இந்தியாவில் பயன்படுத்திய கார்கள் அதாவது செகண்ட் ஹேண்ட் கார்களுக்கான டிமாண்ட் அதிகமாகவே உள்ளது. புதிய கார் மாடல்கள் விலை அதிகரித்து வருவது மற்றும் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் வசூலிக்கும் அதிக வட்டி உள்ளிட்டவை காரணமாக பயன்படுத்திய கார்களை வாங்குவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இதுதவிர, இந்தியாவில் கார் வாங்குவோரில் பெரும்பாலானோர், கார்களின் எக்ஸ்-ஷோரூம் விலையை கொடுக்கும் நிலையில் இருப்பதில்லை. இதன் காரணமாக பலர் பயன்படுத்திய கார்களை வாங்க நினைக்கின்றனர்.
இந்த நிலையில் இந்தியாவில் SecondHanded Car Business துவங்குவது எப்படி..? பயன்படுத்திய கார் ஷோரூம் திறப்பது எப்படி.. ? இந்த வியாபாரத்தை நடத்த சந்தை பற்றிய ஆய்வுகளை மேற்கொள்வது எப்படி..? பற்றிய தகவல்களை தொடர்ந்து பார்ப்போம்.
மாபெரும் வர்த்தக சந்தை
கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவில் பயன்படுத்திய கார்களுக்கான தட்டுப்பாடு அதிகரித்து வருகிறது. 2019-இல் பயன்படுத்திய கார்களுக்கான சந்தை மதிப்பு 24.24 பில்லியன் டாலர்களாக இருக்கும் என கணிக்கப்பட்டு இருந்தது. மேலும் இது 2020 முதல் 2025-க்குள் 15.12 சதவீதம் வரை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆய்வு முக்கியம் பாஸ்
இதன் காரணமாக வியாபாரத்தை துவங்கும் முன் சந்தை பற்றிய ஆய்வு மற்றும் வாடிக்கையாளர்கள் பற்றி அறிந்து கொள்வது அவசியம் ஆகும். இதன் மூலம் பயன்படுத்திய கார்களுக்கு இருக்கும் தேவை, மற்றும் இந்த பிரிவில் கிடைக்கும் வருவாய் வாய்ப்புகள் பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.
வரைபடம் உருவாக்குதல்:
வியாபார வியூகம் வகுப்பதில் முதல் படி நிறுவனத்தின் நோக்கம் எது என்பதை முடிவு செய்வது தான். மேலும் பயன்படுத்திய கார்களுக்கான ஷோரூம் திறக்கும் போது இதற்குத் தான் நீங்கள் அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். இது உங்களுக்கு அதிகளவு பரிந்துரைகள் மற்றும் பிராண்டு மதிப்பை கூட்டிக் கொடுக்கும்.
தேவைப்படும் நிதி:
உங்களிடம் தேவைக்கு ஏற்ற நிதி இருந்தால், உடனடியாக துவங்கிவிடலாம். ஒருவேளை கடன் தேவைப்படும் பட்சத்தில் வங்கிகளில் வங்கி மற்றும் பிரபலமான நிதி நிறுவனக்களில் லோன் எடுத்தும் பயன்படுத்திய கார் ஷோரூம் திறக்கலாம்.
துவக்கத்தில் தேவைப்படும் நிதி பட்டியல்
அலுவலகம் அல்லது பிளாட் மாத வாடகை மற்றும் அட்வான்ஸ் தொகை
நிறுவனத்தை துவங்குவதற்கு தேவைப்படும் சட்டப்பூர்வ அனுமதிக் பெறுவதற்கான கட்டணங்கள். இது ஒவ்வொரு மாநிலத்திற்கும் மாறுப்படும்.
ஓனர்ஷிப் மற்றும் நோ-செல் ஒப்பந்தங்கள் செலவுகள்
மேஜை, லேப்டாப், போன் போன்ற அடிப்படை கட்டமைப்புகள்
ஆன்லைன் மற்றும் ஆஃப்லைனில் விளம்பரம் மற்றும் ப்ரோமோஷனுக்கு தேவைப்படும் கட்டணங்கள்
அனுபவம்
இந்த துறையில் இறங்குவதற்கு இத்துறையில் அனுபவம் உங்களுக்கு இருந்தால் மிகவும் சிறந்தது. இல்லையெனில் இப்பிரிவில் கைதேர்ந்த ஒரு சிறிய அளவிலான ஊழியர்கள் கூட்டத்தை சேர்ப்பது நல்லது. இதில் விருப்பம் இல்லாத பட்சத்தில் சில வருடம் SecondHanded Car Business-ல் இருக்கும் ஒரு பிரபல நிறுவனத்தில் பணியாற்றி அதன் பின்பு இதில் இறங்குவது மிகவும் சிறந்த முடிவாக இருக்கும்.


Click it and Unblock the Notifications