பொதுவாக பலர் புதிதாக தொழில் தொடங்க வேண்டும் என்ற ஆசையில் எந்த தொழில் தொடங்கலாம் என்று சிந்தித்தே காலத்தை விரயமாக்கி விடுகின்றனர். பலர் குறைந்த முதலீட்டில் ஆனால் நல்ல லாபம் தரும் எந்த தொழிலை செய்யலாம் என்று அடிக்கடி யோசித்து வருகின்றனர். இது போன்ற நபர்களுக்கு குறைந்த முதலீடு தேவைப்படும். ஆனால் லட்சங்களில் வருமானம் கொட்டும் ஒரு சிறந்த தொழில் உள்ளது.
பொதுவாக நாம் தயாரிக்கும் தயாரிப்புக்கு எப்போதும் சந்தையில் நல்ல டிமாண்ட் இருக்க வேண்டும். அப்போதுதான் அந்த பொருள் வாயிலாக நல்ல வருமானம் ஈட்ட முடியும். அந்த வகையிலும் இந்த தொழில் மிகவும் சிறப்பானதாக இருக்கும்.

அந்த குறைந்த முதலீடு ஆனால் நல்ல வருவாய் தொழில் காட்டன் பட்ஸ் தயாரிப்புதான். பொதுவாக காட்டன் பட்ஸ் காதுகளை சுத்தம் செய்ய, மேக்கப் கசிவுகளை அகற்ற, கருவிகள், கைவினை பொருட்கள் சுத்தம் செய்வதற்கும் பட்ஸ் பயன்படுத்தப்படுகிறது. சிறிய பொருள்தான் ஆனால் உங்களுக்கு நல்ல வருமானத்தை கொடுக்கும்.
பட்ஸ் பொதுவாக சிறிய காகிதம் அல்லது பிளாஸ்டிக் அல்லது மர குச்சியில் இரு முனைகளிலும் மொட்டு மாதிரி பஞ்சு வைக்கப்பட்டு இருக்கும். இந்த தொழிலை தொடங்க உங்களுக்கு குறைந்த முதலீடு போதும், இந்த தொழிலை தொடங்க அரசாங்கமும் உதவும். ஆகையால் இந்த தொழிலை தொடங்குவது சிரமமான காரியமாக இருக்காது.
பட்ஸ் தயாரிக்கும் தொழிலுக்கு மூலப்பொருட்கள் என்றால் அது பஞ்சு மற்றும் குச்சி. சிறிய அளவில் பட்ஸ் தயாரிப்பு தொழிலை தொடங்கினால் பெரிய அளவில் கருவிகள் எதுவும் தேவைப்படாது. அதேசமயம் பெரிய அளவில் உற்பத்தி செய்ய போகிறீர்கள் என்றால் ஆட்டோமேட் எந்திரம் தேவைப்படும்.
காதி மற்றும் கிராம தொழில்கள் ஆணையத்தின் (கே.வி.ஐ.சி.) மதிப்பீட்டின்படி, பட்ஸ் தொழில் தொடங்க சுமார் ரூ.24.92 லட்சம் தேவைப்படும். இதில் எந்திரங்கள் மற்றும் ஒர்க்கிங் கேபிடல் உள்ளிட்டவை அடங்கும். உங்க சொந்த பணம் ரூ.2.49 லட்சத்தை மூலதனமாக போடுங்க. ரூ.16.43 லட்சம் கடன் வாங்கி முதலீடு செய்யுங்க. இது தவிர ஒர்க்கிங் கேபிடலாக ரூ.6 லட்சம் தேவைப்படும்.
தொழில் தொடங்குவதற்காக பிரதமர் மந்திரி முத்ரா திட்டத்தின்கீழ் வங்கிகளில் நீங்கள் ரூ.10 லட்சம் வரை கடன் பெறலாம். இந்த கடனை பெற எந்த பிணையமும் தேவையில்லை என்பதால், எந்த பிரச்சினையும் இல்லாமல் பணம் வழங்கப்படும்.
உங்கள் லாபம் காட்டன் பட்ஸின் ஆண்டு உற்பத்தி திறன் மற்றும் அதன் தரம் ஆகியவற்றை பொறுத்தது. கே.வி.ஐ.சி.யின் காட்டன் பட்ஸ் உற்பத்தி வணிகம் தொடர்பான ஐந்தாண்டுக்கான லாப மதிப்பீட்டின்படி, முதல் ஆண்டில் உங்களுக்கு நிகர லாபமாக ரூ.2.92 லட்சம் கிடைக்கும். இரண்டாவது ஆண்டில் நிகர லாபமாக ரூ.5.88 லட்சம் கிடைக்கும் மூன்றாவது மற்றும் நான்காவது ஆண்டில் முறையே ரூ.8.88 லட்சம் மற்றும் ரூ.11.70 லட்சம் கிடைக்கும். ஐந்தாவது ஆண்டில் ரூ.14.49 லட்சத்தை நிகர லாபமாக எடுக்கலாம். காட்டன் பட்ஸ் தொழில் தொடங்கி நல்ல வருமானம் ஈட்டுங்க.
More From GoodReturns

அப்புறம் பாத்துக்கலாம்னு அசால்ட்டா இருக்காதீங்க! 5 வருஷம் லேட் பண்ணா ரூ3கோடி காலி.. SIP ரகசியம்?

ரூ.666 இருந்தால் போதும் ரூ.1 கோடி இலக்கை எட்டலாம்…!! அட இவ்வளவு ஈஸியான வழி இருக்கா?

முகேஷ் அம்பானிக்கு ரூ.1 லட்சம் கோடி நஷ்டம்; 2 நாட்களில் 6% சரிவடைந்த ரிலையன்ஸ் பங்கு மதிப்பு!!

வங்கி கடனை விட ஈஸி! உங்கள் PPF பணத்தை வைத்தே கடன் பெறலாம் - புதிய விதிமுறைகள் என்ன?

EMI-யும் கட்டியாச்சு,லாபமும் பார்த்தாச்சு! ரூ8 கோடியை வைத்து ரூ10 கோடி வீட்டை வாங்கிய சாதுர்ய நபர்!

5 ஆண்டுகளில் ரூ.1 லட்சத்தை ரூ.25 லட்சமாக மாற்றிய பென்னி ஸ்டாக்: உங்க போர்ட்போலியோவுல இருக்கா?

பங்குச்சந்தை ஏறினாலும், இறங்கினாலும் கண்டுக்காதீங்க: சென்செக்ஸ் சொல்லி தரும் பாடம் இது தான்!!

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?



Click it and Unblock the Notifications