இந்தியாவின் வடக்கு மண்டலத்தில் இதுவரை இல்லாத மிகப் பெரிய ஆடம்பர வீட்டு விற்பனை ஒப்பந்தம் ஒன்றில், டெல்லி-என்சிஆர் பகுதியைச் சேர்ந்த ஒரு தொழிலதிபர், குருகிராமில் உள்ள டிஎல்எஃப் (DLF) நிறுவனத்தின் 'தி டாலியாஸ்' (The Dahlias) என்ற புதிய திட்டத்தில் சுமார் ரூ.380 கோடி மதிப்புள்ள 4 உயர்தர அடுக்குமாடிக் குடியிருப்புகளை வாங்கியுள்ளார். இந்த ஒப்பந்தம் வட இந்தியாவில் பதிவான மிக விலையுயர்ந்த குடியிருப்பு ஒப்பந்தமாக கருதப்படுகிறது.
சந்தை தகவல்களின்படி, இந்த ஒப்பந்தத்தை ரியல் எஸ்டேட் ஆலோசனை நிறுவனமான ரிஸின் அட்வைசரி (Rizin Advisory) ஏற்பாடு செய்துள்ளது. இந்த நிறுவனத்தின் நிறுவனர் ஷிதிஜ் ஜெயின், இந்த அடுக்குமாடி குடியிருப்புக்கான தொகையை உறுதிப்படுத்தியுள்ளார்.

அக்டோபர் முதல் வாரத்தில் முடிவடைந்த இந்த ஒப்பந்தம், 4 அடுக்குமாடிக் குடியிருப்புகள் ஒரே பெரிய இல்லமாக இணைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு குடியிருப்பும் சுமார் 9,600 சதுர அடி பரப்பளவு கொண்டதாகும். இதனால், இணைக்கப்பட்ட வீட்டின் மொத்தப் பரப்பளவு சுமார் 38,400 சதுர அடியாக உயர்ந்துள்ளது. இதன் விலை ஒரு சதுர அடிக்கு கிட்டத்தட்ட ரூ.1 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது வட இந்தியாவில் இதுவரையிலான அதிகபட்ச விலையாக பார்க்கப்படுகிறது.
திட்டத்தின் விவரங்கள் : இந்த குடியிருப்புகளை வாங்கியவர் பிளாஸ்டிக், ரசாயனங்கள் மற்றும் உரங்கள் உட்படப் பல துறைகளில் வணிக நலன்களைக் கொண்ட, டெல்லி-என்சிஆர் பகுதியைச் சேர்ந்த ஒரு முன்னணி தொழில் குடும்பத்தைச் சேர்ந்தவர். அவர் ஏற்கனவே டிஎல்எஃப்-இன் மற்றொரு ஆடம்பரத் திட்டமான 'தி கேமலியாஸ்' திட்டத்தில் ஒரு வீட்டை வைத்திருக்கும் நிலையில், இந்த புதிய குடியிருப்பை வாங்கியுள்ளார்.
இது, தனது வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் நோக்கத்தில் அவர் குடியிருப்பை வாங்கியுள்ளதாக சந்தை தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம் என்சிஆர் பகுதியில் மிகவும் ஆடம்பர வீடுகளுக்கான தேவை அதிகரித்து வருவதை காட்டுகிறது. டிஎல்எஃப் நிறுவனம் இந்த ஒப்பந்தம் குறித்து எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை.
'தி டாலியாஸ்' திட்டத்தின் சிறப்பம்சங்கள் என்ன..?: 'தி டாலியாஸ்' என்பது டிஎல்எஃப் நிறுவனத்தின் மிகவும் லட்சியமான ஆடம்பரத் திட்டங்களில் ஒன்றாகும். இது சுமார் 7.5 மில்லியன் சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ளது. கோல்ஃப் கோர்ஸ் சாலையில் உள்ள டிஎல்எஃப்5 கோல்ஃப் லிங்க்ஸ் பகுதிக்குள் அமைந்துள்ள இந்தத் திட்டத்தில், 29 தளங்கள் கொண்ட 8 கோபுரங்கள் உள்ளன.
அதில் மொத்தம் 420 மிகவும் ஆடம்பர வீடுகளும், 15 டூப்ளக்ஸ் பென்ட்ஹவுஸ்களும் உள்ளன. இந்த ஆண்டு தொடக்கத்தில், 'தி டாலியாஸ்' திட்டத்தின் முன் வெளியீட்டு விற்பனை மூலம் ரூ.11,816 கோடி ஈட்டியதாக டிஎல்எஃப் அறிவித்தது. இந்த தொகை இந்திய குடியிருப்புச் சந்தையில் இதுவரை காணப்படாத மிகப் பெரிய விற்பனை சாதனைகளில் ஒன்றாகும்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications