சீனாவின் ரியல் எஸ்டேட் துறை ஏற்கனவே மோசமான நிலையில் இருக்கும் போது, அந்நாட்டின் ரியல் எஸ்டேட் நிறுவனமான சீனா பார்சூன் லேண்ட் டெவலெப்மென்ட் நிறுவனம் முதலீடு செய்வதற்காகக் கொடுக்கப்பட்ட 313 மில்லியன் டாலரையும், பணத்தைப் பெற்ற நிறுவனத்தையும் காணோம் என அறிவித்துள்ளது.
இதுகிட்டதட்ட வடிவேலுவின் கிணத்தைக் காணாம் என்ற கதையாக உள்ளது.
சீனா பார்சூன் லேண்ட்
சீனாவில் முக்கியமான ரியல் எஸ்டேட் நிறுவனமாக விளங்கும் சீனா பார்சூன் லேண்ட் டெவலெப்மென்ட் நிறுவனம் முதலீடு செய்வதற்காகச் சீனா கிரியேட் கேப்பிடல் லிமிடெட் என்னும் நிறுவனத்தை மனி மேனேஜர் ஆக நியமித்துச் சுமார் 313 மில்லியன் டாலர் தொகையை 2018ல் கொடுத்தது.
சீனா கிரியேட் கேப்பிடல்
இந்த முதலீட்டு தொகைக்கு 2022 வரையில் 7-10 சதவீத வட்டி வருமானத்தைக் கொடுக்க வேண்டும் என்பது இரு நிறுவனங்கள் மத்தியில் செய்யப்பட்ட வர்த்தக ஒப்பந்தம், ஆனால் தற்போது சீனா கிரியேட் கேப்பிடல் நிறுவனத்துடனான தொடர்பை இழந்துள்ளதாகவும், கண்டுபிடிக்க முடியவில்லை என்றும் பார்சூன் லேண்ட் ஷாங்காங் பங்குச்சந்தையில் தெரிவித்துள்ளது.
பிரிட்டிஷ் வெர்ஜின் தீவு
சீனா கிரியேட் கேப்பிடல் நிறுவன வரி சலுகைக்கும் கருப்பு பணத்திற்கும் பெயர்போன பிரிட்டிஷ் வெர்ஜின் தீவுகளில் பதிவு செய்யப்பட்ட நிறுவனமாகும், ஆனால் தனது தலைமையகத்தைப் பெய்ஜிங் நகரத்தில் வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
313 மில்லியன் டாலர்
பார்சூன் லேண்டு நிறுவனம் ஏற்கனவே கடனில் இருக்கும் நிலையில் இப்புதிய 313 மில்லியன் டாலர் தொகை இந்நிறுவனத்தின் நிதி நிலை மட்டும் அல்லாமல் எதிர்காலத்தையும் கேள்விக்குறியாகியுள்ளது. பொதுவாக ஒரு நிறுவனத்தில் முதலீடு செய்வதற்காகப் பணத்தைக் கொடுத்தால் தொடர்ந்து கண்காணிப்பில் இருக்கும், ஆனால் இங்கு நிறுவனத்தையே காணோம் எனக் கூறப்படுகிறது.
ரியல் எஸ்டேட் நிறுவனங்கள்
சீனாவில் அதீத கடனில் சிக்கித் தவிக்கும் ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இந்தப் பட்டியலில் சீனா பார்சூன் லேண்ட் டெவலெப்மென்ட் நிறுவனமும் ஒன்று. மார்ச் மாதம் தான் 530 மில்லியன் டாலர் மதிப்பிலான பணத்தைப் பத்திர முதலீட்டாளர்களுக்குக் கொடுக்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டது.
Wingskengo நிறுவனம்
சீனா பார்சூன் லேண்ட் டெவலெப்மென்ட் நிறுவனம் தற்போது ஷாங்காய் பங்குச்சந்தையில் சமர்ப்பித்துள்ள அறிக்கையில் 2018ஆம் ஆண்டு Wingskengo என்னும் நிறுவனத்துடன் வெல்த் மேனேஜ்மென்ட் சேவைகளுக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டது. இந்த நிறுவனத்தின் பரிந்துரை பெயரில் தான் சீனா கிரியேட் கேப்பிடல் நிறுவனத்தில் 313 மில்லியன் டாலர் தொகை முதலீடு செய்தோம் எனத் தெரிவித்துள்ளது.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

கத்தார், பஹ்ரைன், UAE, குவைத்தில் குண்டு மழை.. ஈரான் வைத்த டார்கெட்.. அமெரிக்காவுக்கு நெருக்கடி..!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!

தூங்கிட்டிருந்த மிருகத்த தட்டி எழுப்பிட்டாங்க!! நாளை தங்கம், வெள்ளி சந்தை பத்தி எரிய போகுது!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!



Click it and Unblock the Notifications