சீனாவை சேர்ந்த எலக்ட்ரிக் வாகன நிறுவனமான பிஒய்டி (BYD) தனது புதிய எலக்ட்ரிக் வாகனத்தை இந்தியாவில் இ-மேக்ஸ் 7 (EMAX7)என்ற பெயரில் அறிமுகம் செய்ய இருக்கிறது. சீனாவை சேர்ந்த எலக்ட்ரிக் கார் உற்பத்தி நிறுவனம் Build Your Dreams எனப்படும் பிஒய்டி (BYD), சர்வதேச அளவில் அதிக எண்ணிக்கையிலான எலக்ட்ரிக் கார்களை விற்பனை செய்யும் நிறுவனமாக உள்ளது.
இந்த நிறுவனம் இந்திய சந்தையில் தங்களுடைய அடுத்த எலக்ட்ரிக் காரை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. இந்த புதிய மாடலின் பெயர் இ மேக்ஸ் 7 என்றும் இ 6 மாடலுக்கு அடுத்த அப்டேட் இ மேக்ஸ் 7 ஆக இருக்கும் என்றும் தெரிகிறது.

இந்த இ மேக்ஸ் 7 ஏற்கனவே இந்தோனேஷியாவில் நடைபெற்ற வாகன கண்காட்சியில் பிஒய்டி நிறுவனத்தால் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. தற்போது இது இந்தியாவில் விற்பனைக்கு வர இருப்பதாக பிஓய்டி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த காரின் வடிவமைப்பு மற்றும் வெளிப்புறத் தோற்றம் தொடர்பான பல்வேறு புகைப்படங்கள் இணையதளங்களில் வெளியாகி உள்ளன. இருந்தாலும் இந்த வாகனத்தில் இருக்கும் பிற அம்சங்கள் குறித்த தகவல்களை நிறுவனம் ரகசியமாகவே வைத்திருக்கிறது.
LED headlight செட் டப்புடன் இ மேக்ஸ் 7 சந்தைக்கு விற்பனைக்கு வரும் என தெரிவிக்கப்படுகிறது. குறிப்பாக ஒருங்கிணைக்கப்பட்ட DRLS, பெரிய bonnet கொண்டு அதில் நிறுவனத்தின் லோகோ இடம் பெற்று இருக்கும் என்றும் காரின் பின் பகுதி வடிவத்தில் பெரிய மாற்றங்கள் கொண்டு வந்திருப்பதாகவும் நிறுவனம் தெரிவிக்கிறது. பார்ப்பதற்கு ஸ்டைலாக இருக்கும் வகையில் வடிவம் மாற்றப்பட்டுள்ளதாக தெரிகிறது.
ஆட்டோமேட்டிங் கிளைமேட் கன்ட்ரோல், வையர்லெஸ் சார்ஜிங் பேட், multiple charging sockets மற்றும் மேம்படுத்த infotainment screen உள்ளிட்ட வசதிகள் இருப்பதாக பிஒய்டி நிறுவனம் கூறுகிறது. குறிப்பாக இந்த காரில் panoramic sunroof வசதி இருக்கும் என்றும் 360 டிகிரி கேமரா வசதி இருக்கும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
சர்வதேச அளவில் இந்த வாகனத்தின் பேட்டரி 55.4 kWh திறன் மற்றும் 71.8 kWh திறன்களில் கிடைக்கிறது. இதில் 55.4 kWh திறன் பேட்டரி கொண்ட வாகனம் 420 கிலோமீட்டர் தொலைவிற்கும், 71.8 kWh திறன் பேட்டரி கொண்ட வாகனம் 530 கிலோ மீட்டர் தொலைவிற்கும் பயணம் செய்ய முடியும் என தெரிகிறது.
Story written by: Devika


Click it and Unblock the Notifications