Business Idea : காலேஜ் படிக்கும்போதே பிசினஸ்.. கைநிறைய சம்பாதிக்க சூப்பர் ஐடியா..!!

இன்றைய இளம் தலைமுறையினர் எதையும் வேகமாக கற்றுக்கொள்ளும் திறமை உடையவர்களாக இருப்பது மட்டும் அல்லாமல் கைக்கு எட்டும் தூரத்தில் அனைத்து வாய்ப்புகளையும் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ள தொழில்நுட்ப உதவிகள் அவர்களுக்கு கைகொடுக்கிறது.

இந்த நிலையில் இன்று பலர் கல்லூரி படிக்கும்போதே பிசினஸ் செய்து தங்கள் சொந்த காலில் நிற்க விரும்புகின்றனர். அப்படியோசிக்கும் நபரில் நீங்களும் ஒருவர் என்றால், முதலீடுகள் ஏதுமில்லாமல், உங்கள் படிப்பைக் கெடுக்காத சில பிசினஸ் ஐடியாக்கள் உள்ளன.

 ப்ரீலான்ஸ் கன்டென்ட் ரைட்டிங்

ப்ரீலான்ஸ் கன்டென்ட் ரைட்டிங்

ஃபீரிலான்ஸர் கன்டென்ட் ரைட்டிங் என்பது தோன்றுவதெல்லாம் எழுதுவது இல்லை. வணிக நிறுவனங்கள், அவர்களின் பொருட்களை மக்கள் வாங்கும்படி கவர்ச்சியான வாக்கியங்கள் அல்லது ஐடியாக்களை எழுதி கொடுக்கும் ஒரு கிரியேட்டிவான தொழில் வாய்ப்பாகும்.

குறிப்பாக பத்திரிக்கை நிறுவனங்கள், வணிக நிறுவனங்களுக்கு சில கட்டுரைகளை எழுதிக் கொடுக்கலாம். அதற்கு உங்களுக்குத் தேவையான முதல் விஷயம் ஒரு லேப்டாப் மற்றும் கிரியேட்டிவ் எண்ணங்கள் மற்றும் போதுமான அறிவும் தான். இதை நீங்கள் வீட்டிலிருந்தே கூட செய்யலாம். அதற்கு அந்நிறுவனங்கள் உங்களுக்கு பணமும் கொடுக்கும்.

 Event Management பிரிவு

Event Management பிரிவு

இன்று பிறப்பு முதல் கல்யாணம், பர்த்டே பார்டி என பல விஷயங்களுக்கு மக்கள் ஒரு குட்டி நிகழ்ச்சியை நடத்தி விடுகின்றனர். அதிலும் இப்படி அடிக்கடி ஒவ்வொரு விசேசங்களுக்கும் நிகழ்ச்சி நடத்த அவர்களுக்கு போதுமான நேரம் இல்லாததால் Event management நிறுவனங்களைத்தான் அணுகுகிறார்கள்.

இந்த தொழில் தொடங்கவும் கிரியேட்டிவ் ஐடியா மிகவும் முக்கியம், மேலும் உங்கள் நண்பர்களுடன் இணைந்து சரியான குழு முயற்சியுடன், வெறும் குறைந்த முதலீட்டில் நீங்கள் இந்தத் தொழிலை தொடங்கலாம்.

இதை முழு நேரமாக செய்தால் கட்டாயம் கல்வி பாதிக்கும், ஆனால் பார்ட்டைம்-ல் செய்தால் கட்டாயம் லாபத்தை பெற முடியும்.

 SEO தான் எல்லாம்

SEO தான் எல்லாம்

நீங்கள் ஒரு விஷயத்தை கூகுளில் தேடினால், பதிவிடப்படும் முதல் வார்த்தையைப் பொறுத்து, உங்கள் தேடுதல்களுக்கான ஆஃப்சன்களை கூகுளே உங்களுக்குக் கொடுக்கும். அதில் என்ன பெரிய விஷயம் என்று நீங்கள் நினைக்கலாம்.

