காலை 9 முதல் 5 மணி வரையிலான அலுவலக வேலை அலுத்துப் போய்விட்டதா. கவலை வேண்டாம் நீங்களே குறைந்த முதலீட்டில் சொந்தத் தொழிலைத் தொடங்க ஒரு திட்டம் உள்ளது. இது ரிஸ்க் குறைவான பிசினஸ் என்பதால் நம்பிக்கையுடன் தொடங்கிவிடலாம். அத்தோடு அரசுகளும் தொழில் தொடங்குவதற்கான உதவிகளை செய்துவருகிறது. அதையும் பயன்படுத்துங்கள்.
வீட்டில் பாத்திரங்களைக் கழுவும் ஸ்கிரப்பர்கள் தயாரிப்பு மூலம் வருடத்துக்கு பல லட்சத்தை சம்பாதிக்கலாம். இன்றைக்கு எல்லா வீடு, ஹோட்டல், ரெஸ்டாரண்ட் சமையல்கட்டிலும் பாத்திரம் விளக்குவதற்கு ஸ்கிரப்பரைப் பயன்படுத்துகின்றனர்.

பாத்திரங்களில் ஒட்டியிருக்கும் பிசுக்குகளையும், மைக்ரோ அவன்களையும், சமையல்கட்டு மேடைகளையும், கேஸ் அடுப்புகளையும்கூட ஸ்கிரப்பர் மூலம் சுத்தப்படுத்தலாம். இந்த ஸ்கிரப்பருக்கு எப்போதும் நல்ல மார்க்கெட் இருப்பதால் அதை தயாரித்து விற்றால் நிறைய லாபம் சம்பாதிக்கலாம்.
இத்தகைய தொழில் தொடங்குவதற்கு அரசுகள் உதவுகின்றன, சுயதொழில் தொடங்குவதற்கு பிரதம மந்திரி முத்ரா யோஜனா திட்டத்தின் கீழ் நீங்கள் வங்கிகளில் ரூ.10 லட்சம் வரை கடனாகப் பெறலாம். எனவே சமையலறை ஸ்கிரப்பர் பிசினஸை தொடங்குவதற்கு இது நல்ல நேரம் என்பதால் அதை முதலில் செய்து பம்பர் லாபத்தை பெறுங்கள்.
ஸ்கிரப்பர் உற்பத்தி தொழிலைத் தொடங்கி அதில் கிடைக்கும் லாபம் குறித்து காதி மற்றும் வில்லேஜ் இண்டஸ்ட்ரீஸ் கமிஷன் ஒரு அறிக்கையை தயாரித்துள்ளது. அதன்படி ஸ்கிரப்பர்களை தயாரிப்பதற்கு உங்களுக்கு ஒரு உற்பத்திக்கூடம் தேவை. இந்தத் தொழிலுக்கு ரூ.12.31 லட்சம் தேவைப்படுகிறது. அதில் உங்கள் சொந்த முதலீடாக ரூ.1.23 லட்சம் வைத்துக் கொண்டால் போதும்.
முழுமையான இண்டஸ்ட்ரியல் செட்டப்பை செய்வதற்கு 1200 முதல் 1800 சதுர அடி பரப்பிலான இடம் தேவை. இதை உங்களது சொந்த இடத்திலோ அல்லது சொந்த இடம் இல்லாதவர்கள் வாடகை இடத்திலோ அமைக்கலாம்.
பாத்திரம் விளக்கும் ஸ்கிரப்பர் தயாரிப்பு திட்டத்துக்கான செலவீனம்-
நிலம்- சொந்தம் அல்லது வாடகை
தொழில்கூடம் மற்றும் இயந்திரங்கள்- ரூ.8.10 லட்சம்
பர்னிச்சர் வகையறா- ரூ.50 ஆயிரம்
தொழில் மூலதனம் - ரூ.3.71 லட்சம்
ஆக மொத்தம் ரூ. 12.31 லட்சம்
ஸ்கிரப்பர் தயாரிப்பு தொழிலுக்குத் தேவையான நிதியாதாரம்-
சொந்த மூலதனம்- ரூ.1.23 லட்சம்
தொழில் மூலதனம்(பைனான்ஸ்) - ரூ.3.34 லட்சம்
டெர்ம் லோன்- ரூ.7.74 லட்சம்
ஆக மொத்தம் - ரூ.12.31 லட்சம்
ஸ்கிரப்பர் தயாரிப்பு தொழில் மூலம் நல்ல லாபம் கிடைக்கும் என்பதால் நீங்கள் வாங்கியக் கடனுக்கான தவணைகளைச் செலுத்திய பின்னரும் கணிசமான லாபத் தொகை கையில் நிற்கும்.
ஸ்கிரப்பர்களை விற்பதற்கு அருகில் உள்ள சூப்பர் மார்க்கெட்கள், கடைகளை அணுகுங்கள். ஆன்லைன் மூலமாகவும் உங்கள் தயாரிப்பை விற்கலாம், இதனால் வியாபாரம் அதிகப்படியான வாடிக்கையாளர்களை சென்றடையும்.
காதி கமிஷன் அறிக்கையில், ஐந்து ஆண்டுகளுக்கான தோராய லாபக்கணக்கு பற்றி கணிக்கப்பட்டுள்ளது. அதன்படி, முதல் ஆண்டில் உங்களது நிகர லாபம் ரூ.2.97 லட்சம், இரண்டாவது ஆண்டில் ரூ.3.77 லட்சம், மூன்றாவது ஆண்டில் ரூ.4.47 லட்சம், நான்காவது ஆண்டில் ரூ.5.50 லட்சம், ஐந்தாவது ஆண்டில் ரூ.6.37 லட்சம் நிகர லாபமாக கிடைக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.
More From GoodReturns

வங்கி கடனை விட ஈஸி! உங்கள் PPF பணத்தை வைத்தே கடன் பெறலாம் - புதிய விதிமுறைகள் என்ன?

EMI-யும் கட்டியாச்சு,லாபமும் பார்த்தாச்சு! ரூ8 கோடியை வைத்து ரூ10 கோடி வீட்டை வாங்கிய சாதுர்ய நபர்!

தங்கம் விலை: திடீரென ரூட்டை மாற்றும் தங்கம்.. இப்போ தங்கம் வாங்குறது தான் புத்திசாலித்தனமா?

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

5 ஆண்டுகளில் ரூ.1 லட்சத்தை ரூ.25 லட்சமாக மாற்றிய பென்னி ஸ்டாக்: உங்க போர்ட்போலியோவுல இருக்கா?

பங்குச்சந்தை ஏறினாலும், இறங்கினாலும் கண்டுக்காதீங்க: சென்செக்ஸ் சொல்லி தரும் பாடம் இது தான்!!

ஆரம்பமே அட்டகாசம்: நிதியாண்டின் முதல் நாளில் பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு சர்ப்பிரைஸ்!!

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி!! சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!



Click it and Unblock the Notifications