நீங்கள் ஏதாவது தொழில் தொடங்க விரும்புகிறீர்களா? அப்படியென்றால் ஏதாவது பொருளை விற்கவோ அல்லது தயாரிக்கவோ செய்யலாம். ஆனால் அந்த பொருளுக்கு எல்லா காலத்திலும் மக்களிடையே கிராக்கி இருக்க வேண்டும்.
ஒரு புதிய தொழிலை தொடங்குவது என்பது பல்வேறு அபாயங்களுக்கு உட்பட்டதாகும். எனவே நீங்கள் தேர்வு செய்யும் பொருளானது சந்தையில் பிரபலமானதாகவும் தாக்குப்பிடிக்கக் கூடியதாகவும் இருக்க வேண்டும். அப்படியிருந்தால் தொழிலில் உள்ள அபாயங்கள் குறையும்.

ஆனியன் பேஸ்ட் அப்படிப்பட்ட ஒரு தொழிலாகும். யார் வேண்டுமென்றாலும் ஒரு யூனிட்டை அமைத்து ஆனியன் பேஸ்ட் தயாரித்து நல்ல லாபத்தை சம்பாதிக்கலாம். யார் வேண்டுமென்றாலும் இந்த யூனிட்டை அமைத்து எளிதாக நடத்தலாம்.
வெங்காயம் உற்பத்தி செய்யும் மாநிலங்கள்: இந்தியாவில் மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் தான் வெங்காயம் அதிகளவு உற்பத்தியாகிறது. இது தவிர உத்தரப் பிரதேசம், சத்தீஸ்கர், பிஹார், ஜார்க்கண்டிலும் வெங்காயம் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது.
இந்த நிலையில் காதி கிராமத் தொழில் ஆணையம் ஆனியன் பேஸ்ட் தயாரிப்பது பற்றி ஒரு புராஜக்ட் ரிப்போர்ட்டை தயாரித்துள்ளது. இதன்படி இந்தத் தொழிலை ரூ.4.19 லட்சம் முதலீட்டில் தொடங்கலாம்.
காதி கிராமத் தொழில் ஆணைய அறிக்கைப்படி ரூ.1 லட்சத்தில் ஒரு ஷெட்டை அமைத்துவிடலாம். ரூ.1.75 லட்சத்தில் வறுக்கும் பேன், ஸ்டீம் குக்கர், டீசல் பர்னஸ், ஸ்டெரிலைசிங் டேங்க், சிறிய பாத்திரங்கள், கோப்பைகள் வாங்கி விடலாம். மீதத் தொகையான ரூ.2.75 லட்சத்தில் வெங்காயம் உள்ளிட்ட மூலப் பொருட்களை வாங்கி தொழிலை நடத்தலாம்.
மார்க்கெட்டிங் அவசியம்: உற்பத்தி ஒருபுறம் இருந்தாலும் பேக்கிங், மார்க்கெட்டிங் உங்களது தயாரிப்பை பிரபலப்படுத்த உதவும். உங்களது தயாரிப்பை சோசியல் மீடியாவில் விளம்பரப்படுத்த வேண்டும். பின்னர் பிரபலமான வெப்சைட்கள் மற்றும் பிற தளங்களில் விளம்பரப்படுத்த குறிப்பிட்ட தொகையை செலவு செய்ய வேண்டும்.
சம்பாதிக்கும் வழி: முழுத் திறனுடன் வெங்காய பேஸ்ட்டை நீங்கள் தயாரித்தால் வருடத்துக்கு ரூ.7.50 லட்சம் அளவுக்கு விற்பனை செய்யலாம். இதில் எல்லா செலவுகளையும் கழித்துவிட்டால் நிகர லாபமாக ரூ.1.48 லட்சம் கிடைக்கும்.
உற்பத்தியையும் விற்பனையையும் பொறுத்து உங்களுக்கு லாபம் கிடைக்கும். பிசினஸ் டு பிசினஸ் மற்றும் டைரக்ட் டு நுகர்வோர் போன்ற அனைத்து வடிவங்களிலும் நீங்கள் நல்ல விற்பனையை மேற்கொண்டால் நல்ல லாபத்தை ஈட்டலாம்.
Story written by: I.Jayachandran


Click it and Unblock the Notifications