வசதி படைத்தவர்கள் தங்கள் பணத்தை தங்கம், பங்குச் சந்தை மற்றும் வீடுகளில் முதலீடு செய்வார்கள். தற்போது போர் பதற்றம் காரணமாக பங்குச் சந்தைகள் நிலவரம் ஏற்ற இறக்கமாக உள்ளது. இதனால் கோடீஸ்வரர்களின் பார்வை வீடுகள் மீது விழுந்துள்ளது.
மேலும் பெரும் கோடீஸ்வரர்கள் தங்களது தனிப்பட்ட பயன்பாடு அல்லது முதலீடு நோக்கம் அல்லது இரண்டுக்காகவும் உயர் ஆடம்பர வீடுகளை வாங்குகின்றனர். கொரோனாவுக்கு பிறகு உயர் ஆடம்பர வீடுகளுக்கான தேவை அதிகரித்துள்ளது.

இதனால் நாட்டின் முன்னணி டெவலப்பர்களும் உயர் சொகுசு வீடுகள் பிரிவில் சப்ளையை அதிகரித்து வருகின்றனர். இந்த ஆண்டில் உயர் ஆடம்பர வீடுகள் விற்பனை அளவு மற்றும் மதிப்பு அடிப்படையில் இதுவரை இல்லாத அளவுக்கு வளர்ச்சி கண்டுள்ளது.
ரியல் எஸ்டேட் ஆலோசனை முகமை நிறுவனமான அனராக் தரவுகளின்படி, 2023ம் ஆண்டின் முதல் 9 மாதங்களில் (ஜனவரி-செப்டம்பர்) நம் நாட்டில் உயர் சொகுசு வீடுகள் (ரூ.40 கோடிக்கும் மேல் மதிப்பிலான) விற்பனை 247 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த செப்டம்பர் வரையிலான 9 மாதங்களில் விற்கப்பட்ட உயர் ஆடம்பர வீடுகளின் மொத்த மதிப்பு ரூ.4,063 கோடியாக உயர்ந்துள்ளது. இது 2022ம் ஆண்டைக் காட்டிலும் சுமார் இரண்டரை மடங்கு அதிகமாகும்.
கடந்த ஆண்டில் ரூ.1,170 கோடி மதிப்புக்கே உயர் சொகுசு வீடுகள் கைமாறி இருந்தன. அதி ஆடம்பர வீடுகள் விற்பனை அளவு (எண்ணிக்கை) அடிப்படையிலும் உயர்ந்துள்ளது. 2022ம் ஆண்டில் நம் நாட்டுக்குள் மொத்தம் 13 உயர் சொகுசு வீடுகள் மட்டுமே விற்பனையாகி இருந்தது. ஆனால் இந்த ஆண்டின் முதல் 9 மாதங்களிலேயே அது போன்ற மொத்தம் 58 சொத்துக்கள் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
பொதுவாக உயர் ஆடம்பர வீடுகள் விற்பனை பெரும்பாலும் நாட்டின் பெரிய நகரங்களில் தான் நடைபெறும். ஏனென்றால் பெரிய நகரங்களில் நிலம் கிடைப்பது பெரிய விஷயம் மற்றும் நிலத்தின் மதிப்பு அதிகம். இது போன்ற நகரங்களில் தனி வீடுகளை காட்டிலும் அடுக்குமாடி குடியிருப்புகள் அதிகமாக விற்பனையாகின்றன.
கடந்த செப்டம்பர் வரையிலான 9 மாதங்களில் நடைபெற்ற 58 உயர் சொகுசு வீடுகள் விற்பனையில் 53 அடுக்குமாடி குடியிருப்புகள் என்பது குறிப்பிடத்தக்கது. எஞ்சிய 5 மட்டுமே பங்களாக்கள் என்பது குறிப்பிடத்தக்கது. உயர் ஆடம்பர வீடுகள் வாங்கியவர்களில் பெரும் பகுதியினர் தொழிலதிபர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
உயர் சொகுசு வீடுகள் விற்பனையில் 90 சதவீதத்துக்கு மேல் நாட்டின் நிதி தலைநகரமான மும்பையில் நடந்துள்ளது. மொத்தம் 58 உயர் ஆடம்பர வீடுகள் விற்பனையில் 53 மும்பையில் நடந்துள்ளது. நாட்டின் டாப் 5 உயர் சொகுசு வீடுகள் விற்பனையில் மலபார் ஹில்ஸில் உள்ள ரூ.369 கோடி மதிப்பிலான அபார்ட்மெண்ட் வீடு முதலிடத்தில் உள்ளது.
இரண்டாவது இடத்தில் அதே பகுதியில் உள்ள ரூ.263 கோடி மதிப்பிலான அபார்ட்மெண்ட் உள்ளது. டெல்லியின் கோல்ட் லிங்க்ஸில் உள்ள ரூ.160 கோடி மதிப்பிலான பங்களா 5வது இடத்தில் உள்ளது.
மொத்த உயர் ஆடம்பர வீடுகள் விற்பனையில் 79 சதவீதம் தொழிலதிபர்களால் நடந்ததுள்ளது. 16 சதவீத ஒப்பந்தங்கள் பல்வேறு துறைகளை சேர்ந்த நிபுணர்களால் முடிந்துள்ளது. எஞ்சிய 5 சதவீத உயர் சொகுசு வீடுகளை அரசியல்வாதிகள் மற்றும் பாலிவுட் பிரபலங்கள் வாங்கியுள்ளனர்.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications