இப்போது வரும் ஸ்மார்ட் போன்கள் எல்லாம் மிகவும் விலை உயர்ந்தவையாக உள்ளன. தப்பித்தவறி கைதவறி கீழே விழுந்தால் டச் ஸ்கிரீன் உடைந்து விடக்கூடும். இதனால் காஸ்ட்லியான செல்போன்கள் வேஸ்ட் ஆகிவிடும்.
இதனால் செல்போன்களுக்கு உறுதியான கவர்கள் போடுவது மட்டுமல்லாமல் டச் ஸ்கிரீனை பாதுகாக்க டெம்பர்டு கொரில்லா கிளாஸ் போடுகின்றனர். செல்போன் கீழே விழுந்தாலும் டச் ஸ்கிரீன் உடையாமல் இந்த கிளாஸ் பாதுகாக்கின்றது.

டெம்பர்டு கிளாஸ் போன்ற ஸ்மார்ட்போன் பாகங்கள் இப்போது மிகவும் பிரபலமாக விட்டன. டெம்பர்டு கிளாஸ்கள் பல விதமான பிரேக்கிங் டெஸ்ட், டைமன்ஷன் செக்கிங் பரிசோதனைகளைக் கடந்துதான் விற்பனைக்கு வருகின்றன.
சிலிக்கானில் தயாரிக்கப்பட்ட இந்த டெம்பர்டு கிளாசில் கூடுதல் பாதுகாப்பாக ஒரு பசை லேயரும் உள்ளது. இந்த டெம்பர்டு கிளாஸ் தயாரிப்பில் இந்த பசை லேயர் முக்கிய பங்கையாற்றுகிறது.
டெம்பர்டு கிளாஸ் தயாரிப்புத் தொழிலை உலகின் எந்த மூலையிலும் தொடங்கலாம். எங்கும் விற்கலாம். வெளிநாடுகளுக்கும் தரமான கிளாஸ்களை ஏற்றுமதி செய்யலாம். இதற்காக மெனக்கெட்டு ஒரு கடை அல்லது அலுவலகம் திறக்கத் தேவையில்லை.
டெம்பர்டு கிளாஸ் அதன் கடினத்தன்மைக்காக பல்வேறு பயன்பாடுகளுக்காக பயன்படுத்தப்படுகிறது. மொபைல் டெம்பர்டு கிளாஸ் தொழிலை தொடங்குவது மிகவும் எளிதானது. வீட்டிலிருந்தே டெம்பர்டு கிளாஸ் உற்பத்தி தொழிலை செய்யலாம். ஒரு குறிப்பிட்ட வெப்பநிலையில் பல கெமிக்கல் பிராசஸ் மூலம் இந்த டெம்பர்டு கிளாஸ் தயாரிக்கப்படுகிறது.
டெம்பர்டு கிளாஸ் உடைந்தால் அது சிறுசிறு துகள்களாக பிரியும். சாதாரண கண்ணாடி உடைந்தால் கூர்மையான செதில்களாக பிளக்கும். ஆனால் டெம்பர்டு கிளாஸ் பாதுகாப்பானது. கண்ணாடி இயற்கையிலேயே உடையும் தன்மையுடையது. ஆனால் அதன் கடினத்தன்மையை அதிகரிப்பதற்காக டெம்பர்டு கிளாஸ்கள் சிறப்பான முறைகளில் தயாரிக்கப்படுகின்றன.
மிக அதிக வெப்ப நிலையில் டெம்பர்டு கிளாஸ் தயாரிக்கப்படுவதால் சாதாரண கண்ணாடிகளை விட பன்மடங்கு வலுவானது. இந்த டெம்பர்டு கிளாஸ் வலுப்படுத்தப்பட்டதும் சூடு மற்றும் அதிர்வைத் தாங்கக் கூடியதாக மாறிவிடும். சாதாரண கண்ணாடியை விட நான்கைந்து மடங்கு பலமானது.
இந்த டெம்பர்டு கிளாஸ் தயாரிப்பு தொழிலைத் தொடங்க ரூ.2.5 முதல் ரூ.3 லட்சம் போதும். இந்தத் தொழிலில் மாதம் ரூ.3 முதல் ரூ.4 லட்சம் வரை சம்பாதிக்கலாம்.


Click it and Unblock the Notifications