பல வணிக நிறுவனங்கள் அவர்களின் பொருட்களை இணையத்தில் விற்பனை செய்து வருவதால், கூகுளில் எந்த வார்த்தையை டைப் செய்தாலும், பரிந்துரைகளில் அவர்களின் தயாரிப்புகளை கூகுளில் இடம்பெற வைக்க பல யுக்திகளை பயன்படுத்துகின்றனர். அதில் இந்த SEO - Search engine optimization முக்கிய பங்கு வகிக்கிறது.

இதில் நீங்கள் கொடுக்கும் வார்த்தைகள் அதிகப் பரிந்துரைகளைப் பெற்று நிறுவனத்தின் வணிகத்தை கூட்ட உதவினால், அவ்வணிக நிறுவனங்கள் உங்களுக்கு நல்ல தொகையைத் தரும்.

 வெப் டைசன் மற்றும் வெப் டெவலப்மென்ட்

வெப் டைசன் மற்றும் வெப் டெவலப்மென்ட்

இன்று எல்லாமே டிஜிட்டல் மயம் என்பதால், நிறுவனங்கள் வாடிக்கையாளர்களை கவரும் வண்ணம் அதன் இணையதளம் மற்றும் அதன் பங்கங்கள் இருப்பதை விரும்புகின்றனர்.

அதன்படி நிறுவனத்தின் இணையதளம் மக்கள் சுலபமாகவும், விரைவாகவும் செயல்படும் விதத்தில் இருப்பதையே விரும்புவதால், அதனை உருவாக்கும் வேலைக்கும் டிமாண்ட் அதிகம்தான்.

நீங்கள் இந்த இணைய வடிவமைப்பு மற்றும் அதன் மேம்பாட்டில் நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி ஒரு நிறுவனத்திற்கான நவீன இணையதளத்தை உருவாக்கினாலே சுலபமாக பணம் சம்பாதிக்க முடியும்.

 ஆன்லைன் கல்வி

ஆன்லைன் கல்வி

ஆன்லைன் மூலம் பிசினஸ் செய்ய விரும்பினால் இது ஒரு நல்ல தேர்வாக இருக்கும். ஏனெனில் உங்கள் கையில் இருக்கும் மொபைல் ஃபோனைப் பயன்படுத்தியே இத்தொழிலை தொடங்கலாம்.

யூடியூப் சேனலைத் தொடங்கி அதில் பிசினஸ் ஐடியாக்கள், கல்வி சார்ந்த வகுப்புகள், மக்களுக்கு அதிகம் பயன்படும் வகுப்புகளை மக்களை கவரும் விதத்தில் நீங்கள் வீடியோவாகப் பதிவு செய்து வெளியிட்டால், கண்டிப்பாக உங்கள் விடியோக்களுக்கு வரவேற்பு கிடைக்கும்.

இதற்கு சிறிது காலம் எடுத்தாலும், அதிக பார்வையாளர்களை நீங்கள் பெற்றுவிட்டால் யூடியூபே உங்களுக்கு பணத்தை போட்டுவிடும்.

 போட்டோகிராபி

போட்டோகிராபி

இன்று அனைவரின் கைகளிலும் சிறப்பான கேமரா கொண்ட போன் உள்ளது, இதேபோல் கல்லூரி மாணவர்களிடம் லேப்டாப் பெரும்பாலும் இருக்கும்.

 

இதை அடிப்படையாக கொண்டு ஆன்லைனில் இலவச போட்டோகிராபி மற்றும் எடிட்டிங் கோர்ஸ்களை கற்றுக்கொண்டு எளிதாக போட்டோகிராபி செய்யலாம். உங்களுக்கு புதிய வாடிக்கையாளர் கிடைக்கும் வரையில் நீங்கள் எடுத்த போட்டோ மற்றும் எடிட்டிங்-ஐ சமுகவலைத்தளத்தில் உங்கள் லோகோ போன் நம்பர் உடன் பதிவிடுங்கள் கட்டாயம் வாய்ப்பு கிடைக்கும்.

இதில் எந்த தொழில் செய்தாலும் கல்வியை கைவிட வேண்டாம், கல்வி உங்களுக்கு பெரிய வாய்ப்புகளை தேடித்தரும் என்பதை மறந்துவிட வேண்டாம்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+