சென்னை: இந்திய ரிசர்வ் வங்கி (RBI), நாணய மதிப்புக் குழு (MPC) கூட்டத்தில் FD டெபாசிட் செய்பவர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டது. அந்த அறிவிப்பின்படி மத்திய வங்கி, வணிக வங்கிகள் (Scheduled Commercial Banks), சிறு நிதி நிறுவனங்கள் (Small Finance Bank) மற்றும் சில வங்கிகள் ஆகியவற்றில், டெபாசிட் செய்வதற்கான வரம்பை உயர்த்தியுள்ளது.
முன்னதாக, வணிக வங்கிகள் மற்றும் சிறு நிதி நிறுவனங்களுக்கான பல்க் டெபாசிட் அடிப்படை வரம்பு ரூ. 2 கோடியாக இருந்தது. RBI செய்தத் திருத்தத்தின் மூலம், புதிய பல்க் டெபாசிட் வரம்பு ரூ.3 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த மாற்றம், கிராமப்புற வங்கிகளை (Regional Rural Banks) தவிர்த்து மற்ற வங்கிகளுக்கு பொருந்தும்.

2019 ஆம் ஆண்டில் வணிக வங்கிகள் மற்றும் சிறு நிதி நிறுவனங்களின் அதிகபட்ச பல்க் டெபாசிட் வரம்பு ரூ. 2 கோடி ஆக இருந்தது. தற்போது அதில் திருத்தம் செய்யப்பட்டு ரூ. 3 கோடியாக அதிகரித்துள்ளது. இதனால் முதலீட்டாளர்கள் ரூ. 3 கோடி மற்றும் அதற்கு மேற்பட்ட தொகையை ஒரே FD-யாக முதலீடு செய்தால் அவை பல்க் டெபாசிட்டாகக் கருதப்படும். ரூ. 3 கோடி ரூபாய்க்கு கீழ், FD இல் முதலீடு செய்தால், அது சில்லறை FD ஆகக் கருதப்படும்.
இந்தியாவின் முன்னணி பேங்குகளில் ரீடைல் FD-களுக்கு வழங்கப்படும் வட்டி விகிதங்களை பார்ப்போம்.
ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்குகளில் கொடுக்கப்படும் 1 ஆண்டுக்கான வட்டி விகிதங்கள்:
1. AU ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க்: 6.50 சதவீதம்.
2. எக்விடாஸ் ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க்: 8.2 சதவீதம்.
3. ESAF ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க்: 6 சதவீதம்.
4. ஜனா ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க்: 8.50 சதவீதம்.
5. நார்த் ஈஸ்ட் ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க்: 8.75 சதவீதம்.
தனியார் துறை வங்கிகளில் கொடுக்கப்படும் 1 ஆண்டுக்கான வட்டி விகிதங்கள்:
1. ஆக்சிஸ் பேங்க்: 6.70 சதவீதம்.
2. பந்தன் பேங்க்: 7.85 சதவீதம்.
3. சிட்டி யூனியன் பேங்க்: 7.00 சதவீதம்.
4. CSB பேங்க்: 5.00 சதவீதம்.
5. DBS பேங்க்: 7.0 சதவீதம்.
பொதுத்துறை வங்கிகளில் கொடுக்கப்படும் 1 ஆண்டுக்கான வட்டி விகிதங்கள்:
1. பேங்க் ஆஃப் பரோடா: 6.85 சதவீதம்.
2. பேங்க் ஆஃப் இந்தியா: 6.8 சதவீதம்.
3. கனரா பேங்க்: 6.85 சதவீதம்.
4. சென்ட்ரல் பேங்க்: ஆஃப் இந்தியா: 6.75 சதவீதம்.
5. இந்தியன் ஓவர்சீஸ் பேங்க்: 6.9 சதவீதம்.
வெளிநாட்டு வங்கிகளில் கொடுக்கப்படும் 1 ஆண்டுக்கான வட்டி விகிதங்கள்:
1. Deutsche பேங்க்: 7.00 சதவீதம்.
2. HSBC பேங்க்: 4.00 சதவீதம்.
3. ஸ்டாண்டர்ட் சார்ட்டர்டு பேங்க்: 7.15 சதவீதம்.


Click it and Unblock the Notifications