தீபாவளிக்கு தங்கம் வாங்குறீங்களா? கடைக்காரர் போடும் பில் சரியா? இந்த ஒரு ஃபார்முலாவை வச்சு கண்டுபிடிக்கலாம்!

வருகின்ற நவம்பர் 6-ஆம் தேதி என்று தந்தேராஸ் பண்டிகை கொண்டாடப்பட இருக்கிறது/ அன்றைய தினம் தங்கம் வாங்குவதை மக்கள் மங்களகரமானதாக கருதுவார்கள். அதிலிருந்து 2 நாட்களில் தீபாவளி பண்டிகையும் வரவிருக்கிறது. இதனால் தங்க விற்பனை சற்று அதிகமாக இருக்கும். தங்கத் தோடு, வளையல், நெக்லஸ் என எது வாங்கினாலும் சரி கடைக்காரர் தங்கத்தின் நிகர எடைக்கு மட்டும் பில் போட மாட்டார். கூடுதலாக சில கட்டணங்களையும் சேர்த்துக் கொள்வார்.

இதில் சிலவற்றை வாடிக்கையாளர்கள் செலுத்தி தான் ஆக வேண்டும். வேறு வழியே இல்லை. ஆனால் ஒரு சில நேரங்களில் கடைக்காரர் போடும் பில் சரியாக இருக்கிறதா? என்பதை நீங்களே தெரிந்து கொண்டு பிறகு பில் செலுத்தலாம்.

செய்கூலி: தங்க நகைகளுக்கான மேக்கிங் சார்ஜ் அதாவது செய்கூலி ஒவ்வொரு கடையையும் பொறுத்து மாறுபடும். முதல் முறை நகை வாங்குபவர்களுக்கு கூட இந்த கட்டணம் கடைக்கு கடை வேறுபடும் என்பது நன்றாகத் தெரியும். சில்லறை நகைக்கடைகளில் செய்கூலி மற்றும் சேதாரக் கட்டணங்களில் பெரிய வித்தியாசம் இருக்கும்.

தீபாவளிக்கு தங்கம் வாங்குறீங்களா? கடைக்காரர் போடும் பில் சரியா? இந்த ஒரு ஃபார்முலாவை வச்சு கண்டுபிடிக்கலாம்!

ஒரு கடையில் கிராம் அடிப்படையில் குறிப்பிட்ட தொகையை மேக்கிங் சார்ஜ் மற்றும் சேதாரக் கட்டணங்களுக்காக நிர்ணயித்திருப்பார்கள். ஒரு சில கடைகளில் தங்கத்தின் மொத்த மதிப்பில் குறிப்பிட்ட சதவீதம் மேக்கிங் சார்ஜ்ஜாக விதிக்கப்பட்டிருக்கும். இதனால் தான் ஒரே நகைக்கு வெவ்வேறு கடைகளில் வெவ்வேறு மாதிரியான விலை நிர்ணயிக்கப்பட்டிருக்கும்.

தங்க நகை விலை கணக்கீடு: தங்க நகைகள் 22 கேரட், 24 கேரட், 18 கேரட் மற்றும் 9 கேரட் போன்ற பல்வேறு தூய்மை நிலைகளில் கிடைக்கிறது. 24 கேரட் தங்கம் தான் இருப்பதிலேயே தூய தங்கம். இதில் அவ்வளவாக நகைகள் செய்ய முடியாது. மிகவும் மென்மையாக இருப்பதால் கோல்ட் பார் மற்றும் கோல்ட் காயின்களாக வாங்கலாம்.

Also Read

22 கேரட் தங்கத்தில் தான் நகைகள் செய்யப்படும். இதில் 91.6% தூய தங்கம் இருக்கும். மீதமுள்ள சதவீதத்திற்கு காப்பர் மற்றும் பிற உலோகங்கள் கலந்து நகைகளாக செய்வார்கள். நகைக்கடைக்காரர் உங்களிடம் போடும் பில் சரிதானா? என்பதை நீங்கள் கீழ்க்காணும் ஃபார்முலாவை வைத்து தெரிந்து கொள்ளலாம்.

தங்க விலை = [(நிகர எடை × அன்றைய விலை × தங்கத்தின் தூய்மை) + மேக்கிங் சார்ஜ் + வேஸ்டேஜ் ] × 1.03 + ஹால்மார்க்கிங் கட்டணம்

இதில் நிகர எடை என்பது நகையில் இருக்கும் கற்கள், முத்துக்கள், மாணிக்கங்கள் மற்றும் பிற கற்களை கழித்த பிறகு இருக்கும் தங்கத்தின் எடை. தூய்மை என்றால் 22 கேரட் தங்கத்திற்கு 0.916, 18 கேரட் தங்கத்திற்கு 0.75. செய்கூலி மற்றும் சேதாரம் என்பது ஒவ்வொரு நகைகளையும் பொருத்து மாறுபடும். செய்கூலி வடிவமைப்பை பொறுத்தது. சேதாரம் என்பது நகை செய்யும் போது வீணாகும் தங்கத்திற்கான இழப்பீடு. இதில் 1.03 என்பது 3 சதவீத ஜிஎஸ்டி வரியைக் குறிக்கிறது. இதனுடன் ஹால்மார்க் கட்டணமும் சேர்க்கப்படும்.

உதாரணமாக நீங்கள் 11 கிராம் மதிப்புள்ள தங்கச் சங்கலியை வாங்குகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அன்றைய தினம் தங்கம் விலை கிராம் ஒன்று 13,000 ரூபாயாக இருக்கிறது.

தங்கத்தின் நிகர மதிப்பு = 11 X ரூ. 13,000 = ரூ. 1,43,000. செய்கூலி ரூ.10,000 என்று வைத்துக் கொள்வோம். வரியை சேர்க்காமல் கூட்டினால் = ரூ. 1,43,000 + ரூ.10,000 = ரூ. 1,53,000. இதோடு 3 சதவீத ஜிஎஸ்டி வரியை சேர்த்தால் = ரூ. 1,53,000 X 1.03 = ரூ. 1,57,590.

இதோடு ஹால்மார்கிங் கட்டணத்தையும் சேர்த்துக் கொள்வார்கள். இது ஒரு எடுத்துக்காட்டுக்காக மட்டுமே. உண்மையான விலை என்பது நீங்கள் வாங்கும் டிசைனுக்கு ஏற்ப மாறுபடலாம். எனவே பண்டிகை காலங்களில் நகை வாங்கும் போது செய்கூலி, சேதாரம், ஜிஎஸ்டி, பழைய நகை எவ்வளவு இருக்கிறது? புதிய நகை எவ்வளவு எடை? எக்ஸ்சேஞ்ச் பெனிஃபிட் இருக்கிறதா? பை பேக் விதிமுறைகள் என்னென்ன? என்ற அனைத்தையும் பார்க்க வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+