பிரபல தொழிலதிபர் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் அட்லஸ் ராமச்சந்திரன் காலமானார். அவருக்கு வயது 80.
தொழிலதிபர் மற்றும் தயாரிப்பாளர் அட்லஸ் ராமச்சந்திரன் காலமான தகவல் அறிந்ததும் திரையுலகினர் மற்றும் தொழிலதிபர்கள் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
அட்லஸ் ராமச்சந்திரன் தொழிலதிபர் மட்டுமின்றி பல திரைப்படங்களை தயாரித்துள்ளார் என்றும் ஒரு சில திரைப்படங்களில் நடித்துள்ளார் என்றும் ஒரே ஒரு திரைப்படத்தை இயக்கி உள்ளார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அட்லஸ் ராமச்சந்திரன்
பிரபல மலையாள சினிமா தயாரிப்பாளர் மற்றும் நடிகரான அட்லஸ் ராமச்சந்திரன் துபாயில் தொழிலதிபராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் தயாரித்த திரைப்படங்கள் பல மிகப்பெரிய வெற்றி பெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.
உடல்நலக்குறைவு
இந்த நிலையில் அட்லஸ் ராமச்சந்திரன் துபாயில் உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று காலமானார். அவரது மறைவை குடும்பத்தினர்கள் உறுதி செய்துள்ளனர். கடந்த சில நாட்களாக அட்லஸ் ராமச்சந்திரன் உடல்நலக்குறைவு காரணமாக துபாயில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததாகவும் நேற்று அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால் அவர் காலமானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அட்லஸ் ஜூவல்லரி
அட்லஸ் ஜூவல்லரி என்ற நகைக்கடையை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டில் பல ஆண்டுகளாக அவர் நடத்தி வந்தார் என்பதும் அது மட்டுமின்றி பல மலையாளத் திரைப்படங்களை தயாரித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவரது தயாரிப்பில் உருவான திரைப்படத்தில் மம்முட்டி, மோகன்லால் உள்பட பல பிரபல மலையாள நடிகர்கள் நடித்து உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர் பல திரைப்படங்களை விநியோகம் செய்துள்ளார் என்பதும் ஒரு சில படங்களில் குணசித்திர வேடத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர் ஒரே ஒரு திரைப்படத்தை இயக்கி உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆரம்பகால வாழ்க்கை
அட்லஸ் ராமச்சந்திரன் அவர்கள் பட்ட மேற்படிப்பை முடித்த உடன் முதலில் கனரா வங்கியில் பணி புரிந்தார். அதன்பின் அவர் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, ஸ்டேட் பாங்க் ஆப் திருவாங்கூர் உள்பட ஒரு சில வங்கிகளில் பணிபுரிந்தார். அதன்பின் அவர் துபாய் சென்று கமர்சியல் பாங்க் ஆப் குவைத் வங்கியில் பணி புரிந்தார். அதன் பின்னர் அவருக்கு சொந்த தொழில் செய்யவேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டதையடுத்து குவைத்தில் அட்லஸ் ஜூவல்லரி என்ற நகை கடையை திறந்து நகை வணிகம் செய்தார்.
More From GoodReturns

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

மினி பாகிஸ்தான்? அடுத்தடுத்த சர்ச்சையில் TCS, டெக் மகேந்திரா! ஐடி நிறுவனங்களில் என்ன தான் நடக்கிறது?

அட்சய திருதியை தங்கம் விற்பனை: தள்ளுபடிகளை வாரி வழங்கும் நகை கடைகள்!!

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

விஜய் -க்கு எம்.எல்.ஏ பதவியை தரப்போவது பெரம்பூரா? திருச்சி கிழக்கா? இது தான் கள நிலவரம்!!

ஸ்திரீ சக்தி SS 515 லாட்டரி: யாருக்கெல்லாம் அடித்தது ஜாக்பாட்!! முழு விவரம்



Click it and Unblock the Notifications