துபாய்-க்கு செல்கிறீர்களா? உங்களுக்கு ஒரு ஷாக் தகவல்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவிலிருந்து துபாய்க்கும், துபாயிலிருந்து இந்தியாவுக்கும் அடிக்கடி செல்லும் விமான பயணிகளுக்கு ஒரு அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளன.

இந்தியா-துபாய் இடையே பயணம் செய்யும் விமான நிறுவனங்கள் டிக்கெட் விலையை உயர்த்த இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அடுத்த மாதம் முதல் இந்திய, துபாய் பயணம் அதிக காஸ்ட்லியாக இருக்கும் என்றும் சுமார் 40 முதல் 50 சதவீதம் வரை அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இது குறித்த தகவல்களை தற்போது பார்ப்போம்.

 இந்தியாவில் 5 லட்சம் யூரோக்களை முதலீடு செய்யும் ஜெர்மனி.. எதற்காக தெரியுமா? இந்தியாவில் 5 லட்சம் யூரோக்களை முதலீடு செய்யும் ஜெர்மனி.. எதற்காக தெரியுமா?

இந்தியா-துபாய்

இந்தியா-துபாய்

இந்தியாவிலிருந்து ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE)க்கான டிக்கெட் கட்டணங்கள் செப்டம்பர் மாதத்தில் அதிகரிக்கப்பட உள்ளன. ஏனெனில் விடுமுறை நாட்களில் இருந்து திரும்பும் வெளிநாட்டவர்கள் மற்றும் வேலை தேடுபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு காரணமாக துபாய் செல்லும் மற்றும் துபாயில் இருந்து இந்தியா வரும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் விமானங்களின் தேவையும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

கட்டணம் அதிகரிப்பு

கட்டணம் அதிகரிப்பு

இதன் காரணமாக இந்தியா-துபாய் விமான நிறுவனங்கள் கட்டணத்தை அதிகரிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. சியாசட் டெய்லியின் அறிக்கையின்படி இந்தியா-துபாய் செல்லும் டிக்கெட் விலை உயர்வு 40 முதல் 50 சதவிகிதம் மற்றும் அதற்கும் அதிகமாக உயரலாம் என தெரிய வந்துள்ளது மேலும் வணிகம் தொடர்பான விமானங்களும் அடுத்த மாதம் முதல் அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது.

கட்டணம் எவ்வளவு?

கட்டணம் எவ்வளவு?

டெல்லியில் இருந்து துபாய்க்கு ஒரு வழி டிக்கெட் கட்டணம் சுமார் ரூ 19,986 வரை உயரலாம் என்பதை விமானப் பயணிகள் கவனிக்க வேண்டும். இது தற்போதைய கட்டணமான ரூ 10,743 என்பதில் இருந்து மிக அதிகம். அதேபோல் மும்பையில் இருந்து துபாய் செல்லும் விமான டிக்கெட் செப்டம்பர் மாதத்தில் இருந்து ரூ 17,189 ஆக இருக்கும் என்றும், தற்போது மும்பையில் இருந்து துபாய் செல்ல ரூ 11,817 என கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

கொச்சி-துபாய்

கொச்சி-துபாய்

இது மட்டுமின்றி, கொச்சியில் இருந்து துபாய்க்கு செல்ல விமான டிக்கெட்டுகளின் கட்டணங்கள் ஏற்கனவே அதிகமாக உள்ளது. பெரும்பாலான விமான நிறுவனங்கள் கொச்சி-துபாய் செல்ல ரூ.21,487 என கட்டணங்களை வசூலிக்கின்றன.

அதிக பயணிகள்

அதிக பயணிகள்

கோவிட் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட பிறகு, சர்வதேச விமானங்களை இயக்க மத்திய அரசு அனுமதித்துள்ளது, எனவே விமான போக்குவரத்தும் அதிகரித்துள்ளது. பல்வேறு சர்வதேச மற்றும் உள்நாட்டு விமான நிறுவனங்கள் தங்கள் திறனை மேம்படுத்தியுள்ளன. குறிப்பாக, துபாய் மற்றும் மும்பை இடையே அதிக பயணிகள் பயணம் செய்வதாக விமான ஆலோசனை அமைப்பு OAG அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.

 புதிய விமான நிறுவனங்கள்

புதிய விமான நிறுவனங்கள்

மேலும் இந்தியாவில் பல புதிய விமான நிறுவனங்கள் விமான சேவையில் காலடி எடுத்து வைத்து வருகிறது. புதிய விமான நிறுவனங்களும் விரைவில் ஐக்கிய அரபு எமிரேட் சந்தையை இலக்காக கொள்ள வாய்ப்பு உள்ளது. குறிப்பாக பிரபல தொழிலதிபர் ராகேஷ் ஜுன்ஜுன்வாலாவின் ஆகாசா ஏர் தனது முதல் வணிக விமானங்களுக்கான டிக்கெட் விற்பனையை ஆகஸ்ட் 7 முதல் தொடங்கியுள்ளது. மறுபுறம், ஜெட் ஏர்வேஸ் 2022 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் மறுதொடக்கம் செய்ய ஏவியேஷன் ரெகுலேட்டரிடமிருந்து ஏர் ஆபரேட்டர் உரிமத்தையும் பெற்றுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Business Class Air Ticket Fare From India to Dubai to Increase Next Month!

Business Class Air Ticket Fare From India to Dubai to Increase Next Month! | துபாய்க்கு பயணம் செய்கிறீர்களா? உங்களுக்கு ஒரு ஷாக் தகவல்!
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X