நீங்கள் ஒரு தொழிலைச் செய்ய விரும்பினால் குறைந்த முதலீட்டில் அதிக லாபம் தரும் ஒரு வாய்ப்பு உள்ளது. சானிட்டைசர் தயாரிப்பு நிறுவனம் தான் அந்த வாய்ப்பு, இதற்கு அரசு ஆதரவும் இருக்கிறது. கொரோனா தொற்று பரவி வரும் வேளையில் இந்த பிஸன்ஸ் சிறந்த ஐடியாவாக இருக்கும். மேலும் தற்போது பெரும்பாலான மக்கள் சானிட்டைசர்-ஐ தினசரி பயன்படுத்தி வருவதால் கொரோனா தொற்றுக்கு பின்பும் இதற்கு வர்த்தக வாய்ப்பு உள்ளது.
சானிட்டைசர்களுக்கு இப்போது நகரங்கள், சிறிய டவுண்கள், கிராமங்கள் என எல்லா பகுதிகளிலும் நிறைய கிராக்கி ஏற்பட்டுள்ளது. இதுபோல் எப்போதும் மார்க்கெட் உள்ள பொருட்களை வைத்து தொழில் செய்தால் நீங்கள் நிச்சயம் லாபத்தை சம்பாதிக்கலாம்.

இத்துடன் பிரதம மந்திரி முத்ரா யோஜனா திட்டத்தில் தொழில் தொடங்குவதற்கு கடன் தருவதால் எளிதாக இருக்கும். இந்த குறைந்த முதலீடு, அதிக மெனக்கெடு இல்லாத தொழில் லட்சக்கணக்கில் லாபத்தை சம்பாதித்துத் தரக்கூடியதாகும்.
சானிடைசர்களை எங்கு வேண்டுமானாலும் எடுத்துச் செல்லலாம் என்பதால் அதற்கு நிறைய தேவை இருக்கிறது. கிருமிகளை முற்றிலும் கொல்லக்கூடியது. தண்ணீர் தட்டுப்பாடு உள்ள பகுதிகளை சுத்தமாக வைத்திருக்க இதைப் பயன்படுத்தலாம். ஹேண்டு சானிடைசர் தயாரிப்பு தொழிலைத் தொடங்கினால் நீங்கள் நல்ல லாபத்தைப் பார்க்கலாம்.
நீங்கள் விரும்பினால் சிறிய அல்லது பெரிய அளவில் சானிடைசர் தயாரிப்புத் தொழிலைச் செய்யலாம். இது உங்களது நிதியிருப்பைப் பொருத்ததாகும். பிரதமர் முத்ரா கடன் திட்டத்தின் கீழ் மத்திய அரசு சானிடைசர் தயாரிப்பு தொழிலைத் தொடங்குவதற்கு உதவி செய்கிறது.
இந்தத் திட்டத்தின்கீழ் நீங்கள் ரூ.10 லட்சம் வரை கடன் கேட்டு விண்ணப்பிக்கலாம். இந்தத் தொகை உங்களது தொழிலைத் தொடங்குவதற்கு தாராளமாகப் போதும். முத்ரா திட்டத்தில் எந்தவித சொத்து உத்தரவாதமும் கேட்காமல் கடன் அளிக்கப்படுகிறது. இதனால் கடன் பெறுவதில் எந்தச் சிரமமும் இருக்காது.
சானிடைசர் தொழிலை லாபகரமாக நடத்துவது குறித்து காதி மற்றும் கிராமிய தொழில்கள் ஆணையம் ஒரு அறிக்கையை தயாரித்துள்ளது.
சானிடைசர் தயாரிப்பு தொழிலை தொடங்குவதற்கு ரூ.23.35 லட்சம் தேவை. இதில் உங்களது முதலீடு ரூ.2.34 லட்சம் இருந்தால் போதும்.
தயாரிப்பு மூலதனம் ரூ.6.8 லட்சம் தேவை. 1000 முதல் 1500 சதுர அடி நிலம் மற்றும் கட்டடம் இருந்தால் போதும்.
ஹேண்டு சானிடைசர் தயாரிப்புக்கான செலவீனங்கள்-
தேவையான முதலீடு
நிலம் வாடகை அல்லது சொந்தம்
இயந்திரம் மற்றும் தயாரிப்புக் கூடம்- ரூ.15.05 லட்சம்
கட்டடம் அல்லது ஷெட்- 1500 சதுர அடி சொந்தம் அல்லது வாடகை
பர்னிச்சர் வகையறா- ரூ.75,000
தொழில் மூலதனம்- ரூ.7.55 லட்சம்
ஆக மொத்தம்- ரூ.23.35 லட்சம்
ஹேண்டு சானிடைசர் தயாரிப்புக்கான மூலதனத்துக்கு வழி-
10 சதவீத சொந்த முதலீடு- ரூ.2.34 லட்சம்
டெர்ம் கடன்- ரூ.14.22 லட்சம்
தொழில் மூலதனம்- ரூ.6.80 லட்சம்
ஆக மொத்தம்- ரகூ.23.35 லட்சம்
ஹேண்டு சானிடைசர் தயாரிப்புக்கான அனுமதி மற்றும் பதிவுகள்-
உணவு மற்றும் மருந்து கட்டுப்பாடு ஆணையத்தின் லைசென்ஸ்
ஜிஎஸ்டி பதிவு
எம்எஸ்எம்இ உத்யோக் ஆதார்
தயாரிப்பாளரின் டிரேடு மார்க் அல்லது பிராண்டு பெயர்
இறக்குமதி மற்றும் ஏற்றுமதிக்கான ஐஇசி கோடு
இ-காமர்ஸ்ஸுக்கான பார்கோடு
காதி ஆணையத்தின் அறிக்கையின்படி முதல் ஆண்டில் நிகர லாபம் ரூ.1.55 லட்சம். இரண்டாவது ஆண்டில் ரூ.4.78 லட்சம், மூன்றாவது ஆண்டில் ரூ.8.70 லட்சம், நான்காவது ஆண்டில் ரூ.12.87 லட்சம், ஐந்தாவது ஆண்டில் ரூ.18.12 லட்சம் கிடைக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.
புதிய பிராண்டு பெயரில் நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி சானிடைசரைத் தயாரித்தால் எளிதாக மார்க்கெட்டில் நீங்கள் வெற்றி பெறலாம்.
சிறப்பாக மார்க்கெட்டிங் செய்தால் அதிக லாபத்தை பெறலாம்.
உள்ளூரில் உள்ள மொத்த விற்பனையாளர்கள், டிஸ்ட்ரிபியூட்டர்கள், கடைகள், சூப்பர் மார்க்கெட்களை உங்கள் தயாரிப்பை விற்கலாம்.
அத்துடன் உங்களது தயாரிப்பை ஆன்லைன் மூலமாகவும் விற்கலாம்.
More From GoodReturns

சரிவிலேயே இருக்கும் இந்திய பங்குச்சந்தை இந்த வாரமாவது மீண்டு வருமா?

இந்த வாரம் 4 நாட்கள், அடுத்த வாரம் 3 நாட்கள்: பங்குச்சந்தை முதலீட்டாளர்களே முதல்ல இத படிங்க

தங்கம் விலை: திடீரென ரூட்டை மாற்றும் தங்கம்.. இப்போ தங்கம் வாங்குறது தான் புத்திசாலித்தனமா?

பங்குச்சந்தை சரிவில் இந்த தப்பு மட்டும் பண்ணாதீங்க - முதலீட்டாளர்களுக்கு விஜய் கேடியா கூறும் டிப்ஸ்

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?



Click it and Unblock the Notifications