எவ்வளவுதான் கஷ்டப்பட்டு வேலை பார்த்தாலும் கைநிறைய சம்பாதிக்க முடியாது. அப்படியே பெரிய படிப்பு படித்து பெரிய நிறுவனத்தில் சேர்ந்து கைநிறைய சம்பாதித்தாலும் அதில் கணிசமாக வரிகளுக்கே போய் சேர்ந்து விடும். இப்படிப்பட்ட சூழ்நிலையில் சுயமாக ஒரு தொழில் செய்தால் உங்களது உழைப்புக்கு ஏற்ற வருமானம் நிச்சயமாகக் கிடைக்கும்.
அதிகமாக முடியாவிட்டாலும் ரூ.4 லட்சத்தை புரட்டி இந்தத் தொழிலை செய்தால் ஆண்டுக்கு ரூ.27 லட்சம் லாபத்தை ஐந்தே ஆண்டில் பெறத் தொடங்கலாம். ஆமாம் பிவிசி பைப் மற்றும் கேபிள் கோட்டிங் தொழிலில் ரூ.4 லட்சம் முதலீடு செய்தால் நல்ல லாபத்தை பெறலாம்.

பவர் சப்ளை, வீடுகளில் வயர் கனெக்ஷன், மெஷின் டூல்ஸ், இயந்திரங்கள் வயரிங், ஆட்டோமொபைல், எலக்ட்ரிக் சாதனங்கள், பிளெக்ஸிபிள் அண்டு கார்டு கேபிள்கள் என பல துறைகளில் பிவிசி வயர்கள் மற்றும் கேபிள்கள் பயன்படுத்தப்படுகின்றன. இதனால் இந்த வயர்கள் மற்றும் கேபிள்களுக்கு நாடுமுழுவதும் நல்ல டிமாண்டு உள்ளது. பெரிய நிறுவனங்களை விடுங்கள். நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு இந்த தொழில் நல்ல லாபத்தை பெற்றுத் தருகிறது.
இதுபற்றி காதி மற்றும் கிராமத் தொழில் ஆணையம் ஒரு அறிக்கையை தயாரித்துள்ளது. அதன்படி ரூ.40 லட்சத்தில் ஒரு உற்பத்தி ஆலையை அமைத்துவிடலாம். இதில் உங்களது ஆரம்பக்கட்ட பங்களிப்பாக ரூ.4 லட்சம் மட்டும் போதும். மீதமுள்ள தொகையை பிரதான் மந்திரி முத்ரா யோஜனா திட்டத்தின் வாயிலாக பெற முடியும். அத்துடன் தொழில் மூலதனமாக ரூ.9 லட்சம் வேண்டும்.
முழுமையான ஒரு தொழில் கூடத்தை அமைப்பதற்கு 1500 சதுர அடி முதல் 2000 சதுர அடி இடம் இருந்தால் போதும். சொந்தமாக இடம் இல்லாவிட்டால் வாடகைக்கு எடுத்துக் கொள்ளலாம். பிவிசி வயர் மற்றும் கேபிள் கோட்டிங் ஆலையை அமைக்க சில ஆவணங்கள் மற்றும் அரசுத் துறைகளின் அனுமதி தேவை.
உங்களது தயாரிப்பு புதியது என்பதால் அதை பிராண்டடு பிவிசி வயர் மற்றும் கேபிள் விலைக்கு விற்பது பெரும் சவாலாக இருக்கும். இதனால் உங்களது தயாரிப்பை சற்று விலை குறைத்து விற்க வேண்டியிருக்கும். தொடக்கத்தில் 10 சதவீதம் அல்லது 15 சதவீதம் லாபம் கிடைக்கும். போகப்போக மாதத்துக்கு ரூ.40,000க்கு உங்களது தரமான தயாரிப்பை விற்கலாம்.
பிவிசி வயர் மற்றும் கேபிள் கோட்டிங் ஆலை தயாரிப்புக்கான செலவு மதிப்பு
நிலம்- வாடகை அல்லது சொந்தம்
ஆலை மற்றும் இயந்திரம் ரூ.28.60 லட்சம்
பர்னிச்சர்- ரூ.1.40 லட்சம்
தொழில் மூலதனம்- ரூ.10 லட்சம்
மொத்தம் ரூ.40 லட்சம்
நிதி ஆதாரம்
சொந்த முதலீடு- ரூ.4 லட்சம்
தொழில் மூலதனம்- கடனாக ரூ.9 லட்சம்
டெர்ம் கடன்- ரூ.27 லட்சம்
மொத்தம் ரூ.40 லட்சம்
உங்களது தயாரிப்பை பிரசித்தமாக்க நல்லதொரு திட்டமிடல் வேண்டும். லோக்கல் கடைகள், சூப்பர் மார்க்கெட்கள், மொத்த விற்பனை கடைகள் போன்றவற்றின் மூலம் விற்பனை செய்யலாம். அத்துடன் ஆன்லைன் மூலமாகவும் விற்கலாம்.
காதி அறிக்கையின்படி பிவிசி வயர் மற்றும் கோட்டிங் தொழிலில் முதலாண்டில் லாபமாக ரூ.5.32 லட்சம் பெறலாம். இரண்டாமாண்டில் ரூ 10.46 லட்சமும், மூன்றாமாண்டில் ரூ 15.23 லட்சமும் நான்காமாண்டில் ரூ.21.09 லட்சமும் ஐந்தாமாண்டில் லாபமாக ரூ.27.09 லட்சமும் பெறலாம்.
Story written by: Jayachandran
More From GoodReturns

வங்கி கடனை விட ஈஸி! உங்கள் PPF பணத்தை வைத்தே கடன் பெறலாம் - புதிய விதிமுறைகள் என்ன?

EMI-யும் கட்டியாச்சு,லாபமும் பார்த்தாச்சு! ரூ8 கோடியை வைத்து ரூ10 கோடி வீட்டை வாங்கிய சாதுர்ய நபர்!

தங்கம் விலை: திடீரென ரூட்டை மாற்றும் தங்கம்.. இப்போ தங்கம் வாங்குறது தான் புத்திசாலித்தனமா?

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

5 ஆண்டுகளில் ரூ.1 லட்சத்தை ரூ.25 லட்சமாக மாற்றிய பென்னி ஸ்டாக்: உங்க போர்ட்போலியோவுல இருக்கா?

பங்குச்சந்தை ஏறினாலும், இறங்கினாலும் கண்டுக்காதீங்க: சென்செக்ஸ் சொல்லி தரும் பாடம் இது தான்!!

ஆரம்பமே அட்டகாசம்: நிதியாண்டின் முதல் நாளில் பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு சர்ப்பிரைஸ்!!

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி!! சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!



Click it and Unblock the Notifications