சென்னை: கார் வாங்குவதை விடுத்து அந்த பணத்தை எஸ்ஐபி முறையில் முதலீடு செய்யுங்கள் எனக் கூறி ஒரு முதலீட்டு நிபுணர் நெட்டிசன்களின் எதிர்ப்பை பெற்றுள்ளார்ட்.
சௌரவ் தத்தா என்பவர் ஒரு முதலீட்டு நிபுணர். இவர் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் முதலீடு தொடர்பாக ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். ரவி என்பவரை உதாரணமாக கொண்டு அவர் வெளியிட்டுள்ள பதிவில் , "ரவி என்பவர் 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஒரு காரை வாங்குகிறார். ஐந்து ஆண்டுகளுக்கு இதற்காக அவர் மாதம் தோறும் 20000 ரூபாய் என்ற அளவில் இஎம்ஐ செலுத்துகிறார்.

அதே ரவி இந்த 20000 ரூபாய் இஎம்ஐ தொகையை ஐந்தாண்டுகளுக்கு நிஃப்டி இடிஎப் எஸ்ஐபியில் முதலீடு செய்திருந்தால்" என்னவாகி இருக்கும் என்பதை அவர் ஒப்பிட்டு இந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி ஐந்து ஆண்டுகளுக்கு மாதம் தோறும் 20000 ரூபாய் இஎம்ஐ செலுத்துவதன் மூலம் ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு அவரிடம் இருப்பது 4 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கார், அதுவே அவர் இந்த 20 ஆயிரம் ரூபாயை ஐந்தாண்டுகளுக்கு எஸ்ஐபி முறையில் நிஃப்டி இடிஎப்பில் முதலீடு செய்திருந்தால் அவருடைய வங்கி கணக்கில் 17 லட்சம் ரூபாய் இருந்திருக்கும் என தெரிவித்துள்ளார். வாழ்க்கை என்பது நாம் தேர்வு செய்யும் முடிவுகள் தான் என அவர் பதிவு செய்துள்ளார். அவருடைய இந்த தகவல் சில மணி நேரங்களிலேயே ஆயிரக்கணக்கானவர்களின் பார்வையை பெற்றுள்ளது.

சௌரவ் தத்தாவின் இந்த பதிவுக்கு ஆதரவும் எதிர்ப்பும் வந்துள்ளது. சமூக வலைத்தள பயன்பாட்டாளர்கள் அவருடைய இந்த அறிவுரையை ஏற்க மறுத்துள்ளனர். ஒரு பயனர் வாழ்க்கை என்பது வெறுமனே முதலீடு செய்வது மட்டுமே அல்ல, அனைத்தையும் முதலிடு செய்தால் எப்போது தான் அதனை அனுபவிப்பது என கேள்வி எழுப்பியுள்ளார்.
நீங்கள் இறக்கும் போது உங்கள் வங்கி கணக்கில் ஒரு குறிப்பிட்ட தொகையுடன் இறப்பது என்பது வாழ்க்கை கிடையாது, பணம் அனைத்தையும் எதிர்காலத்திற்காக சேமிக்க வேண்டும் என அவசியமில்லை உங்களுக்கு தேவைப்படுகின்ற பட்சத்தில் காரை வாங்கி பயன்படுத்துவது தான் சிறந்தது என ஒரு பயனர் தெரிவித்துள்ளார்.

சில பயனர்கள் கார் இல்லாமல் தற்காலத்தில் ஒரு குடும்பம் என்னென்ன பிரச்சனைகளை எதிர்கொள்கிறது என தெரிவித்துள்ளனர். அதாவது ரவியின் பெற்றோருக்கு ஒரு மருத்துவ அவசர நிலை ஏற்படுகிறது உடனடியாக ஆம்புலன்ஸ் வரவில்லை அந்த சமயத்தில் நல்ல வேலை அவரிடம் கார் இருக்கிறது அவர் அவருடைய பெற்றோரை காரில் அழைத்து சென்று உயிரை காப்பாற்றுகிறார் என பதிவு செய்துள்ளார்.



Click it and Unblock the Notifications