நீங்கள் புதிய தொழில் தொடங்கி நல்ல லாபத்தைப் பெற வேண்டும் என்று நினைத்தால் யோசிக்காமல் தக்காளி சாகுபடியை மேற்கொள்ளலாம்.
தக்காளிக்கு மார்க்கெட்டில் எப்போதுமே நல்ல கிராக்கி உண்டு. இது தவிர உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் தக்காளி கெட்ச்அப், தக்காளி சாஸ், தக்காளி சூப் தயாரிக்கும் நிறுவனங்களும் தக்காளியை மிக அதிக அளவில் கொள்முதல் செய்கின்றன.

வெளிநாடுகளுக்கும் தக்காளி ஏற்றுமதி செய்யப்படுகிறது.
இப்போது இருக்கும் விலைவாசியில் எல்லா காய்கறிகளுமே அதிக விலையில்தான் விற்கப்படுகின்றன. எனவே ஒரு பண்ணையை அமைத்து தக்காளி சாகுபடி செய்தால் நல்ல லாபத்தை ஈட்ட முடியும்.
நகரங்களில் தொடங்கி கிராமங்களிலும் தக்காளி அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. தக்காளி விலை கனஜோராக நடக்கிறது. இந்தியாவில் தக்காளி சாகுபடி மிகப் பெரிய அளவில் நடைபெறுகிறது. ஒரு ஹெக்டேர் நிலம் இருந்தால் அதில் 800 முதல் 1200 குவிண்டால் தக்காளியை விளைவித்து விடலாம்.
இந்தியாவில் ஆண்டுக்கு இருமுறை தக்காளி சாகுபடி நடைபெறும். முதல் சாகுபடி ஜூலை, ஆகஸ்ட்டில் நடைபெறும். இது பிப்ரவரி மார்ச் வரை தொடரும். இரண்டாவது முறை நவம்பர் டிசம்பரில் நடைபெறும். இது ஜூன் ஜூலை வரை தொடரும்.
தக்காளி சாகுபடியில் விதையில் இருந்து ஒரு மாதத்துக்குள் நாற்று தயாரிக்கப்படும். இந்த நாற்றுகள் விளைநிலத்தில் பயிரிடுவதற்கு ஏற்றதாகும். ஒரு ஹெக்டேர் நிலத்தில் 15,000 செடிகளை நடலாம். இரண்டு மூன்று மாதங்களில் செடிகள் காய் விடத் தொடங்கிவிடும்.
இப்போது தக்காளி விலை மிக அதிகமாக இருப்பதால் விவசாயிகள் இந்த ஆண்டில் பல லட்சங்களை சம்பாதித்தனர். சந்தையில் தக்காளி விலை எப்போதுமே அதிகமாக இருப்பதில்லை. சராசரியாக ஒரு கிலோ தக்காளி ரூ.10க்கு விற்பதாக வைத்துக் கொள்ளுவோம். நீங்கள் 1000 குவிண்டால்களை உற்பத்தி செய்திருந்தால் உங்களுக்கு ரூ.10 லட்சம் கிடைக்கும்.
சில நேரங்களில், தக்காளியின் விளைச்சல் குறைந்து, தேவை அதிகரித்து, அதன் விலையும் அதிகரிக்கிறது. தற்போது இந்தியா முழுவதும் தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. சில பகுதிகளில் தக்காளி விலை கிலோ 200 ரூபாயை எட்டியுள்ளது.
ஆனால் தற்போது அரசின் நடவடிக்கையால் விலை குறைந்துள்ளது. தக்காளி தற்போது மானிய விலையில் கிலோ 70 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
Story written by: I.Jayachandran


Click it and Unblock the Notifications