அமெரிக்கா, இஸ்ரேல் தேர்தல்களில் அந்நாட்டுத் தலைவர்கள் மண்ணை கவ்விய நிலையில், ஈரான் இன்று முக்கிய அறிவிப்பை வெளியிட்டு உலக நாடுகளுக்குத் தீபாவளி பரிசு கொடுத்துள்ளது என்றால் மிகையில்லை.
உலக நாடுகள் கச்சா எண்ணெய், எரிபொருள் தட்டுப்பாடு காரணமாகப் பாதிக்கப்பட்டு இருக்கும் வேளையில் ஹார்முஸ் வழித்தடம் வாயிலாக இந்தியா, சீனா, ஈராக், கத்தார் கப்பல்கள் செல்வதற்கான தடையை ஈரான் நீக்கியுள்ளது. இதன் மூலம் ஈராக் மற்றும் கத்தார் நாட்டின் கச்சா எண்ணெய் உலக நாடுகளுக்கு எவ்விதமான தடையுமின்றி சப்ளை செய்யப்படும்.

இதேவேளையில் வளைகுடாவில் முக்கிய நாடாக இருக்கும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இனியும் ஹார்முஸ் வழித்தடத்தை நம்பியிருக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கும் காரணத்தால் 3வது பைப்லைன் திட்டத்தைக் கையில் எடுத்துள்ளது.
இப்புதிய பைப்லைன் மூலம் ஈரான், ஹார்முஸ் வழித்தடத்தைச் சாராமல் உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யக் கூடியது என்பதால் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தடையற்ற ஏற்றுமதி வாய்ப்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஈரான் போருக்குப் பின்பு வளைகுடா நாடுகளுக்கு மாற்று வழித்தடம் என்பது அவசியமாகியிருக்கும் காரணத்தால் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஈரான் அச்சுறுத்தல் இல்லாத வழித்தடத்தை உருவாக்கத் துவங்கியுள்ளது.
ஒமான் வளைகுடா பாதையில் இருக்கும் Fujairah துறைமுகத்தில் ஏற்கனவே 2 பைப்லைன் திட்டத்தைக் கொண்டு இருக்கும் UAE, தற்போது 3வது பைப்லைன் திட்டத்தைக் கையில் எடுத்துள்ளதாக ப்ளூம்பெர்க் தெரிவித்துள்ளது.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ்-ன் முக்கிய எண்ணெய் வயல்களில் இருந்து நேரடியாக Fujairah துறைமுகத்தை இணைக்கும் ஒரு பைப்லைன் ஏற்கனவே செயல்பாட்டில் உள்ளது, 2வது பைப்லைன் 2027ல் பயன்பாட்டுக்கு வர உள்ளது. இந்த நிலையில் 3வது பைப்லைன் திட்டத்தை அபுதாபி நேஷ்னல் ஆயில் கோ கையில் எடுத்துள்ளது.
மேலும் இந்த 3வது பைப்லைன்-ஐ சொந்த பயன்பாட்டுக்கு மட்டும் அல்லாமல் 3ஆம் தரப்பினர் பயன்பாட்டுக்கும் அனுமதிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. Fujairah துறைமுகத்தில் இருந்து தற்போது தினமும் 15 - 18 லட்சம் பேரல் கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யப்படும் வேளையில் 2வது பைப்லைன் பயன்பாட்டுக்கு வந்தால் ஏற்றுமதி அளவு இரட்டிப்பாகும் எனக் கணிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் 3வது பைப்லைன் வந்தால் மொத்தமாக ஹார்முஸ்-ஐ கைகழுவ முடிவு செய்துள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதேவேளையில் 3வது பைப்லைன் இன்னும் இறுதி செய்யப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளது.
கடந்த 8 -9 மாதங்களாக ஹார்முஸ் வழித்தடம் முடங்கிய நிலையில் சவுதி அரேபியாவின் கிழக்கு மேற்கு பைப்லைன், ஐக்கிய அரபு எமிரேட்ஸ்-ன் Fujairah பைப்லைன் வாயிலாகத் தான் பெருமளவிலான எண்ணெய் சப்ளை வந்தது. இந்த நிலையில் பெர்சிஷன் வளைகுடா மற்றும் ஹார்முஸ் வழித்தடத்தைத் தாண்டி மாற்று வழிகள் மிகவும் முக்கியமானதாக மாறியுள்ளது.
அந்த வகையில் ஃபுஜைரா துறைமுகம் அமைந்திருக்கும் இடம் மிகவும் பாதுகாப்பானது. UAE நாட்டின் கிழக்குக் கடற்கரையில், ஓமன் வளைகுடா (Gulf of Oman) பகுதியில் அமைந்துள்ளது. ஹார்முஸ் வழித்தடத்தில் இருந்து கிட்டத்தட்ட 130 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. சுருக்குமாகச் சொல்ல வேண்டுமாயின் UAE-யிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்க வேண்டுமாயின் எண்ணெய் கப்பல் ஹார்முஸ் வழித்தடத்திற்கு வர வேண்டிய அவசியம் இல்லை.


Click it and Unblock the Notifications