வீடு வாங்கப் போறீங்களா..? முக்கிய நகரங்களில் தாறுமாறாக உயர்ந்த விலை.. ஒரு சதுர அடி எவ்வளவு தெரியுமா?

மெட்ரோ நகரங்களில் வீட்டு விலைகள் கணிசமாக உயர்ந்துள்ளதால், நடுத்தர வர்க்கத்தினர் கவலையில் உள்ளனர். குறிப்பாக பெங்களூரு, மும்பை மற்றும் டெல்லி-NCR பகுதிகளில் கடந்த ஒன்றாண்டில் விலைகள் உயர்ந்துள்ளதாக Knight Frank Research நிறுவனத்தின் அறிக்கையில் தெரியவந்துள்ளது. கடந்த 12 மாதங்களில் டெல்லி-NCR மற்றும் பெங்களூரு பகுதிகளில் வீட்டு விலைகள் 14% வரை உயர்ந்துள்ளன. தற்போது ஒரு சதுர அடி டெல்லி-NCR பகுதியில் ரூ.5,535-ஆகவும், பெங்களூருவில் ரூ.7,052ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், ஹைதராபாத் பகுதியில் வீட்டு விலைகள் 11% உயர்ந்துள்ளன. மும்பையில் வீட்டு விலைகள் மேலும் உயர்ந்திருந்தாலும், இந்தியாவின் மிக உயர்ந்த வீட்டு விலைகள் கொண்ட நகராக மும்பையே உள்ளது. இங்கு வீட்டு விலை ஒரு சதுர அடிக்கு ரூ.8,532ஆக உள்ளது. இந்த அனைத்து மாற்றங்களும், பெரிய நகரங்களில் வீடு வாங்குவது அவ்வளவு எளிதல்ல என்பதை உணர்த்துகிறது.

வீடு வாங்கப் போறீங்களா..? முக்கிய நகரங்களில் தாறுமாறாக உயர்ந்த விலை.. ஒரு சதுர அடி எவ்வளவு தெரியுமா?

காஜியாபாத்தில் உள்ள NH-24 பைபாஸ் பகுதியில் கடந்த ஒரு ஆண்டில் வீட்டு விலைகள் சுமார் 30% வரை உயர்வை கண்டுள்ளன. இதனைத் தொடர்ந்து, ராஜ்நகர் எக்ஸ்டென்ஷன் மற்றும் கிரேட்டர் நொய்டா பகுதிகளிலும் விலை உயர்வு காணப்பட்டுள்ளது. தற்போது, இந்த பகுதிகளில் வீட்டு விலைகள் ஒரு சதுர அடிக்கு ரூ.5,500 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Knight Frank நிறுவனத்தின் அறிக்கையின்படி, பெங்களூரு நகரத்தில் வெள்ளைஃபீல்ட் (Whitefield) மற்றும் பானர்கட்டா ரோடு (Bannerghatta Road) பகுதிகளில் வீட்டு விலைகள் 18% வரை உயர்ந்துள்ளன. மரத்தஹல்லி, ராஜாஜிநகர், தனிசந்திரா மற்றும் தும்கூர் ரோடு ஆகிய பகுதிகளில் வீட்டு விலை உயர்வு 13% முதல் 15% வரை உயர்ந்துள்ளது. ஹைதராபாத் நகரத்திலும் வீட்டு விலைகள் தெற்குப்பகுதி மற்றும் கிழக்குப் பகுதிகளில் உயர்ந்துள்ளன.

குறிப்பாக, கிழக்கு ஹைதராபாத்தில் உள்ள எல்பி நகர் பகுதியில் வீட்டு விலை 11% உயர்ந்துள்ளது. தற்போது இங்கு வீட்டு விலை ரூ.6,950 முதல் ரூ.7,307 வரை உள்ளது. இந்த புள்ளி விவரங்கள், வளர்ந்து வரும் குடியிருப்புப் பகுதிகளில் வீட்டுத் தேவையும், முதலீட்டுத் தேவையும் விலை உயர்வை ஏற்படுத்தி வருவதாக கூறப்படுகிறது. மும்பை நகரத்தின் மையப் பகுதிகளில் வீட்டு விலைகள் மீண்டும் உயரும் நிலையை எட்டியுள்ளது. குறிப்பாக வாஷி பகுதியில் வீட்டு விலை அதிகரித்து, ஒரு சதுர அடிக்கு ரூ.20,000 வரை சென்றுள்ளது.

மேலும், விரார், கோரைகாவ் மற்றும் அந்தேரி பகுதிகளிலும் கடந்த 12 மாதங்களில் 6% வரை வீட்டு விலை உயர்ந்துள்ளது. இந்த தகவல்கள் வெளிவரும் நேரத்தில் மும்பை, பெங்களூரு, மற்றும் டெல்லி ஆகியவை உலகின் முதன்மை குடியிருப்பு விலை உயர்வு காணும் முன்னணி 15 நகரங்களில் இடம் பெற்றுள்ளன. 2025ஆம் ஆண்டின் தொடக்கத்தில் வெளியிடப்பட்ட ரியல் எஸ்டேட் கன்சல்டன்சி நிறுவனத்தின் அறிக்கையின் படி பெங்களூரு - 4வது இடம், மும்பை - 5வது இடம், டெல்லி - 15வது இடம் பிடித்துள்ளது. இந்த வளர்ச்சி, இந்தியாவின் முக்கிய நகரங்களில் வீட்டு முதலீட்டுக்கான தேவை மற்றும் மதிப்பை அதிகரிப்பதை குறிக்கிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+