கால் காசானாலும் கவர்மென்ட் வேலையில் இருந்து கிடைக்க வேண்டும் என்பதில் இருந்து, மக்கள் தனியார் வேலை தான் பெஸ்ட் என்ற நிலைக்கு வந்து, தற்போது சொந்தமாக தொழில் துவங்க வேண்டும் என்பதே முக்கிய விருப்பமாக மக்கள் மத்தியில் நிலவுகிறது.
சுயதொழில் தொடங்கி சொந்தக்காலில் நின்று மாதந்தோறும் பல லட்சங்களை சம்பாதிக்க நினைப்பவர்கள் கையில் பல ஐடியா இருந்தாலும், காலம் காலமாக நடைமுறையில் இருக்கும் தொழில் இன்றளவும் சரியான தேர்வாகவே உள்ளது. மக்கள் தினமும் பயன்படுத்தும் முக்கிய உணவு பொருளாக இருக்கும் பால் சார்ந்த வியாபாரம் எப்போதும் மக்களுக்கு பலன் அளிக்க கூடியதாகவே உள்ளது.

பால் சார்ந்த தொழில் என்ற உடனே மாட்டு பண்ணை வைக்க வேண்டும் என்பது இல்லை, இதில் விருப்பம் இல்லாதவர்கள் சூறிப்பாக அதிக உடல் உழைப்பு செய்ய முடியாதவர்கள், 2வது வருமானம் ஈட்டும் திட்டமிடும் நபர்களுக்கு இந்த அமுல் நிறுவனத்தின் பால் பொருட்களை விற்கும் கடை வைத்தால் மாதம் ரூ.5-10 லட்சம் வரையில் வருமானம் ஈட்ட முடியும்.
அமுல் பிராண்ட் பல மாநிலங்களில் பல பிரச்சனைகளை எதிர்கொண்டாலும், தமிழ்நாட்டில் தொடர்ந்து பல்வேறு பொருட்களை விற்பனை செய்து வருகிறது. குறிப்பாக தமிழ்நாட்டில் தற்போது பல பொருட்களுக்கு பிரத்தியேகமாக தமிழ்மொழியில் விளம்பரம் செய்து வர்த்தகத்தை விரிவாக்கம் செய்து வருகிறது. இந்த நிலையில் அமுல் தற்போது Franchise ஆப்ஷன் கொடுக்கிறது.
தொழில் தொடங்குவதற்கு அமுல் நிறுவனம் இருவேறு முதலீட்டு திட்டங்களை அளிக்கிறது. அமுல் பார்லர் அதாவது அமுல் பிராண்டின் அதிகாரப்பூரவ் கடைகள் வைப்பதற்கு ரூ.2 லட்சம் முதலீடு செய்ய வேண்டும். அதுவே ஃபாரான்சைஸ் ஆகவேண்டும் என்றால் ரூ.5 லட்சம் முதலீடு செய்ய வேண்டும்.
அமுல் ஃப்ரான்சைஸ் எடுத்தால் தாராளமாகக் கிடைக்கும் கமிஷன் மூலம் அதிகம் சம்பாதிக்கலாம். பால் பாக்கெட்களுக்கு 2.5 சதவீதம் கமிஷன் தரப்படுகிறது. பால் பொருட்களுக்கு 10 சதவீதமும் ஐஸ்கிரீம் வகைகளுக்கு 20 சதவீதமும் கமிஷனாக வழங்கப்படுகிறது.
இதுவே ஐஸ்கிரீம், ஷேக்குகள், பீட்சா, சாண்ட்விச், ஹாட் சாக்லேட் பானங்கள் விற்றால் 50 சதவீத கமிஷனைப் பெறலாம்.
அமுல் ஃப்ரான்சைஸ் தொடங்குவதற்கு உங்களுக்கு சுமார் 150 சதுர அடி இடம் தேவை. ஐஸ் கிரீம் பார்லர் வைக்க வேண்டுமென்றால் 300 சதுர அடி இடம் தேவை. கடை சின்னதாக இருந்தால் போதும்.
அமுல் பார்லர் வைப்பதற்கு திரும்பப் பெறக்கூடிய ரூ.25,000க்கான காசோலை அல்லது டிமாண்ட் டிராப்ட்டை பாதுகாப்பு டெபாசிட்டாகக் குஜராத் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்துக்குச் செலுத்த வேண்டும்.
தொழில் தொடங்க விண்ணப்பித்தால் அமுல் நிறுவனத்தில் இருந்து அதிகாரிகள் வந்து நேரில் சந்தித்து உங்களது வியாபார வாய்ப்புகளை ஆய்வு செய்வர். டெபாசிட் கட்டணம் வங்கிகள் மூலம் ஆர்டிஜிஎஸ் அல்லது நெஃப்ட் மூலம் பெறப்படாது. அமுல் விநியோகஸ்தராக ஆவதற்கு வேறு எந்தக் கட்டணமும் கிடையாது.
அமுல் பிசினஸ் ஃப்ரான்சைஸ் எடுப்பதற்கு அந்த நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வெப்சைட்டான amul.com/m/amul-scooping-parlours என்ற இணைய தளத்துக்குச் செல்ல வேண்டும். அதில் தொழில் பற்றிய அனைத்து விவரங்களையும் தெரிந்து கொள்ளலாம். [email protected] என்ற இமெயில் மூலம் அமுல் நிறுவனத்தை தொடர்பு கொள்ளலாம்.
அமுல் விநியோகஸ்தராக ஆவதற்கும் விநியோக உரிமை பற்றிய விவரங்களைத் தெரிந்து கொள்வதற்கும் அமுல் வாடிக்கையாளர்கள் சேவை எண்- (022) 6852666 அமுல் நிறுவனத்துக்கு இது தவிர வேறு எந்த இணைய தளமோ, இலவச டோல் எண்களோ கிடையாது. இதனால் பிற இணைய தளம், போன் எண் ஆகியவற்றை பயன்படுத்த வேண்டாம்.
அமுல் நிறுவனத் தயாரிப்புகள் ஏற்கெனவே மக்களிடையே பிரபலமாக உள்ளதால் அதன் தயாரிப்புகளுக்கு உடனடியாக மக்களிடையே வரவேற்பு கிடைக்கும். இதனால் முதல் நாளில் இருந்தே அதிகப்படியான வர்த்தகத்தை பெற முடியும்.


Click it and Unblock the Notifications