நம் நாட்டின் முக்கிய வாழ்வாதாரம் என்றால் அது விவசாயம் தான். எனவே விவசாயிகளுக்கு குறிப்பிட்ட பயிர்களை விளைவித்து நல்ல லாபத்தைப் பெறுவது எப்படி என்பது குறித்து இங்கு பார்க்கலாம்.
சணல் பயிறு விவசாயிகளுக்கு நல்ல லாபத்தைத் தரும் விளைபொருட்களில் ஒன்றாகும்.
மத்திய அரசும் சணலை உற்பத்தி செய்வதற்கு விவசாயிகளுக்கு ஊக்கமளித்து வருகிறது. இதன் காரணமாக, நாட்டில் சணல் சாகுபடி பரப்பை விரிவுபடுத்தவும், விவசாயிகளுக்கு அதிக விலை கொடுக்கவும் பயிரின் விலை அதிகரித்துள்ளது.

சணலுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை 2023-24 காலகட்டத்தில் 6 சதவீதம் அதிகரிக்கும். இது இதற்கு முந்தைய காலகட்டத்தை ஒப்பிட்டால் அதிகமாகும் என்று மத்திய அரசு கூறுகிறது.
மத்திய அரசின் விவசாயம் மற்றும் விவசாயிகள் நலத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறைந்தபட்ச ஆதார விலை அதிகரிப்பு காரணமாக உற்பத்தி செலவில் 63.2 சதவீதம் திரும்ப கிடைக்கும்.
அத்துடன் குறைந்தபட்ச ஆதரவு விலையை விட மார்க்கெட்டில் சணல் விலை குறைந்தால் சணல் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா விலையை அதிகரிக்கும் நடவடிக்கையில் ஈடுபடும் என்று கூறப்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் சணல் ஒரு முக்கியமான இயற்கை பைபராக உருவெடுத்துள்ளது. கோதுமை மற்றும் கடுகு அறுவடைக்குப் பின் சணல் பயிறு மார்ச் மற்றும் ஏப்ரல் மாதத்தில் பயிரிடப்படும். உலகளவில் சணல் உற்பத்தியில் 50 சதவீதம் இந்தியாவில்தான் நடைபெறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவில் மேற்கு வங்கம், திரிபுரா, ஓடிஷா, பிகார், அஸ்ஸாம், உத்தரப்பிரதேசம், மேகாலாயவில் அதிகளவு சணல் உற்பத்தி நடைபெறுகிறது. வங்கதேசம், சீனா, தாய்லாந்திலும் சணல் அதிக அளவு விளைவிக்கப்படுகிறது.
நம் நாட்டில் சணல் ஒரு பணப் பயிராகப் பார்க்கப்படுகிறது. அது ஒரு நீண்ட, பட்டுப்போன்ற, பளபளக்கும் செடியாகும். அதிலுள்ள பைபரை வைத்து கெட்டியான நூல் அல்லது இழையைத் தயாரிக்கலாம். இந்த சணல் நூலை வைத்து கூடைகள், பைகள், சாக்குகள், திரைச்சீலைகள், பேக்கேஜிங் பேக்குகள் தயாரிக்கப்படுகின்றன.
தானியப் பைகள் அனைத்தும் சணலில்தான் செய்யப்படுகின்றன. சணலை வைத்து பல்வேறு பொருட்களை செய்ய முடியும் என்பதால் அதற்கு அதிகளவில் கிராக்கி உள்ளது. சணலை அதிகளவில் சாகுபடி செய்வதற்காக மத்திய அரசு குறைந்தபட்ச ஆதார விலையை அதிகரித்துள்ளது. சணல் உற்பத்தி மூலம் சர்வ சாதாரணமாக 63 சதவீத லாபத்தை அடையலாம்.


Click it and Unblock the Notifications