சென்னை: சொந்த வீடு வாங்குவது என்பது பல இந்தியர்களின் கனவாக உள்ளது. ஆனால், கடந்த சில மாதங்களாக ஹவுசிங் மார்க்கெட் வரலாறு காணாத எழுச்சியை சந்தித்து வருகிறது. இது பலரை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. வீடுகளின் விற்பனை கடந்த பத்தாண்டுகளில் இல்லாத உயர்வை கண்டுள்ளது. அதே நேரத்தில், வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதங்களும் உயர்ந்து வருகின்றன. இந்த சூழ்நிலையில், உடனடியாக வீடு வாங்க வேண்டுமா? அல்லது, சிறந்த விலைக்கு வீடுகள் கிடைக்கும் வரை காத்திருக்க வேண்டுமா? என்ற என்ற ஐயம் பலரிடம் உள்ளது. இந்தக் கட்டுரையில், இந்தியாவின் ஹவுசிங் மார்க்கெட்டின் தற்போதைய நிலை குறித்துப் பார்ப்போம்.
ஹவுசிங் மார்க்கெட் இந்தியாவில் உயர்வைக் கண்டுள்ளது. ANAROCK தரவுகளின்படி, குடியிருப்பு அடுக்குமாடி வீடுகள் வேகமாக விற்பனை ஆகின்றன. 2023ஆம் ஆண்டு முதல் 2024ஆம் ஆண்டு வரை கிட்டத்தட்ட 5 லட்சம் யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது பத்தாண்டுகளில் இல்லாத உயர்வாகும். குருகிராமில், Godrej Properties தனது Godrej Zenith திட்டத்தை தொடங்கிய மூன்று நாட்களுக்குள் ரூ.3,000 கோடி மதிப்புள்ள வீடுகளை விற்பனை செய்துள்ளது. இது அந்நிறுவனத்தின் மிகவும் வெற்றிகரமான விற்பனையாகும்.

கடந்த மாதம், மும்பை 11,917 சொத்து பதிவுகளுடன் ரியல் எஸ்டேட் ஒப்பந்தங்களில் புதிய சாதனை படைத்தது. கூடுதலாக, இந்தியர்கள் பெரிய வீடுகளை வாங்கி வருகின்றனர், ரூ.1.5 கோடிக்கு மேல் விலையுள்ள அடுக்குமாடி வீடுகள் 2023 ஆம் ஆண்டில் முதன்முறையாக வேகமாக விற்பனை செய்யப்படும் பிரிவாக மாறியுள்ளன, என்று JLL இந்தியா தெரிவித்துள்ளது.
வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதங்களும் கடந்த வருடங்களில் எல்லாம் இல்லாத அளவுக்கு உயர்ந்து வருகிறது. இதனால் வீடு வாங்குபவர்கள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர். வீடு வாங்க சரியான நேரம் எது என்று இன்னும் தீர்மானிக்க முடியாதவர்களுக்கு, இந்த ஹவுஸிங் மார்கெட் பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பலருக்கும் வீட்டு விலைகள் எட்டா தூரத்திற்கு செல்வதற்கு முன்பு உடனடியாக வாங்க வேண்டுமா? அல்லது சொத்து சந்தை குறைந்து சிறந்த விலைக்கு கிடைக்க காத்திருக்க வேண்டுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. வலுவான தேவை காரணமாக, 2023ஆம் ஆண்டில் சுமார் 8 நகரங்களில் வீடுகள் விற்பனை பத்தாண்டுகளில் இல்லாத உயர்வைக் கண்டது.
2020-21 ஆம் ஆண்டில் வீடு வாங்குவது மிகவும் எளிதான விஷயமாக இருந்தது. வீட்டு விலைகள் குறைந்து பல கட்டுமான நிறுவனங்கள் தள்ளுபடிகளையும் இலவச சலுகைகளையும் வழங்கின என்று JLL நிறுவனத்தின் மதிப்பீடு கூறுகிறது. முன் எப்போதும் இல்லாத வகையில் வீட்டு உரிமையின் முக்கியத்துவத்தை வாடிக்கையாளர்கள் உணர்ந்துள்ளனர். வீடு வாங்குவதற்கான ஆர்வம் 2021-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் தொடங்கி தற்போது உச்சத்தை அடைந்துள்ளது என்று NoBroker அதன் 2023 ஆண்டு அறிக்கையில் கூறுகிறது. Credai, Colliers மற்றும் Liases Foras இன் அறிக்கையின்படி, கடந்த 2 ஆண்டுகளில், இந்தியாவின் முதல் 8 நகரங்களில் சொத்து விலைகள் சுமார் 20% உயர்ந்துள்ளன என்று தெரிவிக்கிறது.
பெங்களூரு, மும்பை, ஹைதராபாத் போன்ற நகரங்களில் தொடர்ந்து சொத்துக்களின் விலை அதிகரித்து வருகிறது. ஆனால் சில நகரங்களில் இது போன்ற சொத்துக்களின் விலை குறைந்துள்ளது. இனி வரும் காலங்களில் தொடர்ந்து ரியல் எஸ்டேட் விலை உயருமா.. இல்லை குறையுமா.. என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!



Click it and Unblock the Notifications