மக்கள் இப்போதெல்லாம் ஏதாவது சைடு பிசினஸ் செய்து நல்ல லாபத்தை ஈட்ட முடியுமா என்று யோசிக்கின்றனர். சிலர் நிலம் அல்லது சொத்து வாங்கி விற்று ரியல் எஸ்டேட் பிசினஸ் செய்ய விரும்புவர்.
மற்றும் சிலர் ஆன்லைனில் பிசினஸ் செய்து பணம் ஈட்ட நினைப்பர்.
இதுதவிர வேறு ஒரு கொழுத்த லாபம் தரும் தொழில் உள்ளது. ஆனால் அதற்கு மிகுந்த பொறுமை அவசியமாகும்.

சந்தனமரத்துக்கு அதிக கிராக்கி உலகளவில் உள்ளது. சந்தன மரத்தில் இருந்து பல்வேறு பொருட்கள் தயாரித்து விற்கப்படுகிறது. சந்தனத்தின் வாசனை எல்லாருக்கும் பிடிக்கும். இதில் சோப்பு உள்பட பல்வேறு வாசனை திரவியங்களை தயாரிக்கலாம்.
சந்தன மரங்களை நட்டு வளர்ப்பதற்கு இரண்டு முக்கிய வழிகள் உள்ளன. முதல் வழி இயற்கை விவசாயம், இரண்டாவது வழி பாரம்பரிய முறைகள். ஆர்கானிக் முறையில் சந்தன மரங்களை வளர்க்க ஏறத்தாழ 10 முதல் 15 ஆண்டுகள் ஆகும், பாரம்பரிய முறையில் மரங்களை வளர்க்க 20 முதல் 25 ஆண்டுகள் ஆகும்.
முதல் 8 ஆண்டுகளில், மரங்களுக்கு கூடுதல் பாதுகாப்பு தேவையில்லை. அதன் பிறகு, அது காற்றில் ஒரு இனிமையான வாசனையை உருவாக்கத் தொடங்குகிறது. பின்னர், மரங்களை கடத்தல்காரர்கள் மற்றும் விலங்குகளிடமிருந்து பாதுகாக்க வேண்டியது அவசியம். சந்தன மரங்களின் மற்றொரு முக்கிய அம்சம் என்னவென்றால், மணல்போக்கான அல்லது பனிப் பிரதேசங்களில் வளராது. மற்ற எந்தப் பகுதியிலும் சந்தன மரங்களை வளர்க்கலாம்.
சந்தன மரங்களை வளர்த்தால் அதிக லாபத்தைப் பெறலாம். ஒரு சந்தன மரத்தை நட்டால், ஒரு வருடத்தில் 3 முதல் 5 லட்சம் வரை சம்பாதிக்கலாம். அதேபோல, 5-10 மரங்களை நட்டால், ஆண்டுக்கு 30 லட்சத்துக்கு மேல் சம்பாதிக்கலாம். 100-க்கும் மேற்பட்ட மரங்களை நட்டு, அவை நன்றாக முதிர்ந்த பிறகு மரங்களை விற்பனை செய்து வெற்றி பெற்றால், ஆண்டுக்கு ரூ.5 கோடி வரை சம்பாதிக்கலாம்.
2017ஆம் ஆண்டு இந்திய அரசு சந்தன மரங்களை வாங்கவும் விற்கவும் தடை விதித்தது. இந்தச் சட்டத்தின்படி சந்தன மரத்தை நடலாம் ஆனால் அதை அரசிடம்தான் விற்க முடியும். சந்தன மரத்தை நடுவதற்கு முதலில் வனத்துறைக்கு தகவல் தெரிவித்து அனுமதி பெற வேண்டும். வளர்ந்த பின்னர் சந்தன மரத்தை உங்களிடம் இருந்து வனத்துறையினர் வாங்குவார்கள்.
Story written by: I.Jayachandran
More From GoodReturns

ரூ.666 இருந்தால் போதும் ரூ.1 கோடி இலக்கை எட்டலாம்…!! அட இவ்வளவு ஈஸியான வழி இருக்கா?

ரூ.1 லட்சத்துக்கு கீழ் தங்கமே வாங்க முடியாதா? குறைந்த விலையில் தங்கம் வாங்க வழியே இல்லையா?

அப்புறம் பாத்துக்கலாம்னு அசால்ட்டா இருக்காதீங்க! 5 வருஷம் லேட் பண்ணா ரூ3கோடி காலி.. SIP ரகசியம்?

LIC பங்குதாரர்களுக்கு ஜாக்பாட்!! ஒன்னு ரெண்டாக போகுது!! முதலீட்டாளர்கள் ஹேப்பி!!

கிணற்றில் போட்ட கல்லு போல இருக்கும் வெள்ளி: இப்போது முதலீடு செய்தால் லாபம் கிடைக்குமா?

3 ஆண்டுகளில் 740% வளர்ச்சி அடைந்த மல்டிபேக்கர் பங்கு: இப்போது முதலீடு செய்யலாமா?

மீண்டும் இந்திய பங்குச்சந்தையை நோக்கி வரும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!! இனியாவது சந்தை ஏறுமா?

ஒரு மாதத்தில் 70% வளர்ச்சி: Ola electric பங்கினை இப்போது வாங்கலாமா? திடீரென பங்கு மதிப்பு உயர்வது ஏன்?

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

பதவி நீக்கம் செய்யப்படுகிறாரா டிரம்ப்? ஈரான் போரால் டிரம்புக்கு ஏற்பட்டுள்ள புது பிரச்சினை!!



Click it and Unblock the Notifications