இந்தியாவின் அதிக பெண்கள் பணிபுரியும் நிறுவனங்கள் எது? எத்தனை பேர் பணி புரிந்து வருகின்றனர். அது எந்த துறை சார்ந்த நிறுவனம்? அந்த நிறுவனத்தின் சந்தை மதிப்பு என்ன? என்பதை ஆக்ஸிஸ் வங்கியின் பர்கண்டி பிரைவேட் "பர்கண்டி பிரைவேட் ஹுருன் இந்தியா 500" என்ற பட்டியல் மூலம் வெளியிட்டுள்ளது.
முன்னதாக இந்தியாவில் அதிக ஊழியர்கள் பணியாற்றும் நிறுவனங்களின் பட்டியலில் முதலிடம் பிடித்த டிசிஎஸ் நிறுவனம் தான், அதிகளவில் பெண்களையும் பட்டியலிட்டுள்ளது.
முதலிடத்தில் டிசிஎஸ்
டாப் 10 பட்டியலில் முதலிடம் பிடித்துள்ள டிசிஎஸ் நிறுவனத்தின் மொத்த ஊழியர்களில் , 35% பெண்கள் இடம் பிடித்துள்ளனர். மொத்தம் 2,10,000 பெண்கள் இடம்பெற்றுள்ளனர். இதன் சந்தை மதிப்பு 11,68,390 கோடி ரூபாயாகும்.
இன்ஃபோசிஸ்
டிசிஎஸ் நிறுவனத்தினை தொடர்ந்து இன்ஃபோசிஸ் நிறுவனம் இடம் பெற்றுள்ளது. இந்த நிறுவனத்தில் 40% பெண்கள் இடம்பெற்றிருந்தாலும், எண்ணிக்கையானது மொத்த ஊழியர்களில் 1,24,498 ஊழியர்கள் இடம் பெற்றுள்ளனர். இதன் சந்தை மதிப்பு 6,46,985 கோடி ரூபாயாகும்.
விப்ரோ & ஹெச் சி எல் டெக்
விப்ரோ நிறுவனத்தில் மொத்த ஊழியர்களில் 36% பேர் பெண்கள் ஆவர். எண்ணிக்கையில் 88,946 பேராகும். இதன் சந்தை மதிப்பு 2,12,044 கோடி ரூபாயாகும்.
ஹெச் சி எல் டெக்னாலஜிஸ் நிறுவனத்தில் மொத்த ஊழியர்களில் 28% பேர் பெண்கள் ஆவர். எண்ணிக்கையில் 62,780 பேராகும். இதன் சந்தை மதிப்பு 2,82,533 கோடி ரூபாயாகும்.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் & மதர்சன் சுமி சிஸ்டம்ஸ்
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தில் மொத்த ஊழியர்களில் 18% பேர் பெண்கள் ஆவர். எண்ணிக்கையில் 62,560 பேராகும். இதன் சந்தை மதிப்பு 17,25,058 கோடி ரூபாயாகும்.
மதர்சன் சுமி சிஸ்டம்ஸ் நிறுவனத்தில் மொத்த ஊழியர்களில் 41% பேர் பெண்கள் ஆவர். எண்ணிக்கையில் 52,501 பேராகும். இதன் சந்தை மதிப்பு 29,139 கோடி ரூபாயாகும்.
டெக் மஹிந்திரா & ஐசிஐசிஐ வங்கி
டெக் மஹிந்திராவில் 42,774 பெண்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் மொத்த ஊழியர்களில் 34% ஆகும். இந்த நிறுவனத்தின் சந்தை மதிப்பு 1,03,486 கோடி ரூபாயாகும்.
ஐசிஐசிஐ வங்கியில் 32,697 பெண்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் மொத்த ஊழியர்களில் 31% ஆகும். இந்த நிறுவனத்தின் சந்தை மதிப்பு 6,33,171 கோடி ரூபாயாகும்.
ஹெச் டி எஃப் சி வங்கி & பேஜ் இண்டஸ்ட்ரீஸ்
ஹெச் டி எஃப் சி வங்கியில் 22,750 பெண்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் மொத்த ஊழியர்களில் 16% ஆகும். இந்த நிறுவனத்தின் சந்தை மதிப்பு 8,33,656 கோடி ரூபாயாகும்.
பேஜ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தில் 22,631 பெண்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் மொத்த ஊழியர்களில் 74% ஆகும். இந்த நிறுவனத்தின் சந்தை மதிப்பு 55,511 கோடி ரூபாயாகும்.
பெண்களின் பங்களிப்பு அதிகரிக்கும்
பர்கண்டி பிரைவேட் ஹுருன் இந்தியா 500" என்ற பட்டியலில் உள்ள நிறுவனங்களின் நிர்வாக குழுக்களில் உள்ள பெண்களின் எண்ணிக்கை 16% என தெரிவித்துள்ளது. இந்தியாவின் பொருளாதாரம் வளர்ந்து வரும் ஒரு நாடாக உள்ளது. இது மிகபெரிய அளவில் வளர்ச்சி காணும்போது, பெண்களின் பங்களிப்பும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!

தமிழ்நாட்டில் விவசாயம் செய்யும் மாதவன்!! தரிசு நிலத்தை தென்னந்தோப்பாக மாற்றி சாதனை!!

கடந்த ஆண்டு அட்சய திருதியை-இல் ஒரு சவரன் நகை வாங்கி இருந்தால் இன்று அதன் மதிப்பு என்ன தெரியுமா?

ஸ்டாலினை விட விஜய்க்கு தான் போட்டி அதிகம்!! பரபரக்கும் தமிழக சட்டமன்ற தேர்தல் களம்!!



Click it and Unblock the Notifications