கர்நாடக மாநில அரசு பேருந்து கட்டணங்களை உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஜனவரி 5ஆம் தேதி முதல் இந்த பேருந்து கட்டண உயர்வு அமலுக்கு வருகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.
முதலமைச்சர் சித்தராமையா தலைமையில் நடத்தப்பட்ட அமைச்சரவை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது இதன்படி கர்நாடக மாநிலத்தில் நான்கு போக்குவரத்து கழகங்களின் கீழ் இயக்கப்படும் அனைத்து அரசு பேருந்துகளின் கட்டணமும் 15 சதவீதம் வரை உயர்த்தப்பட இருக்கிறது. அமைச்சரவை கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் பாட்டில் அமைச்சரவை கூட்டத்தில் பேருந்து கட்டண உயர்வு உட்பட 23 விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாக தெரிவித்தார்.

2015 ஆம் ஆண்டுக்குப் பிறகு முதன்முறையாக பிஎம்டிசி கட்டணங்கள் உயர்த்தப்படுகிறது என்றும் கேஎஸ்ஆர்டிசி, என்டபள்யூகேஆர்டிசி மற்றும் கேகேஆர்டிசி ஆகிய மூன்று பேருந்து போக்குவரத்து கழகங்களில் பேருந்து கட்டணங்கள் 2021 ஆம் ஆண்டுக்கு பிறகு தற்போது தான் உயர்த்தப்படுகிறது என்றும் தெரிவித்தார். தற்போது பேருந்துகளை இயக்குவதற்கான செலவினங்கள் அதிகரித்து விட்டன, டீசல் விலை உயர்வு, ஊழியர்களுக்கான சம்பளம் என செலவினங்கள் உயர்ந்ததே கட்டண உயர்வுக்கு காரணம் என தெரிவித்தார்.
2015 ஆம் ஆண்டில் டீசல் விலை ஒரு லிட்டர் 60 ரூபாய் என்ற அளவிற்கு விற்பனையான போது தான் பிஎம்டிசி பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டது என்று நினைவூட்டினார். இந்த நான்கு பேருந்து போக்குவரத்து கழகங்களிலும் நாள்தோறும் டீசல் டீசலுக்கு மட்டும் சுமார் 13 கோடி ரூபாய் செலவு செய்யப்படுவதாக தெரிவித்தார். 2015இல் 9 கோடி ரூபாயாக இருந்த டீசல் செலவினம் தற்போது 13.2 கோடி என உயர்ந்திருக்கிறது என அவர் கூறியுள்ளார்.
ஊழியர்களுக்கான ஊதியம் 12.95 கோடி ரூபாயாக இருந்து தற்போது 18.36 கோடி ரூபாய் என உயர்ந்திருக்கிறது என பாட்டில் தெரிவித்தார். தற்போது பேருந்து கட்டணத்தை உயர்த்த வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகி இருக்கிறோம் என கூறிய அவர் பேருந்து கட்டண உயர்வால் அரசுக்கு மாதம் தோறும் 74.85 கோடி ரூபாய் வருவாய் ஈட்ட முடியும் என தெரிவித்துள்ளார்.
அது தவிர பெண்களுக்கான இலவச பேருந்து வசதி தொடரும் என்றும் அவர் தெரிவித்தார். ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களோடு ஒப்பிடும்போது கர்நாடகாவில் பேருந்து கட்டணங்கள் குறைவாகத்தான் இருக்கின்றன என்றும் அவர் தெரிவித்தார்.
இதனிடையே பேருந்து கட்டண உயர்வுக்கு எதிர்க்கட்சியான பாஜக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. பெண்களுக்கு இலவச பேருந்து சேவை வழங்கிவிட்டு ஆண்களிடம் அந்த கட்டணத்தை வசூல் செய்கிறீர்களா என பாஜகவினர் கேள்வி எழுப்பியுள்ளனர்.
Story Written By: Devika
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !



Click it and Unblock the Notifications