நாட்டின் பிரபலமான கல்வி தொழில்நுட்ப நிறுவனம் பைஜூஸ். 2015ல் இந்நிறுவனத்தை முன்னாள் ஆசிரியரான பைஜூ ரவீந்திரன் தொடங்கினார். நிறுவனம் தொடங்கிய 4 ஆண்டுகளில் அதாவது 2019ல் இந்நிறுவனம் யூனிகார்ன் அந்தஸ்தை எட்டியது. நிறுவனத்தின் மதிப்பு 100 கோடி டாலரை தாண்டியது. அடுத்த 3 ஆண்டுகளில் 2022ம் ஆண்டில் இந்நிறுவனத்தின் மதிப்பு 2,200 கோடி டாலரை எட்டியது. இந்நிறுவனத்தின் அசுர வளர்ச்சி அனைவரையும் வியக்க வைத்தது.
ஓவர் ஸ்பீடு
ஓவர் ஸ்பீடு உடம்புக்கு ஆகாது என்று சொல்வது போல், இந்நிறுவனத்தின் அதிவேக வளர்ச்சியே வீழ்ச்சிக்கு காரணமாக அமைந்தது. கடன் உள்ளிட்ட நிதி நெருக்கடிகளால் பைஜூஸ் திணற தொடங்கியது. தொழில்நுட்பம் சார்ந்த நிறுவனங்களில் முதலீடு செய்யும் நிறுவனமான ப்ரோசஸ், பைஜூஸ் நிறுவனத்தின் மதிப்பீட்டை 75 சதவீதம் குறைத்தது. தற்போது இந்நிறுவனம் கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது. இந்த சூழ்நிலையில், நாங்கள் வேகமாக வளரும் போது சில வணிக தவறுகளை செய்தோம் என்ற உண்மையை பைஜூ ரவீந்திரன் ஒப்புக்கொண்டார்.

பேட்டி ஒன்றில் பைஜூ ரவீந்திரம் பேசுகையில், நாங்கள் கொஞ்சம் சீக்கிரமாக, மிக வேகமாக வளர்ந்து கொண்டிருந்தோம். நாங்கள் இந்தியாவிலிருந்து 21 நாடுகளுக்கு சென்றோம். ஆனால் 2019 முதல் 2021 வரையிலான கோவிட் காலத்தில், எங்களிடம் 160 முதலீட்டாளர்கள், உலகத் தரம் வாய்ந்த முதலீட்டாளர்கள் மற்றும் பங்கு முதலீட்டாளர்கள் இருந்தனர். அவர்கள் அனைவரும் வளர்ச்சி காணுங்கள், வளர்ச்சி காணுங்கள் மற்றும் குழந்தைகள் கற்றுக் கொள்ளும் முறையை மாற்றுங்கள் என்று கட்டளையிட்டனர்.
வட்டி
அந்த நேரத்தில் நாங்கள் வளர்ச்சிக்காக பணம் திரட்டி கொண்டிருந்தோம். ஆனால் அந்த நேரத்தில் உலகம் மாறியது, வட்டி விகிதங்கள் உயர தொடங்கியது, பெடரல் வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தியது, ரஷ்யா-உக்ரைன் போர் பெரிதாக வெடித்தது, திடீரென பணப்புழக்கம் வறண்டு போனது. 70 கோடி டாலர் உறுதியான மூலதனம், கையொப்பமிடப்பட்ட உறுதியான மூலதனம் திரும்பவில்லை.
ஆனால் இந்த பணம் அனைத்தும் வரும் என்று கருதி, இந்த கையகப்படுத்துதல்கள் மற்றும் வளர்ச்சியை நாங்கள் திட்டமிட்டுக் கொண்டிருந்தோம். உண்மையில் இவை கையொப்பமிடப்பட்ட ஆவணங்கள். வெளிப்புற பொருளாதார காரணங்களால் பின்வாங்கிய முதலீட்டாளர்கள் மீது நாங்கள் வழக்கு தொடரவில்லை. அன்றிலிருந்து, 2022ம் ஆண்டின் முற்பகுதி முதல் கிட்டத்தட்ட 3 ஆண்டுகளாக பணப்புழக்கத்திற்காக போராடி வருகிறோம்.
பணப்புழக்கம்
ஆனால் அதிர்ஷ்டவசமாக, எங்களிடம் போதுமான பணப்புழக்கம் இருந்தது, அதை நாங்கள் சம்பாதித்தோம். மேலும் அந்த பணத்தை எல்லாம் திரும்ப செலுத்துவதில் எனக்கு எந்த வருத்தமும் இல்லை என்று தெரிவித்தார்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications