சீனாவை சேர்ந்த ஒரு இளைஞர், தன்னுடைய 20 வயதில் ஆஸ்திரேலியாவுக்கு குடிபெயர்ந்துள்ளார். அங்கு நன்றாக ஓய்வூதியம் பெற வேண்டும் என்றால், ஒருவருக்கு அதிகபட்சமாக ரூ.50 கோடி மதிப்பிலான முதலீட்டு சொத்துக்கள் இருக்க வேண்டும். இல்லையெனில், நடுத்தர வர்க்க வாழ்க்கையை கடந்துபோக முடியாது என்று அவர் தெரிவித்துள்ளார்.
அலெக்ஸ் ஷாங் என்ற இளைஞர் கடந்த 2005ஆம் ஆண்டு சீனாவின் ஷென்யாங் நகரில் இருந்து சிட்னிக்குத் தஞ்சமாக வந்துள்ளார். அவர் பங்குச் சந்தை வர்த்தகத்தில் முதுகலை பட்டம் பெற்றிருந்தார். ஆஸ்திரேலியாவில் அவருடைய தொழில் வாழ்க்கை ஒரு ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் வரவேற்பாளராக தொடங்கியது. பின்னர், கணக்கியல் மற்றும் வணிக மேலாண்மை ஆகிய துறைகளில் முதுகலை பட்டங்கள் பெற்றார்.

44 வயது சொத்து முதலீட்டாளரான அலெக்ஸ் ஷாங், சிட்னியில் தனது ஆரம்ப அப்பார்ட்மெண்ட் முதலீடுகள் பெரிதளவில் வெற்றி தரவில்லை. இதனால், இப்போது நிலம் குறைவாக இருப்பதால் வீட்டுகளை வாங்குவதே அவருடைய இலக்காக மாறிவிட்டது. ஆரம்பத்தில் அப்பார்ட்மெண்ட் வாங்கிய காலத்திலேயே வீடுகளில் முதலீடு செய்திருந்தால், மிகப் பெரிய லாபம் ஈட்டியிருப்பேன் என்று அலெக்ஸ் தெரிவித்துள்ளார். அப்பார்ட்மெண்ட்கள் வாங்குவதை விட்டு விட்டு, எப்போது வீடுகளை வாங்க ஆரம்பித்தேனோ அப்போதில் இருந்து எனக்கு லாபம் தான். பெரிதளவில் நஷ்டமே வந்தது இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
கடந்த 2011ஆம் ஆண்டு கொகரா பகுதியில் ரூ.3.46 கோடி மதிப்புள்ள இரண்டு அறை யூனிட்டுடன் தொடங்கிய அவரது முதலீடு, சிறிய மூலதன லாபம் மட்டுமே கொடுத்தது. ஆனால், அதில் இருக்கும் தவறுகளை புரிந்து கொண்டு தற்போது சிட்னி, பிரிஸ்பேன், பெர்த் மற்றும் மெல்போர்ன் போன்ற நகரங்களில் வீடுகளை வாங்கி வருகிறார்.
மேலும் அவர் கூறுகையில், "நிலம் குறைவாக இருப்பதால், அப்பார்ட்மெண்டுகள் ஒன்றுக்கு மேல் ஒன்று கட்டி அதிக வீடுகளை உருவாக்க முடியும். ஆனால், நிலத்தை அவ்வாறு அதிகரிக்க முடியாது. இருபது வயதில் முதலீடுகளை துவங்கும் போது, முதலில் அதிக மதிப்பும் வளர்ச்சியும் தரும் வீடுகளை வாங்க வேண்டும். அடுத்து அதிக வாடகை வருமானம் தரும் சொத்துக்களை வாங்கி வருமானத்தை மேம்படுத்த வேண்டும்.
முதல் 10 ஆண்டுகளில் அதிக மதிப்புள்ள சொத்துக்களை வாங்கி, அடுத்து 10 ஆண்டுகளில் அதிக வாடகை வருமானம் தரும் சொத்துக்களை வாங்கி, ஓய்வு காலத்தில் சில சொத்துக்களை விற்று கடனை முடிக்க வேண்டும். என்னிடம் எவ்வளவு சொத்துகள், பணம் இருக்கிறது என்பது என்னுடைய தனியுரிமை. இதை வெளியில் சொன்னால், வருமான வரித்துறையும், பிறரும் அதில் பங்குபெற விரும்புவார்கள்" என்று கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், "சில சொத்துகளில் முதலீடு செய்தேன். அதன் பிறகு பணம் பற்றிய கவலை எனக்கு இல்லை. நான் ஆஸ்திரேலியாவின் முக்கிய நகரங்களில் எல்லாம் வாங்கி, விற்றுள்ளேன். ஒரு நகரத்தில் நீண்ட கால வளர்ச்சி இருக்குமா, மக்கள் தொகை அதிகரிக்கிறதா, வேலை வாய்ப்புகள் உள்ளதா என்பதை கருத்தில் கொண்டு தான் முதலீடு செய்வேன். விலை குறைவாக இருக்கிறது என்பதற்காக மட்டும்தான் சொத்தை வாங்க மாட்டேன். அதன் எதிர்கால வளர்ச்சி எனக்குத் தெரிய வேண்டும். எதிர்காலம் இல்லையென்றால் நான் அந்த சொத்தை வாங்க மாட்டேன். சொத்து முதலீட்டில் செல்வந்தராவது, எத்தனை வீடுகள் இருக்கிறது என்பதால் அல்ல, அதன் மதிப்பு எவ்வளவு என்பதை பொறுத்து தான் உள்ளது.
5 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள சொத்துகள் இருந்தால், அதிலிருந்து வரும் வாடகை வருமானத்தை ஆஸ்திரேலிய பங்கு சந்தையில் ETF-களில் முதலீடு செய்தால், வருடத்திற்கு 7% வருமானம் பெற முடியும். நல்ல வீட்டு வாடகை வருமானம் உள்ள சொத்துகளை வைத்திருப்பதும், அதிலிருந்து வரும் பணத்தை ETF-களில் முதலீடு செய்வதும் சிறந்தது" என்று தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக Aus Property Strategy நிறுவனத்தின் நிறுவனர் அலெக்ஸ் ஷாங் கூறுகையில், "ஒருவர் வெறும் சொந்த வீடு மட்டும் வாங்கி அதில் வாழ வேண்டுமென நினைத்தால், அது பெரிய தவறு. ஒரு சாதாரண வாழ்க்கை வாழ வேண்டுமென்ற நோக்கம் இருந்தால், முதலீட்டு சொத்துக்கள் தேவையில்லை. வெறும் வீடு மட்டுமே போதும். இவ்வாறு செய்பவர்கள் அதிக வரி செலுத்தும் நடுத்தர வர்க்கத்தில் நிலைத்திருக்க நேரிடும். வீட்டை வாங்கியவுடன் கடன் எடுக்கும் திறன் முடிவடையும். அடுத்து மற்ற சொத்துக்களை வாங்க முடியாது. இதனால் வாழ்க்கையில் முன்னேற முடியாமல் சிக்கி விடுவார்கள். எனவே, வேலை செய்யும் இடத்தில் வீடு வாடகைக்கு எடுத்து, வேறு இடங்களில் முதலீட்டு சொத்துக்கள் வாங்கும் 'rent-vesting' என்ற வழியை நான் பரிந்துரைக்கிறேன்" என்று அவர் தெரிவித்துள்ளார்.
More From GoodReturns

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!



Click it and Unblock the Notifications