நாட்டில் நிறைய பேர் ஏதாவது ஒரு சிறிய தொழில் தொடங்கி சம்பாதிக்க வேண்டும் என்ற கனவில் உள்ளனர். அவ்வாறு சிறிய தொழிலைத் தொடங்கி அதைப் பெரிய அளவில் விரிவாக்குவதற்கான வாய்ப்புகள் நம்மை சுற்றியே அதிகளவில் கொட்டிக் கிடக்கின்றன.
நம்முடைய தினசரி வாழ்க்கையில் தேவைப்படும் பொருள், சேவை ஆகியவற்றை மையப்படுத்தி தொழில் துவங்கினால், ஆரம்பம் முதலே வாடிக்கையாளர் மற்றும் வர்த்தகத்தை எளிதாக பெற முடியும். இதேபோல் நாம் செய்யும் தொழில் மக்களின் தினசரி நடைமுறையை எளிதாக்குகிறதா என்பதை கவனித்துக்கொள்ளுங்கள்.

உதாரணமாக இஞ்சி பூண்டு பேஸ்ட் தயாரித்தல் தொழிலை எடுத்துக் கொள்ளலாம். இந்திய குடும்பங்களில் சமையலுக்கு அன்றாடத் தேவைகளில் இஞ்சி பூண்டு பேஸ்ட் முக்கியப் பங்கை வகிக்கிறது.
இந்தப் பேஸ்ட்டைத் தயாரிப்பதற்கு உங்களுக்கு இஞ்சியும் பூண்டும் மட்டுமே தேவை. கிராமப்புறத்தை சேர்ந்த பெண்களுக்கு இந்தத் தொழில் மிகப்பெரிய லாபத்தைக் கொண்டு வரும். கிராமப்புற பெண்கள் பொருளாதார ரீதியாக தங்கள் சொந்த காலில் ஊன்றி நிற்பதற்கு இது எளிய மற்றும் நல்ல சிறுதொழில் வாய்ப்பாக இருக்கிறது.
அத்துடன் இந்தத் தொழிலைத் தொடங்குவதற்கு GST, MSME/SSI மற்றும் வியாபாரத்துக்கான பதிவும் FSSAI லைசன்ஸும் தேவை. சிறப்பான பேக்கிங் வசதிகள் மற்றும் போதிய மார்க்கெட்டிங் இருந்தால் போதும் இஞ்சி பூண்டு பேஸ்ட் தொழிலை மிகுந்த லாபத்தில் நடத்தலாம்.
பல்வேறு சமையலுக்கு இஞ்சி பூண்டு அவசியம் தேவை. மக்கள் இதை வீட்டில் மிக்ஸியில் செய்கின்றனர் அல்லது கடைகளில் விற்கும் பாக்கெட்களை வாங்கியும் பயன்படுத்துகின்றனர். இஞ்சி பூண்டு பேஸ்ட் தயாரிக்கும் தொழிலை சிறிய அளவில் தொடங்க வேண்டுமா அல்லது பெரிய நிறுவனமாக ஆரம்பிக்க வேண்டுமா என்று முதலில் முடிவு செய்து கொள்ளுங்கள்.
தொழில் முறையில் செய்யும்போது விலை கட்டுப்படியாகும் வகையில் தயாரிப்பு இருக்க வேண்டும். மேலும், தயாரித்த பேஸ்ட்டை மார்க்கெட் செய்யத் தேவையான வசதிகள் இருக்க வேண்டும்.

முதலீடு: இஞ்சி பூண்டு பேஸ்ட் தயாரிக்கும் யூனிட்டை அமைப்பதற்கு சுமார் 3-4 லட்சம் ரூபாய் முதலீடு தேவை. இதில் உபகரணங்கள், இயந்திரங்கள், பேக்கேஜிங் வசதிகள், மூலப்பொருட்கள் ஆகியவற்றின் செலவுகள் ஆகிய மொத்தமும் அடங்கும்.
தயாரிக்கும் பொருட்கள் குறிப்பிட்ட காலம் கெட்டுப்போகாமல் இருக்கும் அளவுக்கு பதப்படுத்தப்பட்ட பொருட்கள் சேர்க்க வேண்டும். இல்லையெனில் உங்கள் தயாரிப்புக்கு போதிய Self Life கிடைக்காது. பதப்படுத்தப்படும் பொருட்கள் அரசு அனுமதி பெற்ற பொருளாகவும், அரசு அனுமதிக்கும் அளவுக்கு மட்டுமே சேர்க்க வேண்டும்.
லாபம் : மார்க்கெட் நிலவரத்தைப் பொருத்து மாதம் 50 ஆயிரம் முதல் 60 ஆயிரம் ரூபாய் வரை இதில் வருமானம் கிடைக்கும். வருடத்துக்கு 6-7 லட்சம் ரூபாய் கிடைக்கும் வாய்ப்புகள் உண்டு.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications