டாபர் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் உரிமையாளரான பர்மன் குடும்பம், செவ்வாய்க்கிழமை பிளாக் டீல் மூலம் சுமார் 800 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்க திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் நுகர்வோர் பொருட்கள் விற்பனை நிறுவனமாக விளங்கும் டாபர் இந்தியா நிறுவனத்தின் ப்ரோமோட்டர் தற்போதைய சந்தை விலையில் இருந்து சுமார் 4 சதவீதம் வரையிலான தள்ளுபடி உடன் டாபர் இந்தியா பங்குகளை டிசம்பர் 20ஆம் தேதி அதாவது இன்று விற்பனை செய்ய உள்ளார்.
திங்கட்கிழமை வர்த்தக முடிவில் டாபர் இந்தியா பங்குகள் சுமார் 1.6 சதவீதம் உயர்ந்து 589.05 ரூபாய் விலையில் முடிந்ததுள்ளது.
பர்மன் குடும்பம்
செப்டம்பர் 30 தரவுகள் படி டாபர் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் ப்ரோமோட்டர்களான பர்மன் குடும்பம் மொத்தமாக இந்நிறுவனத்தில் 67.24 சதவீத பங்குகளை வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
டாபர் இந்தியா
டாபர் இந்தியா நிறுவனத்தின் பிளாக் டீல்-க்கு கோல்ட்மேன் சாக்ஸ் தரகராக உள்ளது. 2022 ஆம் ஆண்டில் FMCG பிரிவில் குறைவான செயல்திறன் கொண்ட வெகு சில நிறுவனங்களில் டாபர் இந்தியா உள்ளது.
2022 பர்பாமென்ஸ்
டாபர் இந்தியா பங்குகளின் 2022 ஆம் ஆண்டில் டிசம்பர் 19 வரையில் வெறும் 1.5 சதவீதம் மட்டுமே வளர்ச்சி அடைந்துள்ளது. அதேசமயம் நிஃப்டிகுறியீட்டில் 6 சதவீதம் மட்டுமே உயர்ந்துள்ளது.
போட்டி
இந்திய FMCG துறையில் ஏற்கனவே ரிலையன்ஸ் ரீடைல், அதானி குழுமம், டாடா குழுமம் ஆகியவை இறங்கியுள்ளது மட்டும் அல்லாமல் வர்த்தகத்தை விரிவாக்கம் செய்யப் பல கோடி ரூபாய் முதலீட்டைச் செய்து பெரிய அளவிலான ஆதிக்கத்தைச் செலுத்தி வருகிறது.
ஆயுர்வேத பொருட்கள்
டாபர் நிறுவனம் ஆயுர்வேத பொருட்கள், ஹெல்த்கேர், ஹேர் கேர், ஸ்கின் கேபர், டூத்பேஸ்ட், ஹோம் கேர் மற்றும் உடல் ஆரோக்கியம் தொடர்பான பொருட்களை மட்டுமே இதுவரையில் தயாரித்து விற்பனை செய்து வந்தது.
மசாலா பொருட்கள்
ஆனால் அக்டோபர் மாதம் உணவு மற்றும் FMCG துறையில் தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்த வேண்டும் என்பதற்காக டாபர் நிறுவனம் மெயின்ஸ்ட்ரீம் FMCG வர்த்தகத்தில் இறங்குவதற்காகவும், ஐடிசி உட்பட அனைத்து முன்னணி நிறுவனங்களுடன் போட்டிப்போட மசாலா பொருட்கள் விற்பனையில் இறங்க முடிவு செய்தது.
பாட்ஷா மசாலா
இதற்காக அக்டோபர் மாதம் பாட்ஷா மசாலா நிறுவனத்தில் சுமார் 51 சதவீத பங்குகளைச் சுமார் 587.5 கோடி ரூபாய்க்கு வாங்க உள்ளதாகவும், இதற்கான ஒப்பந்தம் செய்யப்பட்ட நிலையில். இந்தப் பங்குகள் மார்ச் 31, 2023க்குள் கைமாற்ற இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.


Click it and Unblock the Notifications