ChatGPT கூறுகிறது. அதாவது, ரூ.12,500 ஆகும். இந்த முறையைப் பின்பற்றுவதன் மூலம், உங்களின் நிதி நிலைமைக்கு ஏற்ற வாடகை தொகை எவ்வளவு என்பதை நீங்கள் எளிதாக மதிப்பிடலாம். உதாரணமாக, வாடகை உங்கள் மொத்த மாத வருமானத்தில் 30 சதவீதத்தை அதாவது இதில் ரூ.7,500-ஐ தாண்டாமல் இருப்பது நல்லது என AI அறிவுறுத்துகிறது.

இரண்டாவது ஸ்டெப்: விருப்பங்களுக்கு 30% (ரூ.7,500): இதில் சுற்றுலா, ஓடிடி சந்தாக்கள், ஷாப்பிங் அல்லது கேட்ஜெட்களை வாங்குவது போன்ற அத்தியாவசியமற்ற செலவுகளுக்காக உங்கள் வருமானத்தில் சுமார் 30 சதவீதத்தை (ரூ.7,500) ஒதுக்கலாம். உங்கள் செலவுப் பழக்கங்களைக் கண்காணிக்க, ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கும் ஒருமுறை உங்கள் நிதிப் பழக்கங்களை மதிப்பாய்வு செய்ய ChatGPT பரிந்துரைக்கிறது. உங்களின் நிதி ஆரோக்கியத்தை மேலும் மேம்படுத்துவது குறித்த ஆலோசனைகளையும் நீங்கள் AI-யிடம் கேட்கலாம்.

மூன்றாவது ஸ்டெப்: சேமிப்புக்கு 20% (ரூ.5,000): நிதித் திட்டமிடலின் மிக முக்கியமான அம்சம் சேமிப்புதான். அவசரநிலையாக இருந்தாலும் சரி, நீண்ட கால இலக்குகளாக இருந்தாலும் சரி, உங்கள் மாத வருமானத்தில் குறைந்தபட்சம் 20 சதவீதத்தை (ரூ.5,000) சேமிக்க முயற்சிக்க வேண்டும். ChatGPT-யின் படி, ரூ.2,500 மதிப்புள்ள மியூச்சுவல் ஃபண்ட் எஸ்.ஐ.பி-ஐத் தொடங்கி, சம்பளம் அதிகரிக்கும்போது அதற்கான பங்களிப்பை உயர்த்தலாம். கூடுதலாக, அவசர நிதிக்காக ரூ.1,500 ஒதுக்கி, மீதமுள்ள பணத்தை எதிர்பாராத செலவுகளுக்கு வைத்திருக்கலாம் என்றும் இந்த AI தளம் பரிந்துரைக்கிறது.

முக்கியக் குறிப்பு: உங்கள் பணத்தை நிர்வகிப்பதற்கு நிலையான சூத்திரம் எதுவும் இல்லை. அது உங்கள் தனிப்பட்ட நிதித் தேவைகள் மற்றும் இலக்குகளைப் பொறுத்தது. ChatGPT போன்ற AI தளங்கள் ஒரு ஆரம்பத் திட்டத்தைத் தயாரிப்பதில் உதவலாம். ஆனால், செல்வத்தைக் குவிக்க நீண்டகால முதலீட்டு உறுதிப்பாட்டுடன் நிதி ஒழுக்கத்தை கடைபிடிப்பது மிகவும் முக்கியமானது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+