ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியாக இருப்பது மட்டும் அல்லாமல் சுமார் 47 கோடி வாடிக்கையாளர்களுக்குச் சேவை அளித்து வருகிறது.
சொல்லப்போனால் இந்தியாவின் ஒவ்வொரு குடும்பமும் எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளராக உள்ளது. எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர் சேவை, டிஜிட்டல் சேவை ஆகியவற்றில் தற்போது தனியார் வங்கிக்கு இணையாக வேகமாக வளர்ந்து வருகிறது, மேலும் சமீபத்திய காலாண்டுகளில் அதிக லாபத்தையும், குறைந்த அளவிலான வாராக் கடன் அளவுகளையும் பதிவு செய்தது.
இதனால் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின் எதிர்காலம் குறித்து முதலீட்டாளர்கள் உற்சாகமாகவும், நம்பிக்கை உடனும் உள்ளனர். இந்த நிலையில் இந்தியா நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா உடன் வர்த்தகம் செய்யும் வாய்ப்பு உங்களுக்கு உள்ளது என்றால் நம்ப முடியுமா..? அதிலும் முக்கியமாக இந்த வர்த்தகம் மூலம் பல லட்சம் ரூபாயை ஒவ்வொரு மாதமும் சம்பாதிக்க முடியும் என்பது உங்களுக்குத் தெரியுமா..?
ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா
ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா-வுக்கு நாடு முழுவதும் 28000 வங்கி கிளைகள் உள்ளது, இதில் பெரும்பாலான வங்கி கிளைகள் வாடகை அல்லது குத்தகை கட்டிடத்தில் இயங்கி வருகிறது. இந்த நிலையில் வங்கி வர்த்தகம் மட்டும் அல்லாமல் வங்கி கிளை இருக்கும் வர்த்தகப் பகுதிகளை அடிப்படையில் வங்கி கிளை இடமாற்றம் அடைந்துகொண்டே இருக்கும்.
டென்டர் விண்ணப்பம்
இதுதான் மக்கள் பணம் சம்பாதிக்கக் கூடிய இடம். ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கி கிளையை மாற்ற நினைக்கும் போது டென்டர் வாயிலாகத் தான் இடத்தைத் தேர்வு செய்யும், சில நேரத்தில் வங்கி நிர்வாகம் நிலமாகவோ அல்லது கட்டிடமாகவோ கோரும். இந்த நேரத்தில் வங்கிகளுக்குத் தேவையான இடம் அல்லது கட்டிடம் உங்களிடம் இருந்தால் டென்டரில் விண்ணப்பம் செய்து வங்கியுடன் வாடகை அல்லது குத்தகை ஒப்பந்தத்தைச் செய்யலாம்.
வாடகை ஒப்பந்தம்
எஸ்பிஐ வங்கி பெரு நகரங்களில் 20000 முதல் 6 லட்சம் வரையிலான தொகையை ஒரு மாத வாடகையாகச் செலுத்துகிறது. இது இடம் அமைந்திருக்கும் பகுதி, அளவு, பிற வசதிகள் அடிப்படையில் மாறும். இதேபோல் கிராமப் பகுதிகளில் இந்த வாடகை அளவு 5000 முதல் 40000 ரூபாய் வரையில் இருக்கும்.
குத்தகை காலம்
இதேபோல் எஸ்பிஐ வங்கி கிளையின் குத்தகை காலம் 5 முதல் 15 வருடம் வரையில் இருக்கும். மேலும் இந்தக் குத்தகை காலம் இருதரப்பு மத்தியில் ஒப்புதல் அடிப்படையில் நீட்டிக்கப்படும். இதேபோல் எஸ்பிஐ வங்கி முதல் 30 முதல் 45 நாட்களுக்கு வாடகை செலுத்தி, இக்காலகட்டத்தில் வங்கி கிளையின் புதுப்பிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும்.
அடிப்படை தேவைகள்
தற்போது எஸ்பிஐ தளத்தில் இருக்கும் சில குத்தகை அறிவிப்புகளின் படி எஸ்பிஐ சில அடிப்படை வசதிகளை முக்கியமானதாகப் பார்க்கிறது. இந்த வகையில் ஒரு சொத்து உரிமையாளரிடம் ஒப்பந்தம் செய்யும் போது, இந்தச் சொத்தில் போதுமான வாகன நிறுத்துமிடம், தரை தளத்தில் உள்ள கட்டிடம், 24 மணிநேர தண்ணீர் வசதி, ஜெனரேட்டர் பவர் பேக்-அப், மின்சார இணைப்பு, ready for possession மற்றும் 10 அடிக்கு மேல் உள்ள முன் வளாகம் ஆகியவை அடங்கும்.
இணைய முகவரி
நீங்களும் எஸ்பிஐ உடன் உங்கள் கட்டிடத்தை வாடகைக்கு விட வேண்டும் என்றால் https://sbi.co.in/web/sbi-in-the-news/procurement-news இந்த இணைய முகவரிக்கு சென்று உங்கள் பகுதியில் எந்த டென்டர் உள்ளது என்பதைச் செக் செய்யுங்கள்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!



Click it and Unblock the Notifications