இன்றைய காலகட்டத்தில் குழந்தைகள், பெரியோர்கள் என பாரபட்சம் இல்லாமல் விரும்பி உண்ணும் பாஸ்ட்புட் உணவுகளில், பர்கரும், பீட்சாவும் முன்னிலையில் உண்டு.
அப்படி ஒரு ருசிகரமான உணவை தயாரித்து விற்பனை செய்யும், உலகின் முன்னணி பாஸ்ட்புட் நிறுவனம் தான் பர்கர் கிங்.
இந்த நிறுவனம் டிசம்பர் முதல் வாரத்தில் தான் தனது பங்கு விற்பனையை அறிவித்தது. இதனையடுத்து சில வாரங்களுக்கு முன்பு தான் பங்குகளை பட்டியலிட்டது.
பங்கு விலை நிலவரம்
சொல்லப்போனால் நடப்பு ஆண்டில் பங்கு சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களில், குறிப்பிடத்தக்க நிறுவனங்களில் முக்கிய நிறுவனமாக பர்கர் கிங் உள்ளது. ஏனெனில் 92% பிரீமியம் விலையில் பட்டியலிடப்பட்ட நிலையில், முந்தைய நான்கு அமர்வுகளில் சேர்த்து மொத்தம் 265% ஏற்றம் கண்டது. ஆனால் இன்றோடு மூன்று அமர்வுகளாகவே தினசரி 10% மேல் சரிந்து வருகின்றது.
லோவர் சர்க்யூட் ஆன பர்கர் கிங்
இந்த நிலையில் இன்றும் மூன்றாவது நாளாக பர்கர் கிங் நிறுவனத்தின் பங்கு விலையானது, பிஎஸ்இ-யில் 10 சதவீதம் குறைந்து, 145.35 ரூபாயாக குறைந்துள்ளது. இது முந்தைய அமர்வின் முடிவு விலையானது 161..45 ரூபாயாகும். இதே இன்று காலை தொடக்கத்திலேயே 8.33 சதவீத சரிந்து, 148 ரூபாயாகத் தான் தொடங்கியது.
சந்தை மூலதனம் எவ்வளவு?
எனினும் இப்பங்கின் விலையானது ஒரு வாரத்தில் 14% ஏற்றம் கண்டுள்ளது. இதற்கிடையில் பர்கர் கிங்கின் சந்தை மூலதனம் 5,152 கோடி ரூபாயாக பிஎஸ்இ-யில் சரிந்துள்ளது. கடந்த வாரத்தில் வியாழக்கிழமையன்று இந்த பங்கின் விலையானது காலை அமர்வில் 20% ஏற்றம் கண்டு, வரலாற்று உச்சமான 219.15 ரூபாயினை தொட்டது. ஆனால் மதியத்திற்கும் மேல் 10 சதவீதம் வீழ்ச்சி கண்டு, 179.35 ரூபாயாக வீழ்ச்சி கண்டது.
பங்கு வெளியீட்டில் விலை?
கடந்த டிசம்பர் 2ம் தேதி தனது பங்கினை விற்பனை செய்த பர்கர் கிங், 59 - 60 ரூபாய் என்ற நிலையில் வெளியிட்டது. இதன் பிறகு டிசம்பர் 14 அன்று 92.25% பிரீமிய விலையில் பட்டியலிட்டது. சந்தையில் இது தொடக்கத்தில் 115.35 ரூபாயாக வர்த்தகமாக தொடங்கியது. இந்த நிலையில் 4 அமர்வுகளில் மொத்தம் 265% ஏற்றம் கண்டு, அதனையடுத்து தொடர்ந்து சரிவினை கண்டு வரும் பங்கின் விலையானது, அதன் வரலாற்று உச்சத்தில் இருந்து 50 சதவீதத்திற்கு அதிகமான சரிவினைக் கண்டுள்ளது.


Click it and Unblock the Notifications