மும்பை: பாலிவுட் நடிகர்கள் பலரும் நடிப்பை தாண்டி பல்வேறு தொழில்களிலும் முதலீடு செய்துள்ளனர். சிலர் ஃபேஷன் மற்றும் அழகு சாதன பிராண்டுகளை கூட நடத்தி வருகின்றனர். அந்த வகையில் பாலிவுட் சூப்பர் ஸ்டாராக கருதப்படும் சல்மான் கான் நடிப்பை தாண்டி எந்தெந்த தொழில்களில் எல்லாம் முதலீடு செய்து இருக்கிறார் அவருக்கு சொந்தமாக எத்தனை பிராண்டுகள் இருக்கின்றன என்பதை தற்போது தெரிந்து கொள்ளலாம்.
சல்மான் கான் 2900 கோடி ரூபாய் சொத்துக்கு சொந்தக்காரராக இருக்கிறார். இவர் படங்களில் நடிப்பதை தாண்டி பட தயாரிப்பு நிறுவனம் மற்றும் பர்சனல் கேர் பிராண்ட்களின் உரிமையாளராகவும் செயல்பட்டு வருகிறார்.

படத் தயாரிப்பு: சல்மான் கான் ஃபிலிம்ஸ் என்பது ஒரு பட தயாரிப்பு நிறுவனமாகும். 2011 ஆம் ஆண்டு சல்மான்கான் தன்னுடைய பெயரிலேயே ஒரு பட தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினார். இந்த நிறுவனம் பல்வேறு வெற்றிகரமான படங்களையும் தயாரித்து வழங்கியுள்ளது. குறிப்பாக சில்லர் பார்ட்டி என்ற தேசிய விருது பெற்ற படத்தையும் இந்த நிறுவனம் தயாரித்துள்ளது.
ஆடை விற்பனை நிறுவனம்: Being Human என்ற பிராண்டை நாம் பரவலாக பார்த்திருக்கிறோம். ஆனால் அது சல்மான் கானுக்கு சொந்தமானது என்பது நம்மில் பலருக்கு தெரியாது. கடந்த 2012 ஆம் ஆண்டு சல்மான் கான் தன்னுடைய Being Human என்ற ஆடை நிறுவனத்தை தொடங்கினார்.
ஏற்கனவே Being Human என்ற பெயரில் தொடங்கப்பட்ட ஒரு அறக்கட்டளைக்கு நிதி உதவிகளை இந்த ஆடை விற்பனைகள் மூலம் அவர் வழங்கி வருகிறார். இந்த நிறுவனம் இந்தியா மட்டுமின்றி மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் ஐரோப்பிய நாடுகளிலும் தன்னுடைய வலுவான தொழிலை நடத்தி வருகிறது.
உடற்பயிற்சி மையம்: எப்பொழுதும் ஃபிட்னஸுக்கு பெயர் போனவர் தான் சல்மான் கான். இந்த வகையில் பெரும்பாலான இளைஞர்களுக்கு ஒரு முன்னுதாரணமாகவும் இருக்கிறார். இதனை அடிப்படையாகக் கொண்டு தான் அவர் எஸ்கே 27 என்ற பெயரில் பல்வேறு நகரங்களிலும் உடற்பயிற்சி மையங்களை நடத்தி வருகிறார். 2019 ஆம் ஆண்டு முதல் இந்த உடற்பயிற்சி நிலையங்களை செயல்படுத்தி வருகிறார்.
பெர்சனல் கேர்: FRSH என்பது சல்மான் கானுக்கு சொந்தமான ஒரு பர்சனல் கேர் பிராண்ட் ஆகும். இது பிரத்யேகமாக பாடி ஸ்பிரே விற்பனையில் ஈடுபட்டுள்ளது. அதுமட்டுமின்றி சல்மான் கான் யாத்ரா டாட் காம் என்ற ஒரு டிராவல் கம்பெனியில் 5 சதவீத பங்குகளை வாங்கி தனக்கு சொந்தமாக வைத்திருக்கிறார். அதே போல சிங்காரி என்ற ஒரு குறுகிய வீடியோ பகிர்வு தளத்திலும் கணிசமான பங்குகளை வாங்கி வைத்திருக்கிறார்.
More From GoodReturns

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!



Click it and Unblock the Notifications