இனி கோடைக் காலம் ஆரம்பிக்க போகிறது. அதிலும் ஐஸ் கிரீம் தொழில் செய்பவர்களுக்கு இது பணம் கொட்டும் காலமாக உள்ளது. நீங்கள் சொந்தமாக தொழில் தொடங்க ஆசைப்படும் நபரெனில், இந்த சீசனுக்கேற்ப குறைந்த முதலீட்டில் ஐஸ்கீரிம் பார்லர் கடையைத் திறக்கலாம்.
அதிலும் குறிப்பாக இந்த கோடைக்காலம் மிகவும் அதிக வெப்பம் நிறைந்ததாக இருக்கும் என கணிக்கப்படுவதால் ஜிஸ்கிரீம் விற்பனை மிகவும் சிறப்பாக இருக்கும். இந்த நிலையில் இப்பிரிவில் வர்த்தகத்தை துவங்க இதுதான் சரியான நேரம்.
ஐஸ் கிரீம் தொழில்துறை!
இந்தியாவில் உணவு சார்ந்த தொழில்களில் ஐஸ்கிரீம் முக்கியப் பங்கு வகிக்கிறது. ஐஸ்கிரீம் இடம்பெறாத நிகழ்ச்சிகள் முழுமைப் பெறுவது இல்லை என்பது தான் உண்மை. ஐஸ்கிரீம் வகைகளில் அடிக்கடி புதுப்புது வகைகள், ஃபேவர்களில் ஐஸ் கிரீம் நிறுவனங்கள் வெளியிட்டு மக்களை கவர்ந்து வருகின்றனர்.
ஐஸ்கிரீம் வகைகள்!
நீங்கள் ஐஸ்கிரீம் தொழில் தொடங்க விரும்பினால் அதில் எவ்வகை ஐஸ்கிரீம் கடையை திறக்கப்போகிறீர்கள் என்பதை முதலில் தேர்வு செய்ய வேண்டும். ஐஸ்கிரீம் வகைகளில் cold stone, ice cream rolls, ice cream cakes, nitrogen ice cream, live ice cream counters மற்றும் pre-packed ice cream counters வகைகளில் எது உங்களுக்கு ஏற்றது என தேர்வு செய்வது முக்கியம்.
எவ்வளவு முதலீடு தேவைப்படும்!
ஒரு ஐஸ்கிரீம் கடையை திறக்க அல்லது ஒரு டிரக் போன்ற சிறிய வண்டிக்கு 400 முதல் 500 சதுர அடிவரை தேவைப்படும். மேலும் குறைந்தபட்ச முதலீட்டுத் தொகை ரூ.5 லட்சம் முதல் அதிகபட்சம் ரூ.15 லட்சம் வரை தேவைப்படும்.
தொழில் தொடங்கும் இடம்
முதலீடு மட்டுமின்றி நீங்கள் தொழில் தொடங்கும் இடம் மக்கள் கூட்டம் மற்றும் உங்கள் தொழில் அதிகப்படியான மக்களால் கவனிக்கப்பட வேண்டிய இடத்தில் இருப்பது முக்கியம். அதுமட்டுமின்றி உங்கள் கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் அமர இடமும், அவர்களின் வாகனங்களை பார்கிங் செய்ய போதுமான இடம் இருப்பதையும் நீங்கள் உறுதி செய்ய வேண்டும்.
தேவையான உபகரணங்கள்!
நீங்கள் ஐஸ்கிரீம்களை தயாரிக்கப் போகிறீர்கள் எனில் அதற்கு தேவையான உபகரணங்கள் பற்றி பட்டியலிட வேண்டும் மற்றும் உணவு வழங்கும் பொருட்களை வித்தியாசமானதாகவும், ஆரம்பகட்டமெனில் தரமான விலை குறைவானதாக இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். அதன்மூலம் உங்கள் செலவுகளை குறைக்கலாம்.
உரிமம்!
மேலும் ஐஸ்கிரீம் பிசினஸ், உணவுத் தொழில் துறைக்குக் கீழ் வருவதால் தியணைப்பு மற்றும் உணவுத் துறையிடமிருந்து உரிமம் பெற வேண்டியது அவசியம்.
விற்பனை நேரம்!
ஐஸ்கிரீம் கடைகள் பொதுவாக இரவு நேரமான 9 மணிமுதல் 12 மணிவரைதான் busy வர்த்தக நேரமாக இருக்கும், இது பொதுவாக பெரு நகரங்களில் இருக்கும் வர்த்தக வழக்கம். ஆனால் சிறு நகரங்கள், டவுன் பகுதிகளில் காலை 9 முதல் இரவு 8 மணி வரையில் தான் பிசியாக இருக்கும்.
இரவு நேர வர்த்தகம்
நீங்கள் இரவு நேரத்திலும் வர்த்தகம் செய்ய விரும்பினால் இத்தகைய வணிகத்திற்கு தேவையான அனுமதியை பெற வேண்டும். ஐஸ்கிரீம் கடைகளை திறப்பதற்கான உரிமம் பெற குறைந்தது 50000 ரூபாய் ஆகலாம்.
கப்பு முக்கியம் பிகிலு
மேலும் நீங்கள் ஐஸ்கிரீம் கடையை சரியான இடத்தில் வைத்திருந்து வர்த்தகம் சிறப்பாக இருந்தால் வர்த்தகத்திற்கு ஏற்ப விற்பனையாளர்கள் 30% முதல் 40% வரை உங்கள் லாபத்தை ஈட்டுவதை உறுதிபடுத்தி முதலீடு செய்ய வேண்டும்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications