ஆன்லைன் மூலம் பல்வேறு தொழில்கள் இன்று தொடங்கப்பட்டு அந்நிறுவனங்கள் கொடிகட்டி பறந்து வருகின்றன. இன்றுள்ள சமூக ஊடகங்கள், ஆன்லைன் உக்திகளைப் பயன்படுத்தி ஒரு பொருளை வாங்குவதும், விற்பதும் மிகவும் எளிமையாகி விட்டது என்றே கூறலாம்.
அதிலும் குறிப்பாக பெண்கள் வீட்டிலிருந்தே ஆன்லைன் மூலம் பல தொழில்களைத் தொடங்கி நல்ல லாபத்தை ஈட்டி வருகின்றனர். ஆன்லைன் மூலம் தொழில் தொடங்க பலதரப்பட்ட ஐடியாக்கள் உள்ளது. அதில் நல்ல வரவேற்பைப் பெற்ற, முதலுக்கு மோசம் செய்யாத பிசினஸ் ஐடியாக்கள் கொட்டிக் கிடக்கின்றன.
உணவு சார்ந்த ஆன்லைன் பிசினஸ் என்பது சமீபகாலமாகவே வேகமாக வளரும் தொழில்துறையாக உள்ளது. இதனை பயன்படுத்தி ஆன்லைன் மூலம் பேக்கரி தொழில் தொடங்குவது எப்படி, அதை எவ்வாறு மார்க்கெட்டிங் செய்வது என்பது முதல் லாபம் பெற உதவும் வழிகள் வரை இங்கு காணலாம்.
முதலில் சரியான பிளான் இருக்க வேண்டும்!
நீங்கள் பேக்கரி பிசினஸை தொடங்க முதலில் சரியான இடத்தை தேர்வு செய்ய வேண்டும். தொழில் செய்யும் இடம் போதுமான வாடிக்கையாளர்களை ஈர்க்கும் இடத்தில் இருக்க வேண்டும். மேலும் உங்கள் பிசினஸ் ஐடியாக்கள் எப்படி உங்கள் போட்டியாளர்களிடமிருந்து உங்களை வேறுபடுத்திக் காட்டும் என்பதை குறித்த சரியான யுக்திகளுடன் இருக்க வேண்டும்.
கிளவுட் கிட்சன்
இதேபோல் நீங்கள் கிளவுட் கிட்சன் அதாவது நேரடி விற்பனை கடை இல்லாமல் ஆன்லைன் மூலம் விற்பனை செய்ய வேண்டும் என்ற திட்டத்தில் கேக் செய்ய போதுமான இடம் எங்கு இருந்தாலும் சரி எந்த பிரச்சனையும் இருக்காது. இதில் பல ஆயிரம் ரூபாய் வாடகையும், பல லட்சம் அட்வான்ஸ் தொகையும் மிச்சம்.
இருப்பிட வசதி!
நீங்கள் பேக்கரி தொழில் தொடங்க போதுமான இடவசதியுடன் கூடிய ஒரு கடையை வாடகைக்கோ அல்லது சொந்தமாகவோ வைத்திருக்க வேண்டும், அதில் தேவைப்படும் உபகரணங்களை வைக்க போதுமான இடமும் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
ப்ரீசர்
அதுமட்டுமின்றி, நீங்கள் தயாரிக்கும் பொருட்கள் சில எளிதில் கெட்டுவிடும் என்பதால அதற்கான சரியான ஸ்டோரேஜ் அதாவது ப்ரீசர் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். மேலும் நீங்கள் உணவுகளை தயாரிக்கும் நேரம் மற்றும் அதனை வாடிக்கையாளர்களுக்கு அனுப்பும் நேரம் குறித்து தெளிவு இருக்க வேண்டும்.
முதலீடு!
எந்தத் தொழில் செய்தாலும் அதற்கு முதலீடு இல்லாமல் செய்வது கடினம். நீங்கள் பேக்கரி பிசினஸ் தொடங்க தேவைப்படும் இடம், இடத்திற்கான வாடகை, உணவுப் பொருட்களை தயாரிக்க தேவைப்படும் உபகரணங்கள், மார்க்கெட்டிங் செய்ய தேவையான நிதி, உணவு டெலிவரி என மொத்தத்திற்குமான முதலீடுகளை முதலில் கணக்கிட வேண்டும்.
அதன்பின் அனைத்திற்கும் போதுமான பணம் இருக்கும்பட்சத்தில் நீங்கள் தொழில் தொடங்கலாம், அல்லது வங்கிகளில் கடன் பெற்றும் தொழில் தொடங்கலாம்.
பிசினஸ் ஐடியா
மேலும் உங்களிடம் தெளிவான பிசினஸ் ஐடியா இருந்து, முதலீட்டுக்கு தேவையான பணம் இல்லையென்றால், உங்கள் ஐடியாக்களை கூறி தொழில் தொடங்க முதலீட்டாளர்களை அணுகலாம். அவர்களிடம் உங்களின் பிசினஸ் ஐடியா குறித்து கூறி அவர்களிடமிருந்து முதலீடு பெற்றும் தொழில் தொடங்கலாம். அல்லது வங்கியில் கடன் பெற முடியும், அதிலும் குறிப்பாக பெண்களுக்கு அது கட்டாயம் சாத்தியம்.
அடுத்து உங்கள் பேக்கரி தொழில் தொடங்க சரியான FSSAI உரிமத்தைப் பெறவது கட்டாயமாகும். அதன்பின் உங்கள் பேக்கரி பிசினஸ் உரிமங்களை பதிவு செய்ய வேண்டும்.
LOGO & மார்க்கெட்டிங்!
அடுத்ததாக ஆன்லைன் மூலம் உங்கள் பேக்கரி தொழிலை உருவாக்க நீங்களே சொந்தமாக உங்கள் தொழிலுக்காக லோகோ (LOGO) வை உருவக்க வேண்டும். அதன்பின் பொருட்களை சந்தைப்படுத்த தனிப்பயனாக்கப்பட்ட ஒரு வலைத்தளத்தையும் தெளிவான விலை மற்றும் குறிப்புகளுடன், வாடிக்கையாளர்கள் சுலபமாக அணுகும் முறையில் உருவாக்க வேண்டும்.
சமூக ஊடகங்கள்
சமூக ஊடகங்கள் மூலம் தான் இன்று 50% மேற்பட்ட ஆன்லைன் தொழில்கள் வளர்ச்சி பெற்றுள்ளன. அதனால் நீங்களும் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடகங்களில் உங்கள் தொழிலை விரிவுப்படுத்தி லாபம் ஈட்டலாம்.
Swiggy & Zomato!
உங்கள் ஆனலைன் பேக்கரியை ஸ்விக்கி மற்றும் சோமேட்டோவிலும் பதிவு செய்து மார்க்கெட்டிங்கை சுலபமாக முடிக்கலாம். இரு தரப்புமே உங்களுக்கு போதுமான வசதிகளை செய்து தரும், நீங்கள் அவர்களின் வழிகாட்டுதலின்படியும் உணவுப் பொருட்களை விற்பனை செய்யலாம். அதன்மூலம் சுலபமாகவும் அதே சமயம் வேகமாகவும் உங்கள் தொழில் வளரும்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications